முதலீட்டாளர்களை கோடீஸ்வரர்களாக்கிய 13 பங்குகள்.. ரூ.1 லட்சம் கோடியான காலம்..இனியொரு வாய்ப்பு உண்டா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பங்கு சந்தையில் முதலீடு செய்த பெரும்பாலானவர்கள் ஏன் நஷ்டம் அடைகின்றனர். ஏன் லாபம் சம்பாதிப்பதில்லை என்றால், பங்கு சந்தையில் முழுமையான புரிதல் இல்லை என்பது தான் உண்மை.

 

மேலும் பங்கு சந்தையில் முதலீடு செய்யும்போது தங்களது உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். சரியான பங்கினை தேர்வு செய்ய வேண்டும் என கூறப்படுவதுண்டு.

உண்மையில் மேற்கூறிய அனைத்தும் உண்மையே. எனினும் பங்கு சந்தையில் நீண்டகால நோக்கில் முதலீடு செய்தால் மட்டுமே நல்ல லாபம் பார்க்கலாம் என்பதும் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சம்.

10 மடங்கு வளர்ச்சி காணும் பை நவ் பே லேட்டர் திட்டம்..!

ரூ.1 லட்சம் டூ 1 கோடி ரூபாய்

ரூ.1 லட்சம் டூ 1 கோடி ரூபாய்

அந்த வகையில் இதற்கு சிறந்த சாட்சியமாக நாம் இன்று பார்க்கவிருப்பது 13 பங்குகளை பற்றித் தான். இந்த பங்குகளில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்றைய மதிப்பு 1 கோடி ரூபாய்க்கு மேல். இதில் சில பங்குகள் மேற்கொண்டு இன்னும் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

HCP பிளாஸ்டீன் பல்க்பேக் (HCP Plastene Bulkpack)

HCP பிளாஸ்டீன் பல்க்பேக் (HCP Plastene Bulkpack)

HCP பிளாஸ்டீன் பல்க்பேக் பங்கு விலையானது இந்த 10 ஆண்டுகளில் 275 மடங்கு ஏற்றம் கண்டுள்ளது. இந்த பங்கின் விலையானது நவம்பர் 8, 2011 அன்று 2.40 ரூபாயாக இருந்த நிலையில், நவம்பர் 8, 2021 அன்று 660.85 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது பிளாஸ்டிக் பைகள் மற்றும் சாக்குகள் போன்ற பொருட்களை பேக்கிங் செய்வதற்கான பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளது. இது ஜவுளிப் பொருட்களை கவர் செய்யும் பொருட்களையும் உற்பத்தி செய்கிறது.

HLE Glascoat பங்கு
 

HLE Glascoat பங்கு

இந்த பட்டியலில் அடுத்ததாக HLE Glascoat பங்கு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 6,869 ரூபாயாக இருந்த பங்கின் விலை, 19,955 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து NGL Fine-Chem நிறுவனத்தின் பங்கு விலையானது 19,703% ஏற்றம் கண்டும், பெளஷக் 19,454% ஏற்றம் கண்டும், அல்கைல் அமீன்ஸ் 17,116% ஏற்றத்திலும், கேப்லின் பாயின்ட் லேபரட்டரீஸ் 17,041% ஏற்றத்திலும் உள்ளது.

14,200% வரையில் ஏற்றம்

14,200% வரையில் ஏற்றம்

இதே போல தீபக் நைட்ரேட், டான்லா பிளாட்பார்ம், டேஸ்டி பைட் ஈட்டபிள்ஸ், இண்டோ கவுண்ட் இண்டஸ்ட்ரீஸ், சைலம் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் பைனான்ஸ் மற்றும் ஆஸ்ட்ரல் பங்குகள் 10,000% முதல் 14,200% வரையில் ஏற்றத்தில் காணப்படுகின்றது.

