தங்க விலை சரிவு: அடித்து பிடித்து நகை வாங்கும் மக்கள்

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

சென்னை: தங்கத்தின் விலை 20 சதவீத அளவிற்கு குறைந்திருப்பதால் நகைக் கடைகளை நோக்கி மக்கள் படையெடுக்கின்றனர் என்று சிட்னி மார்னிங் ஹெரால்டு என்ற பத்திரிக்கை தெரிவித்திருக்கிறது.

இந்தியாவைச் சேர்ந்த ப்ளூம்பெர்க் டிவியும், தங்கத்தின் விலை 20 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளதால் இந்திய நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதுவதாக தெரிவித்திருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் மின்டில் தங்கத்தின் விலை கடந்த இரண்டு ஆண்டுகளை விட கணிசமான அளவில் குறைந்திருப்பதால் அதை பலர் விரும்பி வாங்குகின்றனர். அதனால் தங்கத்தின் தேவையும் அதிகரித்திருக்கிறது என்று சிட்னி ஹெரால்டு தெரிவித்திருக்கிறது. பெர்த் மின்டில் கடந்த வாரம் 2 மடங்கு தங்க வியாபாரம் நடந்துள்ளது. அதனால் தான் தங்கத்தை நோக்கி மக்கள் படையெடுக்கின்றனர் என்று சிட்னி ஹெரால்டு செய்தி வெளியிட்டிருக்கிறது.

ஹாங்காங்கில் பலே வியாபாரம்

ஏப்ரல் 12ல் தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டதால், ஹாங்காங்கைச் சேரந்த சவ் சாங் சாங் நகைக் கடையில் கடந்த வார இறுதியில் மட்டும் 50 சதவீதத்திற்கும் அதிகமாக வியாபாரம் நடந்ததாக, அந்த கடையின் விற்பனை மேலாளர் லவ் ஹாக் பன் தெரிவித்திருப்பதாக ஹாங் ஹாங் மிங் பா டெய்லி தெரிவித்திருக்கிறது.

அடித்து பிடித்து நகை வாங்கும் இந்தியர்கள்

உலக அளவில் தங்கம் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகமுள்ள இந்தியாவில், நகைகள் மற்றும் தங்க நாணயங்களை வாங்குவதற்காக, எப்போதும் இல்லாத அளவிற்கு நகைக் கடைகளை நோக்கி மக்கள் செல்கின்றனர் என்று ப்ளூம்பெர்க் டிவி தெரிவித்திருக்கிறது.

"என்னுடைய மகள் பிறந்து 6 மாதங்கள் தான் ஆகிறது. அவளுக்காக ஒரு புதிய காதணிகளை மும்பை சாவெரி பஜாரிலிருந்து வாங்கி இருக்கிறேன். என் மகளுக்காக இந்த நகையை வெகு சீக்கிரம் வாங்கிவிட்டேன் என்று நான் நினைக்கவில்லை. மேலும் தங்கத்தின் விலை குறைந்தால், என் மகளுக்கு நகை வாங்க வேண்டும் என்று என் கணவரைக் கேட்டுக் கொண்டே இருந்தேன். தற்போது தங்கத்தின் விலை குறைந்திருப்பதால் என்னால் காத்திருக்க முடியவில்லை. எனவே என் மகளுக்காக இந்த புதிய காதணிகளை வாங்கி இருக்கிறேன்" என்று மும்பையைச் சேர்ந்த 28 வயது நிரம்பிய திருமதி ஷர்மிளா ஷர்டோகர் என்ற இல்லதரசி தெரிவித்திருப்பதை ப்ளூம்பெர்க் டிவி தெரிவித்திருக்கிறது.

 

ஜப்பானிலும் வியாபாரம் ஜோர்

ஜப்பான் நாட்டின் மிகப் பெரிய நகைக் கடையான டோக்குரிக்கி ஹோன்டெனில் நேற்று மட்டும் வழக்கத்திற்கு மாறாக இரு மடங்கு வியாபாரம் நடந்ததாக த ஏஜ் நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

விலை சரிந்தாலும் முதலீடு குறையவில்லை

தங்கத்தின் விலை குறைந்துள்ள போதிலே அதை அதிக அளவில் வாங்கி வைக்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தங்கத்தின் விலை சரிந்தாலும், தங்கத்தின் மீது முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

It's a gold rush all over again as investors head to buy | தங்க விலை சரிவு: அடித்து பிடித்து நகை வாங்கும் மக்கள்

"People are running through the gate," the Sydney Morning Herald reported after Gold Sales from Pert Mint hit unprecedented levels after a decline of 20 per cent in gold prices. Bloomberg TV in India showed a very interesting report on a mad scramble at a gold shop, where there was frenzied buying and a mad rush to buy physical gold, as prices have dropped 20 per cent since the beginning of the year. People are in a hurry to buy gold now.
Story first published: Friday, April 19, 2013, 14:14 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns