மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யப் போகிறீர்களா? இதை படிச்சிட்டு போங்க..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: பரஸ்பர நிதிகள் (Mutual Funds) எனப்படும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய விருப்பமா? எந்த மியூச்சுவல் ஃபண்டை தேர்ந்தெடுக்கலாம்? என பல கேள்விகள் உங்கள் மனதில் தோன்றலாம், கூடவே கொஞ்சம் பயமும் இருக்கும். கவலை வேண்டாம் - இதோ உங்களுக்காக ஒரு செக் லிஸ்ட் ரெடி.

 

பெரும்பாலான நேரங்களில், செக் லிஸ்ட்களை அடிப்படையாகக் கொண்டு தான் உங்கள் முடிவுகளை எடுப்பீர்கள். இவற்றை கவனமாக கையாளாத போது உங்களுக்கு நன்மைகளை விட தீமைகள் அதிகமாக ஏற்படும்.

பங்கு சந்தை, மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதில் சற்று முதலீட்டு துறைச் சார்ந்த அறிவு தேவை, பொதுவாக மக்கள் அதை பற்றி அறிவு சிறிதும் இல்லாமல் அதிக லாபத்திற்கு அசைப்பட்டு பங்கு சந்தை, மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்கின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும் மக்களை ஏமாற்றுவது என்பதே தொழிலாக வைத்துக்கொண்டு சிலர் உலவுகின்றனர். இவர்களின் அறிவுறைகளை கேட்டாள் லாபம் தான்!! நமக்கு இல்லை அவர்களுக்கு தான். இவ்வாறு நம்மை திசை திருப்பக் கூடிய சில பொதுவான அணுகுமுறைகளைப் பற்றியும், பங்கு சந்தை, மியூச்சுவல் ஃபண்டுகளில் எவ்வற்றை கொண்டு முதலீடு செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்போம்.

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யப் போகிறீர்களா? இதை படிச்சிட்டு போங்க..

கடந்த கால செயல்பாடுகள்

ஒரு முதலீட்டாளர் தனக்கான பரஸ்பர நிதி முதலீட்டு திட்டத்தை தேர்ந்தெடுக்க மிகவும் பரவலாக, அதிகமான அளவில் பயன்படுத்தப்படும் அளவீடுகளில் இதுவும் ஒன்றாகும். ஆனால், இவ்வாறு கடந்த கால செயல்பாடுகளை மட்டுமே அடிப்படையாக கொண்டு முதலீடு செய்வதை ஒரு முழுமையான அளவீடாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

மாறாக, பல்வேறு விதமான பொருளாதார சூழல்களில் அந்த குறிப்பிட்ட பரஸ்பர நிதி எவ்வாறு செயல்பட்டது என்பதை பார்ப்பது நலம். எடுத்துக்காட்டாக அதிகமான வளர்ச்சி ஏற்பட்ட காலங்கள், பணவீக்கம் அதிகமாக இருந்த காலங்கள், குறைவான சந்தைகளை கொண்டிருந்த காலங்கள் என வேறு வேறு விதமான காலங்களில் நிதிகளின் செயல்பாடுகளை ