இந்தியாவின் தங்க வர்த்தகத்தை அடக்கி ஆளும் 6 தங்க வியாபாரிகள்!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: தங்கம் என்றால் வாய் பிளக்காதவர்கள் யார்தான் இல்லை. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் தங்கம் என்றால் கொள்ளை பிரியம். பொதுவாக பெண்களுக்கு தந்தைமார்கள் அதிக அளவில் தங்கம் போட்டு திருமணம் செய்து வைக்கின்றனர். இதன் காரணம் என்வென்றால் ஆபத்து காலங்களில் தங்கள் பெண்கள் தங்கத்தை கொண்டு பண நெருக்கடியை திர்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கைதான். காலப்போக்கில் தங்கத்தின் தேவையும் சரி, மதிப்பும் சரி உயர்ந்து கொண்டே தான் வருகிறது. தினமும் தங்கத்தின் தேவை கூடிக் கொண்டே போவதால் தங்க வியாபாரம் அணையா நெருப்பாகவே உள்ளது.

பல தங்க வியாபாரிகள் சிரிய அளவில் தொழிலை ஆரம்பித்து தற்பொழுது பெரிய இடத்தை பிடித்துள்ளனர். இது தங்க வர்தகத்திற்கு மிகவும் பெருமை சேர்க்க கூடிய விஷயம். கடந்த வருடம் மட்டும் சுமார் 864 டன் தங்கம் விற்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 2.47 லட்சம் கோடியை தாண்டுகின்றது. அப்பாடா வாய் பிளக்க வைக்கும் தங்க வியாபாரத்தை செய்வது அனைவருக்கும் ஆசை என்றாலும், ஒரு சிலரால் மட்டுமே வெற்றி பெற முடிகின்றது.

தங்க வியாபாரத்திற்கு மூளையும் முதலும் மட்டும் இருந்தால் போதாது அனுபவமும் தேவை. பல தங்க வியாபாரிகள் அனுபவத்துடன் தங்கள் உழைப்பையும் போட்டு முன்னுக்கு வந்துள்ளனர். கடின உழப்பினால் உயரத்தை எட்டி பிடித்திருக்கும் பல தங்க வியாபாரிகளை நாம் காணமுடிகின்றது.

இங்கே இந்தியாவின் தங்க வர்த்தகத்தை அடக்கி ஆளும் ஆறு தங்க வியாபாரிகளை எக்னாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிக்கை பட்டியலிட்டுள்ளது. இவர்கள் இந்தியா மட்டும் அல்ல உலக நாடுகளிலும் தங்களின் கிளைகளை நிறுவி மிகவும் லாபகரமான முறையில் தங்க வியாபாரம் செய்து வருகின்றனர்.

மலபார் தங்கம் மற்றும் வைரம்

மலபார் தங்கம் மற்றும் வைரம்

இவருக்கு தான் பிற்காலத்தில் தங்க வியாபாரிகளின் வரிசையில் முதல் ஐந்து இடத்தில் வருவார் என்றும் சற்றும் எதிர் பார்த்திருக்க மாட்டார். விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்த இவர் ஐஸ் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் தற்பொழுது மலபார் கோல்டு என்னும் தங்க நகை கடை இந்தியா முழுவதும் கிளைகளை பரப்பி உள்ளார். ஒரு வருடத்தின் வர்த்தகம் மட்டும் 12,000 கோடியை எட்டும். இவருடைய பெயர் அகமத்.

அவருடைய 36வது வயதில் இவர் தங்கம் வியாபாரத்தை தொடங்கினார். பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த இவர் அது வரை சம்பாதித்த ஐம்பது லச்ச தொகையை வைத்து காலிகடில் வியாபாரம் ஆரம்பித்து தங்கம் வியாபாரத்தில் முன்னிலை வகிக்கின்றார்.

 

ராஜேஷ் எஃஸ்போர்ட்

ராஜேஷ் எஃஸ்போர்ட்

10ஆம் வகுப்பு இறுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ராஜேஸ் மேத்தா உயர் கல்விக்கு போகாமல் தன் தந்தையின் வியாபாரத்திற்கு அதாவது கவரிங் மற்றும் போலி கற்களை நகைகளுக்கு பதிக்கும் வியாபாரத்திற்கு உதவி புரிந்தார். பதினாறு வயதில் வியாபாரத்தை தொடங்கிய இவர் தற்பொழுது ஆண்டிற்கு 30,000 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்யும் நிறுவனத்திற்கு அதிபராக வளர்ந்து இருக்கின்றார்.

