கலக்கல் வட்டியில் SBI Gold Loan! யார் எல்லாம் வாங்கலாம்? கவனிக்க வேண்டிய விவரங்கள் என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, SBI Gold Loan என்கிற பெயரில் தங்க கடன்களைக் கொடுக்கிறார்கள்.

இந்த தங்க கடன் திட்டத்தை யார் எல்லாம் பயன்படுத்திக் கொள்ள முடியும்? என்ன மாதிரியான டாக்குமெண்டுகள் தேவை? எஸ்பிஐ இந்த தங்க கடன் திட்டத்துக்கு என்ன வட்டி வசூலிக்கிறார்கள்?

கடனைத் திருப்பிச் செலுத்த எத்தனை மாத காலம் அவகாசம் கொடுக்கிறார்கள்? நாம் என்ன கட்டணங்களைச் செலுத்த வேண்டும்? என எல்லா கேள்விகளுக்கும், எஸ்பிஐ வலை தளத்தில் சொல்லி இருக்கும் விடையைக் காண்போம். முதலில் யார் வாங்கலாம் என்பதில் இருந்து தொடங்குவோம்.

தங்க மதிப்புக்கு கடன்
 

தங்க மதிப்புக்கு கடன்

பொதுவாக தங்கத்தின் மதிப்புக்கு 75 % தான் கடன் தருவார்கள். அதாவது 1 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கத்தை நீங்கள் வங்கியில் அடகு வைத்தால், 75,000 ரூபாய் தான் கடன் கிடைக்கும். ஆனால் 31 மார்ச் 2021-வரை, தங்கத்தின் மொத்த மதிப்பில் 90 சதவிகிதம் அளவுக்கு கடன் கொடுக்க, கடந்த ஆகஸ்ட் 2020-ல் ஆர்பிஐ அனுமதித்து இருக்கிறது. எனவே 31 மார்ச் 2021-க்குள் SBI Gold Loan வாங்கினால் கூடுதலாக கடன் தொகை கிடைக்கலாம்.

எவ்வளவு வாங்கலாம்?

எவ்வளவு வாங்கலாம்?

SBI Gold Loan திட்டத்தின் கீழ், தங்கம், தங்கம் ஆபரணங்களை அடகு வைத்து, குறைந்தபட்சமாக 20,000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கலாம். அடகு வைக்கும் தங்கத்தின் தரம் மற்றும் அளவு சரி பார்க்கப்படும். தங்க மதிப்பீட்டாளருக்கான (Gold Appraiser) கட்டணத்தை, கடன் வாங்கும் வாடிக்கையாளர்கள் தான் செலுத்த வேண்டும் என்கிறது எஸ்பிஐ வலைதளம்.

எவ்வளவு வட்டி

எவ்வளவு வட்டி

SBI Gold Loan திட்டத்தின் கீழ் கடன் வாங்குபவர்களுக்கு ஆண்டுக்கு 7.5 % வட்டி வசூலிக்கிறது எஸ்பிஐ. இது 1 வருட எம் சி எல் ஆர் வட்டி 7.0% + ஸ்பிரெட் 0.5% = 7.5% எனக் கணக்கிடுகிறார்கள். மற்ற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது, SBI Gold Loan திட்டத்துக்கு வசூலிக்கப்படும் வட்டி, மிகவும் குறைவாகத் தான் இருக்கிறது.

பிராசசிங் கட்டணம்
 

பிராசசிங் கட்டணம்

SBI Gold Loan திட்டத்தின் கீழ் கடன் வாங்கும் தொகையில் 0.25 % + சரக்கு மற்றும் சேவை வரி வசூலிப்பார்களாம். அல்லது குறைந்தபட்சமாக 250 ரூபாய் + சரக்கு மற்றும் சேவை வரி வசூலிப்பார்களாம்.

SBI Gold Loan-க்கு யோனோ செயலி வழியாக விண்ணப்பித்தால், பிராசசிங் கட்டணம் கிடையாது என்கிறது எஸ்பிஐ வலைதளம்.

திருப்பிச் செலுத்தும் காலம்

திருப்பிச் செலுத்தும் காலம்

SBI Gold Loan திட்டத்தின் கீழ் வாங்கும் கடனுக்கான அசல் மற்றும் வட்டியை, இ எம் ஐ தவணைகளாக, அதிகபட்சமாக 36 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும் என்கிறது எஸ்பிஐ வலைதளம். எனவே கடனை வாங்கும் போது, இதையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு கடன் வாங்கவும். கூடுதலாக கடன் வாங்கிவிட்டு குறைந்த காலத்துக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும் என்கிற நெருக்கடிக்கு ஆளாகிவிட வேண்டாம்.

தேவையான டாக்குமெண்ட்கள்

தேவையான டாக்குமெண்ட்கள்

SBI Gold Loan திட்டத்தில் கடன் வாங்க,

1. தங்க கடன் விண்ணப்பம்,

2. இரண்டு கலர் போட்டோக்கள்,

3. முகவரி ஆதாரச் சான்று,

4. படிக்காதவர்கள் என்றால் Witness Letter

5. DP note and DP Note Take Delivery Letter.

6. Gold Ornaments Take Delivery Letter.

7. Arrangement Letter.

போன்றவைகள் தேவை என்கிறது எஸ்பிஐ வலைதளம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI Gold Loan: How to get State Bank of India gold loan which is offering good interest rates

SBI Gold Loan: What are the procedures to get SBI gold loan? What is the interest rate SBI charging for SBI gold loan? What are the required documents for SBI Gold Loan?
Story first published: Tuesday, September 8, 2020, 11:55 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?