லிக்விட் ஃபண்ட்கள் என்றால் என்ன? யாருக்கு ஏற்றது? எப்படி முதலீடு செய்வது?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லிக்விட் பண்டுகள் பொதுவாக குறுகிய கால செக்யூரிட்டிகளில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்டுகளாகும். அதாவது அரசாங்க செக்யூரிட்டிகளில் முதலீடு செய்யப்படும்.

குறிப்பாக அரசாங்க பத்திரங்கள், டிரசரி பில்கள், கமர்ஷியல் பேப்பர்கள் என பலவற்றிலும் முதலீடு செய்யப்படுகிறது. லிக்விட் ஃபண்டுகளை பொறுத்தவரை லாக் பீரியடு என்பது கிடையாது. ஆக நீங்கள் உங்கள் பணத்தினை 24 மணி நேரத்துக்குள் திரும்ப பெற முடியும். அதோடு இந்த ஃபண்டுகளுக்கு நுழைவு மற்றும் வெளியேறும் கட்டணம் என்பது கிடையாது.

லிக்விட் ஃபண்ட்கள் என்றால் என்ன? யாருக்கு ஏற்றது? எப்படி முதலீடு செய்வது?

 

சரி இந்த ஃபண்டு யாருக்கு சரியான முதலீடு? குறுகிய காலத்தில் முதலீடு செய்து லாபம் பார்க்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த திட்டம் தான். இதில் ஆரம்பத்தில் 5000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டி இருக்கும். அதன் பிறகு மாத மாதம் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதலீடு செய்து கொள்ளலாம்.

இவை வங்கிகள் செய்யப்படும் வைப்பு நிதிகளை போல லாபம் தரக்கூடியவை. அதாவது இதனால் முதலீட்டுக்கு எந்த பங்கமும் வந்திடாது. அதேபோல வருமானமும் ஓரளவு கணிசமாக கிடைக்கும். இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமானால் இந்த முதலீடுகளை நீங்கள் எவ்வளவு நாள் வைத்து இருக்கிறீர்களோ, அந்தளவுக்கு வருமானம் கிடைக்கும். பொதுவாக வருடத்துக்கு சுமார் 7 - 9% வரை கிடைக்கும்.

இந்த லிக்விட் ஃபண்டினை மூன்றாண்டுகளுக்குள் எடுத்தால் நீண்டகால மூலதன ஆதாய வரியினை கட்ட வேண்டி இருக்கும். அதோடு அவரவர் வருமான வரம்புக்கு ஏற்ப வரி கட்ட வேண்டி இருக்கும். இதே முதலீடு செய்து ஓராண்டுகளுக்குள் எடுத்தால், குறுகிய கால மூலதன வரி செலுத்த வேண்டியிருக்கும்.

சரி இதில் யாரெல்லாம் முதலீடு செய்யலாம்? 18 வயதிற்கு மேற்பட்ட இந்தியர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் இதில் முதலீடு செய்யலாம். மைனர்கள் அவரவர் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலம் முதலீடு செய்யலாம். இதற்காக அடையாள அட்டை மற்றும் முகவரி சான்று தேவை. அதோடு உங்களது வங்கி காசோலையும் தேவைப்படும்.

பொதுவாக லிக்விட் ஃபண்டுகள் என்றால் சிக்கலானவை என்று நிபுணர்கள் சொல்வதுண்டு. இதனால் உங்களுக்கு இதனை பற்றிய தெளிவான எண்ணம் இருந்தால் மட்டுமே செய்யலாம். இல்லையேல் முழுமையாக தெரிந்து கொண்டு பின்பு அதனை பற்றி யோசிக்கலாம். மொத்தத்தில் எந்த முதலீடாக இருந்தாலும், நீங்கள் பத்து பேரிடம் ஆலோசனை பெற்றாலும், முதலீடு செய்யும் இறுதி முடிவு உங்களுடையதாக இருக்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is a liquid fund? How to invest?

What is a liquid fund? How to invest?other details are here
Story first published: Saturday, September 19, 2020, 0:02 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X