சிறு முதலீட்டாளர்களுக்கு நல்ல சான்ஸ்..ஒயின், கார் நிறுவனங்கள் IPO..முக்கிய விவரங்கள் இதோ!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி ஒயின் உற்பத்தியாளரான சூலா வினயார்ட்ஸ் நிறுவனம் டிசம்பர் 12 அன்று அதன் பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளது.

 

பொதுவாக புதுப் பங்கு வெளியீடு என்பது சிறு முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. ஆக அப்படி ஒரு வாய்ப்பினைத் தான் சூலா வினயார்ட்ஸ் கொடுத்துள்ளது.

இந்த பங்கு வெளியீட்டில் முழுமையாக ஆஃபர் ஃபார் சேல் (offers for sale ) மூலம், பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த பங்கு வெளியீட்டில் சுமார் 2.69 கோடி பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளன.

எப்போது வெளியீடு?

எப்போது வெளியீடு?

இந்த பங்கு வெளியீடானது டிசம்பர் 12 அன்று வெளியிடப்படவுள்ளது. இது டிசம்பர் 14 அன்று முடிவடையவுள்ளது. இந்த வெளியீட்டில் ஆங்கர் முதலீட்டாளர்கள் டிசம்பர் 9 அன்று வெளியிடப்படவுள்ளது.

இந்த பங்கு விற்பனை மூலம் சூலா வினயார்ட்ஸ் நிறுவனம் 9.60 பில்லியன் ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.

விலை நிலவரம் என்ன ?

விலை நிலவரம் என்ன ?

இந்த பங்கு வெளியீட்டில் பங்கு விலையானது 340 - 357 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இந்த வெளியீட்டில் புதிய வெளியீடு என்பது இல்லை. இந்த பங்கு வெளியீட்டின் முக மதிப்பு 2 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வெளியீட்டில் ஐபிஓ-வின் அளவு 50% தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு, 50% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 15% நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கும், 35% சில்லறை முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வருவாய் அதிகரிப்பு?
 

வருவாய் அதிகரிப்பு?

சூலா நிறுவனத்தின் வருவாய் விகிதமானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இது மேற்கொண்டு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

கடந்த 2022ம் நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் வருவாய் விகிதமானது, 4539.16 மில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் விற்பனை மார்ஜின் விகிதமானது 69.83% அதிகரித்து, வரிக்கு பிந்தைய லாபம் 521.39 மில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது.

எதில் கவனம்?

எதில் கவனம்?

இதே நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் 2240.68 மில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே விற்பனை மார்ஜின் 74.32% அதிகரித்துள்ளது. இதன் வரிக்கு பிந்தைய லாபம் 305.06 மில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் நிறுவனம் தொடர்ந்து அதன் சொந்த பிராண்டுகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில், பல வெளி நாட்டு பிராண்டுகளையும் இறக்குமதி செய்து சப்ளை செய்து வருகின்றது. தொடர்ந்து புதிய பொருட்களையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகின்றது.

லேண்ட்மார்க் கார்ஸ்

லேண்ட்மார்க் கார்ஸ்

பிரீமியம் ரக கார் சில்லறை விற்பனையாளரான லேண்ட்மார்க் கார்ஸ் நிறுவனம் டிசம்பர் 13 அன்று அதன் பங்கு வெளியீட்டினைக் செய்யவுள்ளது. இதன் கடைசி தேதி டிசம்பர் 15 ஆகும். இந்த பங்கு வெளியீட்டில் விலை 481 - 506 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு டிசம்பர் 12 அன்று தொடங்கும்.

லேண்ட்மார்க்-

லேண்ட்மார்க்-

லேண்ட்மார்க் நிறுவனத்தில் குறைந்தபட்சம் 29 பங்குகளை வாங்கலாம். அதிகபட்சமாக 29 மடங்கில் அதிகரிக்கலாம். இந்த பங்கு வெளியீட்டில் 150 கோடி ரூபாய் புதிய வெளியீடாக உள்ளது. இதே ஆஃபர் பார் விற்பனை மூலம் 402 கோடி ரூபாய் விற்பனை செய்யப்படவுள்ளது. இதன் மொத்த வெளியீட்டின் மதிப்பு 552 கோடி ரூபாயாக அதிகரிக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

landmark Cars, sula vineyards plans to IPO launch next week: check key details

Wine producer sula vineyards will have its share issue on December 12. Landmark Cars will do its IPO on December 13
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X