நாங்கள் வெற்றி பெறுவோமா என்று தெரியவில்லை.. ஆனால் நிச்சயமாக சிறந்ததைக் கொடுப்போம்..தீபீந்தர் கோயல்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பலரும் பலவிதமாக சோமேட்டோ ஐபிஓ பற்றி கூறிய நிலையில், கடனுடன் உள்ள ஒரு நிறுவனத்தின் எப்படி முதலீடு செய்வது? லாபகரமாக இருக்குமா? அடுத்து என்ன நடக்கும்? என்று பல கேள்விகள் எழுந்தன.

 

ஆனால் இன்று அனைவரின் பேச்சையும் பொய்யாக்கும் விதமாக, வெற்றிகரமாக சோமேட்டோ ஐபிஓ செய்யப்பட்டுள்ளது.

அதிலும் தொடர்ந்து சில வருடங்களாகவே நஷ்டத்தினை கண்டு வந்த ஒரு நிறுவனம், இன்று முதல் நாளிலேயே மிஸ் செய்து விட்டோமே எனும் அளவுக்கு லாபத்தினை கொடுத்துள்ளது.

 ஆனந்தக் கண்ணீர் விட்ட தீபிந்தர் கோயல்.. முதல் நாளே 72% வளர்ச்சியில் சோமேட்டோ பங்குகள்..! ஆனந்தக் கண்ணீர் விட்ட தீபிந்தர் கோயல்.. முதல் நாளே 72% வளர்ச்சியில் சோமேட்டோ பங்குகள்..!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி

இந்த நிறுவனத்தின் பொது பங்கு வெளியீட்டின் போதே முதலீட்டாளர்களின் ஆர்வத்தினை ஓரளவுக்கு கணிக்க முடிந்தது. இந்த நிலையில் முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது எனலாம். ஏனெனில் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நாளே 51% பிரீமியத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

என்ன விலைக்கு பட்டியலிடப்பட்டது?

என்ன விலைக்கு பட்டியலிடப்பட்டது?

போதாக்குறைக்கு 72% வரையில் லாபத்தினை கொடுத்து, தற்போது சற்று குறைந்தும் வர்த்தகமாகி வருகின்றது. ஆரம்பத்திலேயே இந்த பங்கின் விலையானது 115 ரூபாய் என்ற விலைக்கு பட்டியலிடப்பட்டது. இதன் பொது பங்கு வெளியீட்டு விலையானது 76 ரூபாயாகும். ஆக ஐபிஓ-வில் இந்த பங்கினை வாங்கியவர்களுக்கு இது மிக லாபகரமானதாக உள்ளது.

தீபிந்தர் கோயல் கருத்து
 

தீபிந்தர் கோயல் கருத்து

இது குறித்து சோமேட்டோவின் நிறுவனம் தீபிந்தர் கோயல் நான் நம்பிக்கை கொண்டவன். இந்தியா ஒரு கடினமான சந்தை. ஆனால் இங்கு ஏற்கனவே வெற்றிகரமான டெலிவரி சந்தையில் ஸ்விக்கி, சோமேட்டோ இருவரும் வெற்றிகரமாக உள்ளனர். எங்களின் வாடிக்கையாளர் சேவையானது உலகத்தரம் வாய்ந்தது என்று சொல்வதற்கு, நாங்கள் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது. ஆனால் நிச்சயம் செல்வோம்.

ஏற்றத் தாழ்வுகள்

ஏற்றத் தாழ்வுகள்

எங்களின் கடந்த 10 ஆண்டு பயணம் என்பது அவ்வளவு எளிதானது அல்ல. நாங்கள் பல ஏற்றத் தாழ்வுகளை சந்தித்துள்ளோம். சில நேரங்களில் எங்கள் பங்குதாரர்கள் சிரமத்தினை கண்டுள்ளனர். ஆனால் நெருக்கடியான நேரங்களிலும் நாங்கள் கவனம் செலுத்தினோம். அதற்கு வெற்றி கிடைத்துள்ளது.

வெற்றி பெறுவோம்

வெற்றி பெறுவோம்

இந்த நாள் எங்களுக்கு புதிய நாள், நாங்கள் வெற்றி பெறுவோமா இல்லையா தெரியாது, ஆனால் நிச்சயம் எங்களின் சிறப்பான ஒன்றினை கொடுப்போம் (Today is new Day Zero. Don't know if we'll succeed, but will surely give it our best) என்றும் தனது பிளாக்கில் உருக்கமாக கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Zomato's Deepinder Goyal said don’t know if we'll succeed, but will surely give it our best

Zomato’s Deepinder Goyal said ‘today is a big day for us. A new Day Zero. I don’t know whether we will succeed or fail, we will surely, like always, give it our best.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X