பெளஷக் இலக்கு

பெளஷக் இலக்கு

மேற்கண்ட பங்கு பட்டியலில் உள்ள பெளஷக் பங்கின் இலக்கு விலையானது 15,000 ரூபாயாக தரகு நிறுவனம் கணித்துள்ளது. கெமிக்கல் துறையை சேர்ந்த இந்த நிறுவனம், சர்வதேச அளவில் வணிகம் செய்து வருகின்றது. இந்த நிறுவனம் Alembic Group குழுமத்தினை சேர்ந்தது. இது 1972ல் நிறுவப்பட்ட ஒரு நிறுவனமாகும். தற்போது கெமிக்கல்களுக்கான தேவையானது அதிகரித்து வரும் நிலையில், உற்பத்தியானது சரிவினைக் கண்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் இந்த பங்கின் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அல்கைல் அமின்ஸ் நிலவரம்

அல்கைல் அமின்ஸ் நிலவரம்

அல்கைல் அமின்ஸ் கெமிக்கல்ஸ் நிறுவனம் பல்வேறு மருந்து உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனம் மகாராஷ்டிராவின் படல்கங்கா மற்றும் குர்கும்பிலும், குஜராத்தில் தஹேஜிலும் 12 உற்பத்தி ஆலைகள் மற்றும் தொடர்புடைய பயன்பாடுகளுடன் மூன்று உற்பத்தி தளங்களைக் கொண்டுள்ளது.

மூலப்பொருட்கள் விலை அதிகரிப்பு, சரக்கு செலவுகள் அதிகரிப்பு, அதன் செயல்பாட்டில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. எனினும் வலுவான செயல்திறனுக்கு மத்தியில் இதன் பங்கு விலை அதிகரித்துள்ளது. இது அடுத்த 6 மாதங்களில், குர்கும்ப் ஆலையுடன் இணைந்து செயல்படலாம் என எதிர்பார்ப்படுகிறது. இது இந்த நிறுவனத்திற்கு சாதகமாக அமையலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர்.

பஜாஜ் பைனான்ஸ் அதிகரிக்கலாம்

பஜாஜ் பைனான்ஸ் அதிகரிக்கலாம்

இதில் பஜாஜ் பைனான்ஸ் நிதி நிறுவனத்தின் பங்கு விலையானது அடுத்த 12 மாதங்களில் 9,092 ரூபாயினை தொடலாம் என்று தரகு நிறுவனங்கள் கணித்துள்ளன. இந்த பங்கின் விலையானது தற்போது என் எஸ் இயில் 7570 ரூபாயாகவும், பி எஸ் இ-யில் 7,570.25 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகின்றது.

தீபக் நைட்ரேட் நிறுவனம்

தீபக் நைட்ரேட் நிறுவனம்

தீபக் நைட்ரேட் நிறுவனம் ஒரு கெமிக்கல் நிறுவனம் ஆகும். இது பல்வேறு வகையான கெமிக்கல்களை சர்வதேச அளவில் விற்பனை செய்து வருகிறது. கெமிக்கல்களுக்கான தேவையானது வரவிருக்கும் ஆண்டுகளில் அதிகரிக்கலாம் என்ற நிலை நிலவி வருகிறது. ஆனால் தற்போது சப்ளையானது போதுமான அளவுக்கு இல்லை.

சீனாவில் கடும் மின்வெட்டு நிலவி வரும் நிலையில், அது கெமிக்கல் உற்பத்தியினை பாதிக்கலாம். இதனால் சப்ளை சங்கிலியில் பாதிப்பு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சர்வதேச அளவிலான இறக்குமதிகள் பாதிக்கப்படலாம். இதனிடையே அந்த வாய்ப்பானது தீபக் நைட்ரேட் நிறுவனத்திற்கு சாதகமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த பங்கின் விலையும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்செக்ஸ் நிலவரம் இது தான்

சென்செக்ஸ் நிலவரம் இது தான்

இதே கடந்த 10 ஆண்டுகளில் சென்செக்ஸ் 245% அதிகரித்து 60,545 புள்ளிகளாக காணப்படுகின்றது. இதே பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் முறையே 316 மற்றும் 319% ஏற்றத்தில் காணப்படுகின்றன.

இதற்கிடையில் தற்போது ( நவம்பர் 10, 2021, 12.55 நிலவரப்படி) சென்செக்ஸ் 241.31 புள்ளிகள் குறைந்து, 60,189.10 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 70.45 புள்ளிகள் குறைந்து, 17,971.80 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

multibagger stocks! 13 firms are turned Rs.1 lakh to over Rs.1 crore in 10 years

multibagger stocks! 13 firms are turned Rs.1 lakh to over Rs.1 crore in 10 years/ முதலீட்டாளர்களை கோடீஸ்வரர்களாக்கிய 13 பங்குகள்.. ரூ.1 லட்சம் கோடியான காலம்..இனியொரு வாய்ப்பு உண்டா?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X