சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு சற்று தொய்வாகவே இருக்கும்...: கிரிசில் அறிக்கை

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள இந்திய அரசு அதிக அளவில் ஊக்குவித்து வந்தாலும், வரும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு அன்னிய முதலீடு என்பது சற்று தொய்வாகவே இருக்கும் என்று கிரிசில் நிறுவன அறிக்கைத் தெரிவித்திருக்கிறது.

சில்லறை வணிகத்தில் ஈடுபடும் வெளிநாட்டு நிறுவனங்களை, இந்தியாவில் உணவு மற்றும் மளிகைப் பொருள்களின் சில்லறை வணிகத்தைத் தவிர மற்ற அதாவது எலக்ட்ரானிக்ஸ் போன்ற சில்லறை வணிகத்தில் ஈடுபட தயக்கம் காட்டச் செய்வதாக கிரிசில் அறிக்கைத் தெரிவித்திருக்கிறது.

மேலும் உலகப் பொருளாதாரம் மற்றும் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் நிலையற்றத் தன்மையும், அன்னிய முதலீட்டாளர்களை இந்திய சில்லறை வணிகத்தில் ஈடுபட காலம் தாழ்த்துகிறது என்கிறது கிரிசில்!

கிரிசில் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இவைதான்!

சில்லறை வணிகம்

சில்லறை வணிகம்

உலக அளவில் சில்லறை வணிகத்தில் ஈடுபடும் பெரிய நிறுவனங்கள் தங்கள் சொந்த நாடுகளில் அதிகமான லாபத்தை ஈட்ட முடிவதில்லை. அதனால் அவர்கள் வருங்காலங்களில் வெளி நாடுகளில் உள்ள சில்லறை வணிகத்தில் அதிக அளவு முதலீடு செய்வதற்கு வாய்ப்பில்லையாம்!

ஒருவேளை சில்லறை வணிகத்தில் ஈடுபடும் ஒரு வெளிநாட்டவர் இந்திய சில்லறை வணிகத்தில் முதலீடு செய்யத் துணிந்துவிட்டால், அதற்கு 2 முதல் 3 ஆண்டுகள் ஆகும். ஆனால் அதற்கு முன்பாக அவர் புதிய க்ரீன்ஃபீல்டு பேக் என்ட் மற்றும் ஃப்ரன்ட் என்ட் அடிப்படை கட்டமைப்புகளில், தனது வியாபார அளவிற்கு ஏற்ப முதலீடு செய்ய வேண்டும்.

 

மல்டி-ப்ரான்ட்

மல்டி-ப்ரான்ட்

இந்திய சில்லறை வணிகத்தில் காலடி எடுத்து வைக்கும் அந்நிய முதலீட்டாளர்கள் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு பேக்-என்ட் மற்றும் ஃப்ரன்ட் என்ட் ஆகியவற்றில், க்ரீன்ஃபீல்டு முதலீட்டைச் செய்ய வேண்டும்

அன்னிய முதலீட்டாளர்கள்
 

அன்னிய முதலீட்டாளர்கள்

"இந்திய சில்லறை வணிகத்தில் ஈடுபட விரும்பும் அன்னிய முதலீட்டாளர்கள், இந்தியாவில் சரியான இடங்களைத் தேர்ந்தெடுத்து தங்களது விற்பனை மையங்களை அமைத்து விற்பனையைத் தொடங்க குறைந்தது 2 முதல் 3 ஆண்டுகள் ஆகுமாம்!

நாடாளுமன்ற தேர்தல்

நாடாளுமன்ற தேர்தல்

இந்தியாவில் நிலவும் நிலையற்ற திரமற்ற அரசியல் சூழல், மற்றும் 2014ல் வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் போன்ற காரணிகளும், இந்திய சில்லறை வணிகத்தில் ஈடுபட விரும்பும் அன்னிய முதலீட்டாளர்களை காலம் தாழ்த்தச் செய்யும் என்கிறது கிரிசில் அறிக்கை!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Chances of big investments in retail sector by foreign investors bleak: Crisil

Despite governments push to invite more foreign investors in the retail sector the chances of an investment are bleak over the coming 2-3 year period, according to Crisil.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X