பாலிசி பஜார் ஐபிஓ.. கவனிக்க வேண்டி 10 முக்கிய விஷயங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமீப காலமாக பல நிறுவனங்கள் தனது பொது பங்கு வெளியீட்டினை செய்து வருகின்றன. பல நிறுவனங்கள் பங்கு வெளியீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன.

 

அந்த வகையில் பாலிசி பஜார் நிறுவனத்தின் (pb fintech ltd) பொதுப்பங்கு வெளியீடு நவம்பர் 1 அன்று தொடங்கவுள்ளது. இந்த பங்கு வெளியீட்டின் முடிவு தேதி நவம்பர் 3 ஆகும்.

இந்தப் பொதுப் பங்கு வெளியீட்டின் விலை நிர்ணயம் ஆனது ஒரு பங்கிற்கு 940 ரூபாய் முதல் 980 ரூபாய் வரையில் ஒரு பங்கின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிதி திரட்ட திட்டம்

நிதி திரட்ட திட்டம்

இந்த பொதுப் பங்கு வெளியீட்டின் மூலமாக இந்த பாலிசிபஜார் நிறுவனம் 5,700 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளது. இதில் 3,750 கோடி ரூபாய் புதிய பங்கு வெளியீடாகும். இதே 1960 கோடி ரூபாய் அதன் புரமோட்டர்கள் மற்றும் பங்குதாரர்களிடம் இருக்கும் பங்கின் மூலமாகவும் திரட்ட திட்டமிட்டுள்ளது.

இந்த பங்கு வெளியீட்டுக்கு முன்னதாகவே கடந்த அக்டோபர் 29ஆம் தேதி முன், அதன் முக்கிய முதலீட்டாளர்களிடம் இருந்து 2,569 கோடி ரூபாய் நிதியினை திரட்டியுள்ளது.

எதற்காக இந்த நிதி திரட்டல்

எதற்காக இந்த நிதி திரட்டல்

நிறுவனம் அதன் பாலிசி பஜார் மற்றும் பைசபஜார் நிறுவனங்களின் பிராண்டுகளை டெவலப் செய்யவும், அதன் இருப்பினை அதிகரிக்கவும், மேலும் மூலோபாய முதலீடுகள் மற்றும் கையகப்படுத்தல்களுக்கும் பயன்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் அதன் வாடிக்கையாளர் தளத்தை விரிவுபடுத்துவதற்காகவும், புதிய வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக, இந்த வெளியீட்டினை செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

லாட் சைஸ் எவ்வளவு?
 

லாட் சைஸ் எவ்வளவு?

இந்த பொதுப் பங்கு வெளியீட்டில் ஒரு லாட் என்பது 15 பங்குகள் ஆகும். ஆக ஒரு லாட்டினை வாங்க ஒரு முதலீட்டாளர் 14,700 ரூபாய் முதலீட்டாளர் செய்ய வேண்டியிருக்கும். இதே அதிகபட்சமாக ஒரு முதலீட்டாளார் 13 லாட்களை வாங்கிக் கொள்ளலாம். இதற்காக 1.91,100 ரூபாய் முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.

யாருக்கு எவ்வளவு முதலீடு?

யாருக்கு எவ்வளவு முதலீடு?

இந்த பங்கு வெளியீட்டில் 75 சதவிகிதம் தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கும், 15 சதவிகிதம் நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கும், மீதமுள்ள 10 சதவீதம் சில்லறை முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் பற்றி

நிறுவனம் பற்றி

பாலிசி பஜார் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் இன்சூரன்ஸ் தளமாகும். இது ஆன்லைனில் இன்சூரன்ஸ், கடன் வழங்கும் பொருட்களையும், சிபில் ஸ்கோர், கிரெடிட் கார்டு விற்பனையை செய்கின்றது. இதில் கடன் சம்பந்தமான சேவையினை பைசா பஜார் என்ற இணையம் மூலமும், இன்சூரன்ஸ் விற்பனை பாலிசி பஜார் மூலமும் விற்பனை செய்து வருகின்றது.

