பட்ஜெட் நாளில் இந்திய பங்குச் சந்தை ஒரு ரோலர் கோஸ்டர் பயணத்தை தொடங்கியுள்ளது. குறிப்பாக, மெட்டல் ஜாம்பவான் வேதாந்தா (Vedanta) பங்குகள் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே 10% வரை சரிந்து முதலீட்டாளர்களை கவலையில் ஆழ்த்தியது. சர்வதேச சந்தையில் மெட்டல் விலையில் ஏற்பட்ட சரிவு மற்றும் பட்ஜெட் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையே இந்த சரிவுக்கு முக்கியக் காரணமாக பார்க்கப்பட்டது.
ஆனால் ஆச்சரியப்படும் விதமாக, அந்த சரிவு நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஏனெனில் குறைந்த விலையில் வாங்க காத்திருந்த முதலீட்டாளர்களின் அதிரடி வேட்டையால், பங்கு விலை மின்னல் வேகத்தில் மீண்டெழுந்தது. பட்ஜெட்டில் மெட்டல் மற்றும் மைனிங் துறைக்கு சாதகமான அறிவிப்புகள் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு வேதாந்தா பங்குகளை மீண்டும் பச்சை நிறத்திற்கு மாற்றியுள்ளது. இந்த திடீர் சரிவு மற்றும் மீட்சிக்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன? பட்ஜெட் உரை வேதாந்தாவின் தலையெழுத்தை மாற்றுமா? விரிவாகப் பார்ப்போம்.

கடும் சரிவில் மெட்டல் பங்குகள்?
வேதாந்தா பங்கானது காலை வர்த்தக நேரத்தில் 10%-க்கு மேல் சரிந்திருந்தாலும், அது பின்னர் ஏற்றம் கன்டு, தற்போது 4% அளவுக்கு சரிவில் காணப்படுகிறது. இதற்கிடையில் கடந்த இரு வர்த்தக தினங்களில் மட்டும் வேதாந்தா நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 54,000 கோடி ரூபாய் சரிவைக் கண்டுள்ளது.
இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடன் வேதாந்தாவின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் பங்குகள் 18% வரை சரிந்தன. இதன் எதிரொலியாக வேதாந்தா பங்குகளும் 10% வரை சரிவை சந்தித்தன. மேலும் ஹிந்துஸ்தான் காப்பர் பங்குகளும் 10% சரிவைக் கண்டன.
மீட்சி ஏன்?
வேதாந்தா நிறுவனம் பெரும்பாலும் அலுமினியம் சார்ந்த தொழிலையே நம்பியுள்ளது. தற்போது சர்வதேச சந்தையில் (LME) அலுமினியம் விலை டன் ஒன்றுக்கு 3,117 டாலராக உள்ளது, இது எதிர்பார்க்கப்பட்ட 2,850 - 3,100 டாலர் என்ற அளவை விட அதிகமாகும். வெள்ளியின் விலை வீழ்ச்சி ஹிந்துஸ்தான் ஜிங்க்கை பாதித்தாலும், வேதாந்தாவின் மொத்த வருவாயில் வெள்ளியின் பங்களிப்பு மிக குறைவு. ஆக ஆரம்பத்தில் கடும் சரிவை கண்டிருந்தாலும், அதன் பிறகு மீட்சி கண்டது.
நுவாமா கணிப்புப்படி, வேதாந்தாவின் 2028 நிதியாண்டு வருவாயில் அலுமினியம் 52% ஆகவும், வெள்ளி வெறும் 12% ஆகவுமே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே நிறுவனம் எதிர்கால வளர்ச்சி கருதி நிறுவனத்தின் பிரிப்பு, உற்பத்தி உயர்வு, செலவு குறைப்பு மற்றும் அதிக டிவிடெண்ட் ஆகியவை முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையைத் தந்துள்ளன. இந்த சூழலில் தான் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தாலும், மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.
கமாடிட்டி சந்தை நிலவரம்!
ஞாயிற்றுக்கிழமை காலை வர்த்தகம் தொடங்கிய போது தங்கம் மற்றும் வெள்ளி தலா 6% முதல் 9% வரை சரிவுடன் காணப்பட்டன. ஆனால் காலை 10 மணியளவில் சந்தை மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியது. தங்கம் விலை 10 கிராமுக்கு 1.40 லட்சம் ரூபாய்க்கு மேல் மீண்டும் வர்த்தகமானது. இதே வெள்ளி விலை ஒரு கிலோ 2.70 லட்சம் ரூபாய்க்கு மேல் நிலைபெற்றுள்ளது. இதுவும் மெட்டல் பங்குகள் ஏற்றம் காண ஒரு காரணியாக பார்க்கப்படுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!



Click it and Unblock the Notifications