MFs தற்போதைக்கு வேண்டாம் என விற்ற பங்குகள்.. வேண்டும் என முதலீட்டை அதிகரித்த பங்குகள்.. லிஸ்ட் இதோ!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக பங்கு சந்தையில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களில் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. அப்படி மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் தேடித் தேடி வாங்கிய பங்குகள் சிலவற்றை விற்பனை செய்துள்ளன.

அப்படி விற்பனை செய்த பங்குகள் என்னென்ன? இதில் கவனிக்க வேண்டிய பங்குகள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

2 நிறுவனங்கள் பங்கு பிரித்தல் திட்டம்.. பங்கு விலை இனி என்னவாகும்? 2 நிறுவனங்கள் பங்கு பிரித்தல் திட்டம்.. பங்கு விலை இனி என்னவாகும்?

முதலீடு குறைப்பு?

முதலீடு குறைப்பு?

பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட பொதுத் துறை வங்கிகளும் இந்த பட்டியலில் அடங்கும். இந்த பங்குகளில் கடந்த நவம்பர் மாதத்தில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தங்களது முதலீட்டினை குறைத்துள்ளன.

இதே நிறுவன முதலீட்டாளர்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI), கனரா வங்கி மற்றும் யூனியன் வங்கி உள்ளிட்ட பல வங்கிகளில் முதலீட்டினை அதிகரித்துள்ளதாக PRIME தரவானது சுட்டிக் காட்டியுள்ளது.

பேங்க் ஆப் பரோடா நிலவரம்

பேங்க் ஆப் பரோடா நிலவரம்

குறிப்பாக பேங்க் ஆப் பரோடாவில் 11.35% பங்கினை வைத்துள்ள மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள், இதில் 9754.74 கோடி ரூபாய் முதலீட்டினை நவம்பர் 30 நிலவரப்படி வைத்துள்ளன. இது கடந்த அக்டோபர் மாதத்தில் 12.03% அல்லது 9190.53 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கினை வைத்திருந்தன. MF நிறுவனங்கள் 3,54,91,527 பங்குகளை விற்பனை செய்துள்ளன. இந்த பங்கானது கடந்த ஒரு மாதத்தில் 12% அதிகரித்துள்ளது. இதற்கிடையில் தான் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் பங்கினை குறைத்தாலும், அதன் மதிப்பு அதிகரித்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி

இதே பஞ்சாப் நேஷனல் வங்கியில் 8,78,889 பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிறுவனங்கள் 4.03% பங்குகள் அல்லது 2277.92 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வைத்துள்ளன. இது அக்டோபர் மாதத்தில் 4.04% பங்குகள், 1897.58 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் இருந்தது. இந்த பங்கும் நவம்பர் மாதத்தில் 20% ஏற்றம் கண்டுள்ளது.

இதே இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 2,87,925 பங்குகளாகவும், சென்ட்ரல் வங்கியில் 2,32,106 பங்குகளாகவும், பஞ்சாப் & வங்கியில் 61,357 பங்குகளாகவும் குறைந்துள்ளது.

யூனியன் பேங்க்

யூனியன் பேங்க்

மறுபுறம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பல பங்குகளிலும் முதலீட்டினை அதிகரித்துள்ளன. அதில் யூனியன் பேங்கில் 5,96,26,038 பங்குகளாக அதிகரித்துள்ளன. இது நவம்பர் மாதத்தில் 2.19% பங்குகள் அல்லது 1221.11 கோடி ரூபாயாகும். இது அக்டோபர் மாதத்தில் 1.32% பங்குகள் அல்லது 484.72 கோடி ரூபாயில் மட்டுமே இருந்தது.

எஸ்பிஐயில் அதிகரிப்பு

எஸ்பிஐயில் அதிகரிப்பு

எஸ்பிஐ-யில் மியூச்சுவல் பண்ட் நிறுவனம் 13.16% அல்லது 70,779.23 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை நவம்பர் மாத இறுதியில் வைத்துள்ளன. அக்டோபர் மாதத்தில் 13.12% அல்லது 67,171.39 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வைத்துள்ளன. கடந்த ஒரு மாதத்தில் 42,15,421 பங்குகளை மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தில் அதிகரித்துள்ளன.

இந்தியன் வங்கி

இந்தியன் வங்கி

இந்தியன் வங்கியில் 8.43% ஆக பங்கு விகிதம் அதிகரித்துள்ளது. இது கடந்த மாதம் 7.94% ஆக இருந்தது.

கனரா வங்கி, இந்தியன் வங்கி, பேங்க் ஆப் மகராஷ்டிரா மற்றும் யூகோ வங்கி உள்ளிட்ட வங்கிகளில் பொதுத்துறை வங்கிகளில் நவம்பர் மாதத்தில், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீடுகளை அதிகரித்துள்ளது.

பங்கு விகிதம் அதிகரிப்பு

பங்கு விகிதம் அதிகரிப்பு

கனரா வங்கியில் 4.78% ஆக பங்கினை அதிகரித்துள்ளது. இது கடந்த அக்டோபர் மாதத்தில் 4.49% ஆக இருந்தது. இதே இந்தியன் வங்கியில் 8.43% ஆக பங்கு விகிதம் அதிகரித்துள்ளது. இது அக்டோபர் மாதம் 7.94% ஆக இருந்தது. பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் 0.30% ஆக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் பங்குகள் அதிகரித்துள்ளன. இதே யூகோ வங்கியில் 0.12%ல் இருந்து, 0.17% ஆக அதிகரித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mutual funds sold in stakes in PNB, BOB & IOB in November, increase shares of SBI,Canara bank & others

Mutual fund companies have sold some of the stocks they bought. Increased investment in some stocks, check here full list
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X