இந்த 5 வங்கி பங்குகளும் 40% வரையில் லாபம் கொடுக்கலாம்.. உங்க போர்ட்போலியோவில் இருக்கா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: நடப்பு ஆண்டில் வங்கி பங்குகள் நல்ல லாபம் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்ப்படுகிறது.

பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் வங்கி துறையானது நல்ல வளர்ச்சியினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த ஆண்டில் வங்கிகளின் கடன் வளர்ச்சி விகிதமானது அதிகரித்த நிலையில், வாரக்கடனும் குறைந்தது. இது வங்கிகளின் மார்ஜின் விகிதத்தினை அதிகரிக்க வழிவகுத்தன. இதற்கிடையில் வங்கிகளுக்கு ஆதரவாக அமைந்தது எனலாம்.

அஞ்சலகத்தின் PPF, SSY திட்டங்களில் வங்கி கணக்கு மாற்றம் செய்யப்படணுமா.. எப்படி செய்வது? அஞ்சலகத்தின் PPF, SSY திட்டங்களில் வங்கி கணக்கு மாற்றம் செய்யப்படணுமா.. எப்படி செய்வது?

வங்கிகளின் வளர்ச்சி

வங்கிகளின் வளர்ச்சி

நடப்பு ஆண்டில் சர்வதேச நாடுகளை காட்டிலும் இந்தியா வேகமாக வளர்ச்சி கண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியது. இது குறிப்பாக வங்கி துறைக்கு சாதகமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பொதுத்துறை வங்கிகளின் வளர்ச்சியினை ஊக்குவிக்கும் விதமாக வரவிருக்கும் பட்ஜெட் 2023ல் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

12 மாதங்களில் அதிகரிக்கலாம்

12 மாதங்களில் அதிகரிக்கலாம்

இது வங்கிகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கலாம். இதற்கிடையில் தான் நிபுணர்கள் சில பங்குகளை வாங்க பரிந்துரை செய்துள்ளனர். இதன் காரணமாக வங்கிகளின் இலக்கு விலையையும் நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

அடுத்த 12 மாதங்களில் வங்கி பங்குகள் விலை அதிகரிக்கலாம் எனவும், அதன் இலக்கு விலையையும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

பந்தன் வங்கி

பந்தன் வங்கி

வங்கிகளின் வருமானம், பண்டமெண்டல், தொடர்புடைய மதிப்பு என பலவும் வங்கி பங்குகளுக்கு ஆதரவாக அமையலாம். இந்த பங்குகள் ஜனவரி 17 முதல் ஏற்றம் காணத் தொடங்கலாம்.

பரிந்துரை பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது பந்தன் வங்கி. இதன் இலக்கு விலை 321 ரூபாயாகும். இதன் முடிவு விலையானது 240.15 ரூபாயாகும். தற்போதைய விலையில் இருந்து 33.70% அதிகரிக்கலாம் என எதிர்பார்கப்படுகிறது.

சிட்டி யூனியன் வங்கி & ஐசிஐசிஐ வங்கி

சிட்டி யூனியன் வங்கி & ஐசிஐசிஐ வங்கி

சிட்டி யூனியன் வங்கியின் இலக்கு விலை 212 ரூபாயாகும். இதன் தற்போதைய சந்தை விலை 160.45 ரூபாயாகும். இதன் இலக்கு விலை தற்போதைய விலையில் இருந்து 32.1% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐசிஐசிஐ வங்கியின் இலக்கு விலை 1090 ரூபாயாகும். இதன் முடிவு விலை 865.15 ரூபாயாகும். இது தற்போதைய விலையில் இருந்து 26% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈக்விட்டாஸ் ஸ்மால் பைனான்ஸ்

ஈக்விட்டாஸ் ஸ்மால் பைனான்ஸ்

ஈக்விட்டாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் இலக்கு விலை 69.90 ரூபாயாகும். இதன் முடிவு விலை 55.95 ரூபாயாகும். இது தற்போதைய சந்தை விலையில் இருந்து 24.90% அதிகரிக்கலாம்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் இலக்கு விலை 715 ரூபாயாக நிபுணர்கள் நிர்ணயம் செய்துள்ளனர். இதன் முடிவு விலை 592.95 ரூபாயாகும். இதன் இலக்கு விலையானது தற்போதைய விலையில் இருந்து, 20.60% ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.

முதலீடுகள் அதிகரிக்கலாம்

முதலீடுகள் அதிகரிக்கலாம்

நடப்பு ஆண்டில் சர்வதேச சந்தைகளை காட்டிலும் இந்திய சந்தையானது நல்ல ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக சர்வதேச முதலீட்டாளார்களின் கவனம் இந்திய சந்தையின் பக்கம் திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது இந்திய சந்தையில் பங்கு விலை அதிகரிக்க வழிவகுக்கலாம். குறிப்பாக வங்கி பங்குகளில் முதலீடுகள் அதிகரிக்க வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் வங்கி பங்குகள் விலை அதிகரிக்க ஒரு காரணமாக அமையலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

These 5 bank stocks are can give up to 40% returns: How much is Target?

These 5 bank stocks are can give 20 - 40% returns: How much is Target?
Story first published: Wednesday, January 18, 2023, 20:02 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X