IT, FMCG பங்குகளுக்கு நல்ல எதிர்காலம் உண்டாம்.. நிபுணர்கள் கணிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய காலகட்டத்தில் முதலீடு என்றாலே நம்மவர்களூக்கு டக்கென ஞாபகம் வருவது வங்கி டெபாசிட் தான். ஆனால் அதையும் தாண்டி இன்று பல முதலீட்டு திட்டங்கள் உள்ளது.

அதில் ஒன்று தான் பங்கு சந்தை முதலீடு. ஆனால் பங்கு சந்தை என்றாலே அச்சச்சோ? பங்கு சந்தையா? என்பவர்கள் தான் அதிகம். ஆனால் இன்றளவிலும் சிலர் அதில் சம்பாதித்து கொண்டு தானே இருக்கிறார்கள்.

அதிலும் தற்போது கொரோனாவின் தாக்கத்தினால் பல நிறுவனங்களும் செயல்பட முடியாமல் முடங்கி போயுள்ளன. இந்த நிலையில் அவற்றின் பங்குகள் மட்டும் எப்படி அதிகரிக்கும் என்ற கேள்விகள் எழலாம். இது நீண்ட கால முதலீட்டிற்கான ஒரு சிறந்த ஆப்சன் தான்.

இந்த துறைகள் நன்றாக உள்ளது

இந்த துறைகள் நன்றாக உள்ளது

இது குறித்து மணி கன்ட்ரோல் தளத்தில் வெளியான அறிக்கை ஒன்றினை தொகுத்து வழங்கப்பட்டது தான் இந்த கட்டுரை. அதன் படி அடுத்த மூன்று முதல் நான்கு வாரங்களில் ஐடி மற்றும் FMCG தொடர்பான பங்குகள் ஏற்றம் காணலாம் என்று கூறப்பட்டுள்ளது. உண்மையில் கொரோனா வைரஸ் ஆரம்பித்ததில் இருந்தே, லாக்டவுனில் தளர்வுகள் இல்லாத போதும் சரி, தளர்வுகள் இல்லை என்றாலும் கூட ஓரளவுக்கேனும் செயல்பட்டு வரும் துறைகள் இவை தான்.

கொரோனா காலத்திலும் இயக்கம்

கொரோனா காலத்திலும் இயக்கம்

சொல்லப்போனால் இந்த கொரோனா காலங்களிலும் சரிவர இயங்கி கொண்டு இருப்பவர்களில் இவர்களும் ஒருவர். ஆக இந்த துறை சார்ந்த பங்குகள் ஏற்றம் கண்டாலும் அதனை மறுபதற்கில்லை. இதுமட்டும் அல்ல ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸின் மூத்த நிபுணர்கள் சில பங்குகளையும் பரிந்துரைத்துள்ளனர்.

கோல் இந்தியா பங்கு

கோல் இந்தியா பங்கு

அதில் முதலாவது கோல் இந்தியா. இது தினசரி மற்றும் வார சார்டில் ஏறுமுகமாக உள்ளது. மேலும் 123 - 127 என்ற விகிதமானது நல்ல சப்போர்ட் விகிதமாகவும் உள்ளது. ஆக 123 ஸ்டாப் லாஸ் ஆக வைத்து வங்கலாம் என்றும் பரிந்துரைத்துள்ளனர். இதற்கு டார்கெட் ஆக 149 ரூபாயும், (மார்கெட் விலை 133.75) கொடுத்துள்ளனர்.

NIIT Technologies பங்கு

NIIT Technologies பங்கு

இதே NIIT Technologies பங்கினை பரிந்துரைத்துள்ளனர். இதில் சில டெக்னிக்கல் பேட்டர்ன்கள் இருந்தால் ஏறும் என்பது போல் இருப்பதாகவும் கூறியுள்ளனர். இதன் தற்போதைய விலையானது 1420.55 ரூபாயாகும். இது கடந்த மே மாத உச்ச விலையில் சற்று இடையூறுகளை காணலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மே மாத உச்சம் 1573.45 ரூபாயாகும். 1314 ரூபாயினை ஸ்டாப்லாஸ் ஆக வைத்து இந்த பங்கினை வாங்கலாம் எனவும் பரிந்துரை செய்துள்ளனர் நிபுணர்கள். இதன் டார்கெட்டாக 1,570 ரூபாயினையும் கொடுத்துள்ளனர்.

டாடா மோட்டார்ஸ் பங்கு

டாடா மோட்டார்ஸ் பங்கு

இதற்கு அடுத்தாற்போல் டாடா மோட்டார்ஸ் பங்கினை பரிந்துரை செய்துள்ளனர். இதன் தற்போதைய விலையானது 103.65 ரூபாயாகும்.
எனினும் கடந்த மாதத்தில் அதன் மிக உயர்ந்த 119 ரூபாய் மட்டத்திலிருந்து கடுமையான சரிவுக்கு பின்னர் சற்று கீழேயே வர்த்தகமாகி வரும் நிலையில், அதன் தினசரி ஆஎ எஸ் ஐ 50க்கு மேல் வர்த்தகம் ஆகி வருவதாகவும், இதனால் இதன் பங்கின் விலை சற்றும் ஏற்றம் காணலாம் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பங்கினை 92 ரூபாய் ஸ்டாப் லாஸ் ஆக வைத்து வாங்கலாம் எனவும், அதன் இலக்கு விலை 115 ரூபாய் எனவும் தெரிவித்துள்ளது. (சந்தை விலை 101.65 ரூபாய்).

இந்த பங்குகள் மூத்த பொருளாதார நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்டது என்றாலும், உங்களது முதலீட்டு திறன் மற்றும் சரியான நிபுணர்களைக் கொண்டு உங்களது இறுதி முடிவில் முதலீடு செய்வது நல்லது..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IT and FMCG sectors are remain positive, said experts

Stocks recommendations.. IT and FMCG stocks are continue to remain positive.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X