பங்குகளை டீலிஸ்டிங் செய்வது என்றால் என்ன?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பங்குகளை டீலிஸ்டிங் செய்வது என்றால் என்ன?
பங்குகளை பட்டியலிடுதலிலிருந்து நீக்குதல் (ஷேர் டீலிஸ்டிங்) என்பது பங்கு சந்தையில் இருந்து பட்டியலிட்ட நிறுவனத்தின் பங்குகளை நிரந்தரமாக நீக்குதலாகும். பட்டியலில் இருந்த நீக்கப்பட்டபின் அந்த நிறுவனத்தின் பங்குகள், பங்குச் சந்தையின் வர்த்தகத்தில் ஈடுபடாது.

தன்னார்வ டீலிஸ்டிங் மற்றும் கட்டாய டீலிஸ்டிங்

 

பங்குகளை பட்டியலில் சேர்த்த நிறுவனம் பட்டியலிடும் விதிமுறைகளை மீறி செயல்பட்டால் பங்குச்சந்தைகள் உடனடியாக எடுக்கும் நடவடிக்கை , அந்நிறுவனத்தின் பங்குகளை நிரந்தரமாக பட்டியலில் இருந்து கட்டாயமாக நீக்குதல். ஒரு நிறுவனம் தானாக முன் வந்து தன் பங்குகளை பட்டியலில் இருந்து நீக்க பல காரணங்கள் உள்ளன. நிறுவனத்தின் பின்னடைவு, வேறொரு நிறுவனத்துடன் இணைதல், வேறொரு நிறுவனத்தை கையகப்படுத்துவது போன்றவைகள் இதற்கு சில உதாரணங்கள் ஆகும்.

 

வெளியேறும் வாய்ப்பு

பங்குகளை பட்டியலில் இருந்து நீக்கினால், அந்த பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர்களின் நிலை என்னவாகும்? இந்த நேரத்தில் ஒரு குறிப்பிட்ட விலையில் பங்குதாரர்கள் தங்கள் பங்குகளை ஒப்படைக்க ஒரு வெளியேறும் வாய்ப்பு அளிக்கப்படும். ஆனால் இது கட்டாயம் கிடையாது. தானாக டீலிஸ்டிங் செய்வதற்கும் வலுக்கட்டாயமாக டீலிஸ்டிங் செய்யப்படுவதற்கும் செபி (SEBI) சில வெளியேறும் நெறிமுறைகளை நிர்ணயித்திருக்கிறது.

அதன் படி வெளியேறும் விலையும் கணக்கிடப்படும். தானாக டீலிஸ்டிங் செய்யும்போது வெளியேறும் விலையை புக் பில்டிங் முறைப்படி முடிவு செய்யப்படும். பொதுவாக வெளியேறும் போது கொடுக்கப்படும் அடிநிலை விலை உங்கள் பங்குகள் 26 வாரங்களாக பங்குச்சதையில் செய்த வர்த்தகத்தின் சராசரியான விலைக்கு சமமாக இருக்கும். அதிகப்படியான நிர்ணயிக்கப்பட்ட வெளியேறும் விலைக்கு கேப் (CAP) என்ற எந்த வித உச்ச வரம்பும் கிடையாது. தானாக டீலிஸ்டிங் செய்யும் போது வெளியேறும் விலை சந்தை விலைக்கு சமமாக இருப்பதால் அது முதலீடு செய்தவர்களுக்கு பயனளிப்பதாக இருக்கும்.

வலுக்கட்டாயமாக டீலிஸ்டிங் செய்யப்படும் போது முதலீட்டார்களுக்கு குறைந்த பயனை அளிக்கும். நிறுவனம் நஷ்டப்படுவதினாலயே டீலிஸ்டிங் செய்யப்படுகிறது. அந்நேரத்தில் பங்குகளின் மதிப்பு மிகவும் குறைந்து போவதால் முதலீட்டாளர்கள் பயன் பெறுவது அரிதான ஒன்றே.

பங்குகளை ஒப்படைப்பது அல்லது ஒப்படைக்காமல் போவது:

டீலிஸ்டிங் போது பங்குதாரர்கள் தன பங்குகளை ஒப்படைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை . தன் வசம் உள்ள பங்குகளை ஒப்படைக்காவிட்டால் அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாகவே அவர்கள் நீடிப்பார்கள். டிவிடெண்ட் மற்றும் போனஸ் போன்ற பயன்களை பெறுவதற்கு தகுதியானவர்களாகவே இருப்பார்கள். ஆனால் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பங்குகள் வர்த்தகத்தில் ஈடுபடாததால் அந்த பங்குகளை விற்பதற்கு சிறிது கடினமாக இருக்கும்.

முடிவுரை:

டீலிஸ்டிங் செய்யப்பட நிறுவனம் மீண்டும் லிஸ்டிங் செய்யப்படும் என்ற நம்பிக்கையில் பல பங்குதாரர்கள் தங்கள் கைவசம் உள்ள பங்குகளை ஒப்படைப்பதில்லை. ஆனால் தானாக டீலிஸ்டிங் செய்யும் போது "கூலிங் பீரியட்" என்று ஐந்து வருடங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. டீலிசிடிங் செய்த பின் அந்த பங்குகளை வர்த்தகம் செய்ய முறையான இடம் இல்லாததால், பங்குகளை விற்கும் போது அதற்கான சரியான விலையை நிர்ணயிப்பதில் சிக்கல் ஏற்படும். மேற்கூறிய அனைத்தையும் மனதில் வைத்துக் கொண்டு, சிறு முதலீட்டார்கள் கைவசம் உள்ள பங்குகளின் நிறுவனம் டீலிஸ்டிங் செய்யப்படுவதற்கு முன் பங்குகளை விற்கவோ ஒப்படைப்பதோ தான் புத்திசாலித்தனம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Delisting of Shares – To tender or not to tender?

Delisting of share means permanent removal of shares of a listed company from a stock exchange.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X