ரயில் பங்கினை வாங்க பரிந்துரை செய்யும் நிபுணர்கள்.. இலக்கு எவ்வளவு தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரயில் விகாஸ் நிகாம் (RVNL) நிறுவனம் முதலீட்டாளர்கள் மற்றும் நிபுணர்களுடன் வணிகம் குறித்து அப்டேட்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்த கூட்டத்தில் பலவீனமான ஆர்டர் குறித்து மிகப்பெரிய கவலையாக எழுப்பபட்டது.

 

எனினும் இந்த நிறுவனம் 210 பில்லியன் ரூபாய் மதிப்பிலான ஆர்டர்களை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இது தவிர 60 பில்லியன் ரூபாய் டெண்டர்களில் , இன்று வரை 20 பில்லியன் ரூபாய் ஆர்டர்களை பெற்றுள்ளது.

வருவாய் வளர்ச்சி

வருவாய் வளர்ச்சி

FY23EL 150 பில்லியன் ரூபாய் மதிப்பிலான ஆர்டர்கள் வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 2022ல் வருவாய் வலுவாக இருந்தது. இது நடப்பு ஆண்டில் கடந்த ஆண்டினை காட்டிலும் 26% வளர்ச்சி அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இதன் பங்கு விலையிலும் இதன் எதிரொலி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலக்கு விலை

இலக்கு விலை

இதற்கிடையில் தரகு நிறுவனம் ரயில் விகாஸ் நிகாம் பங்கினை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. இதன் இலக்கு விலையையும் 42 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இது தற்போதைய பங்கு விலையில் இருந்து சுமார் 45% உயர்வைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்பந்தங்கள் ஏராளம்
 

ஒப்பந்தங்கள் ஏராளம்

ரயில் விகாஸ் நிகாம், டாடா, மகாநதி, கோல்ஃபீல்டிஸ் லிமிடெட், ஜேகே செம் போன்ற பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்பட ஏராளமான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இருந்து 150 பில்லியன் ரூபாய் ஆர்டர் வரவை எதிர்பார்க்கிறது.

சிஏஜிஆர் விகிதம்

சிஏஜிஆர் விகிதம்

ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம் தனது வளர்ச்சியில் ரயில்வே அல்லாத துறையில் பெரியளவில் எதிர்பார்க்கிறது, ஆக அதன் ஆர்டர் புத்தகத்தில் ரயில்வேயின் பங்கு குறையலாம் என எதிர்பார்க்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ரயில் விகாஸ் நிகாமின் சி ஏ ஜி ஆரின் விகிதம் 27% ஆக வளர்ச்சி கண்டு இருந்தது. மேலும் அதன் மார்ஜின் வரம்பினை 5 - 6% பராமரிக்கிறது.

சரிவில் பங்கு விலை

சரிவில் பங்கு விலை

இந்த பொதுத்துறை பங்கானது நடப்பு ஆண்டில் இதுவரையில் 15% சரிவினைக் கண்டுள்ளது. இதே ஒரு வருட காலத்தில் இந்த பங்கின் விலை சுமார் 8% சரிவினைக் கண்டுள்ளது. ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் என்பது ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இது இந்திய ரயில்வேயில் உரிமையின் கீழ் ரயில் உள்கட்டமைப்பை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது.

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Analysts expects this railway stock may rally over 45%

The brokerage firm has suggested that Rail Vikas Nigam buy the stake. It has also set a target price of 42 rupees.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X