இவர் தன் முதன் முதலில் தன் சகோதரனிடம் இருந்து 1,500 ரூபாய் கடன் பெற்று ஆரம்பித்து தற்பொழுது கோடிக்கு அதிபதியாக வளர்ந்துள்ளார்.

 

செனக்கோ கோல்ட்

செனக்கோ கோல்ட்

இவருடைய கொல்லு தாத்தாவின் வியாரத்தை பார்த்து கொண்டாலும் இவருக்கு பொருப்பு அதிகம். சுவன்கர் சென் என்ற இவர் ஐ.எம்.டி., கஸியாபாத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்ற பின் தனது குடும்பத்தின் எழுப்பத்தி ஐந்து பாரம்பரிய குடும்ப வியாபாரத்தை நடத்தினார். 1964 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிஸியான பகுதியான போபஸாரில் தங்கம் வியாபாரத்தை ஆரம்பித்தார். அப்பொழுது இவருடைய தந்தை ஷங்கர் சென் நடத்திக் கொண்டிருந்தார் சுமார் முப்பது கடைகளை இவரும் பார்த்துக் கொண்டார். தற்பொழுது 900 கோடிக்கு இவர் அதிபதி.

கிருஷ்ணய்யா செட்டி அண்ட் சன்ஸ்

கிருஷ்ணய்யா செட்டி அண்ட் சன்ஸ்

1896 ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த இவர் சோத்தா கிருஷ்ணய்யா செட்டியால் கிருஷ்ணய்யா செட்டி & சன்ஸ் நிறுவப்பட்டது. இந்நிறுவனம் 140 வருடங்கள் பழமையானது. இவர் முதலில் கற்களையும் தங்கத்தையும் வைத்து அழகிய அணிகலன்களை தயாரித்து எளிய முறையில் வியாபாரத்தை ஆரம்பித்தார். பின்பு இவருக்கு மைசூரின் அரசக் குடும்பத்தினரின் அங்கீகாரம் கிட்டியது. பிரிடிஷ் அரசின் அங்கீகாரமும் கிடைத்தது. அதில் இருந்து ஏகோபித்த ஒகோபித்த வளர்ச்சிதான் இவருக்கு.

திரிபோவந்தாஸ் பிஹிம்ஜி சவேரி

திரிபோவந்தாஸ் பிஹிம்ஜி சவேரி

இவர் இந்தியாவின் புகழ்மிக்க தங்க வியாபாரிகளில் ஒருவர். தங்க நகை வியாபாரத்தில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் தனது கிளைகளை பரப்பி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். மும்பையில் உள்ள சவேரி பசாரில் திரிபோவந்தாஸ் சவேரி என்பவாரால் நிறுவப்பட்ட இந்த வியாபாரம் பின் இவருடைய மகனான ஷிரிகந்த் சவேரி என்றழைக்கப் படும் கோபால் தாஸால் பார்த்து கொள்ளபடுகின்றது.

பீமா ஜுவல்லர்ஸ்

பீமா ஜுவல்லர்ஸ்

பீமா ஜுவல்லர்ஸ் நிறுவனம் 1925 ஆம் ஆண்டு பீமா பட்டார் என்பவரால் நிறுவப்பட்டது. இது ஒரு ஐ.எஸ்.ஓ. அங்கீகாரம் பெற்ற நிறுவனம். கேரளத்தை சேர்ந்த ஆலப்புழாவை தலைமை இடமாக கொண்டு செயல்ப்பட்டு வருகிறது. தற்பொழுது இந்தியாவின் தென் பகுதியில் பல இடங்களில் இக்கிளைகளை நிறுவி உள்ளனர். இந்நிறுவனம் சுமார் 8,000 கோடி ரூபாய் அளவு தங்கத்தை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வர்த்தகம் செய்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

6 Jewellers Who Rule the Indian Gold Market

As the market is on a complete turmoil and jewellers are doing good business, here are six Indian jewellers, listed by Economic Times, who are ruling the gold trade market not only regionally and nationally, but also internationally.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X