மிகப்பெரிய டிஜிட்டல் இன்சூரன்ஸ்

மிகப்பெரிய டிஜிட்டல் இன்சூரன்ஸ்

இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆகும். இதன் டிஜிட்டல் இன்சூரன்ஸ் சந்தையில் 93.4% பங்கினைக் கொண்டுள்ளது.

இந்த நிறுவனம் கமிஷன் மற்றும் கூடுதல் சேவைகள், ஆன்லைன் மார்க்கெட்டிங், ஆலோசனை உள்ளிட்ட பல சேவைகள் மற்றும் கடன் சேவை மூலமும் வருவாயை ஈட்டி வருகின்றது.

தொடர் நஷ்டம்

தொடர் நஷ்டம்

கடந்த 2021 ஆம் நிதியாண்டில் அதன் ஒருங்கிணைந்த நஷ்டம் 150.24 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதே 2020 ஆம் நிதியாண்டில் இதன் ஒருங்கினைந்த நஷ்டம் 304.03 கோடி ரூபாயாக இருந்தது. இதன் செயல்பாட்டின் மூலம் கிடைக்கும் வருவாய் விகிதமானது 2021 ஆம் நிதியாண்டில் 15% அதிகரித்து, 886.66 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே 2020 ஆம் நிதியாண்டில் 771.3 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடதக்கது.

ஜூன் காலாண்டு நிலவரம்

ஜூன் காலாண்டு நிலவரம்

இதற்கிடையே இந்த நிறுவனத்தின் ஜூன் காலாண்டில் 110.84 கோடி ரூபாய் நஷ்டத்தை கண்டிருந்தது. இதே கடந்த ஜூன் 2020 ஆம் காலாண்டில் 59.75 கோடி ரூபாயாக நஷ்டம் கண்டிருந்தது. இதே வருவாய் விகிதமானது கடந்த நிதியாண்டில் 235.73 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆண்டில் 175.02 கோடி ரூபாயாக அதிகரித்தது.

என்னென்ன பிரச்சனைகள்?

என்னென்ன பிரச்சனைகள்?

இந்த நிறுவனத்தில் சில பிரச்சனைகளையும் சாய்ஸ் புரோக்கிங் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. சாதகமற்ற அரசு அரசாங்க கொள்கைகள் மற்றும் விதிமுறைகள், பிசினஸ் பார்ட்னர்கள் தயாரிப்புகளை திரும்பப் பெறுதல், குறைவான கமிஷன், வாடிக்கையாளர்களை பெறுவது மட்டுமல்லாமல் தக்கவைத்துக் கொள்வதில் ஏற்படும் சிரமம், செயல்பாட்டு திறன் குறைதல் மற்றும் அதிகரித்துவரும் போட்டி ஆகியவை இந்த நிறுவனத்தின் பாதிக்கக்கூடிய அம்சங்களாக உள்ளன.

பங்கு சந்தையில் பட்டியம் எப்போது?

பங்கு சந்தையில் பட்டியம் எப்போது?

இந்த நிறுவனத்தின் பங்கு ஒதுக்கீடானது நவம்பர் 10 அன்று ஒதுக்கீடு செய்யப்படலாம் என்ற நிலையில், பங்கு கிடைக்காதவர்களுக்கு நவம்பர் 11 அன்று ரீபண்ட் கொடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 12 அன்று டீமேட்டில் பதிவு செய்யப்படலாம். நவம்பர் 15 அன்று பங்கு சந்தையில் பட்டியலிடப்படலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Policy bazaar IPO opens November 1, 2021: check price, lot size and other details

Policy bazaar IPO opens November 1, 2021: check price, lot size and other details
Story first published: Sunday, October 31, 2021, 19:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X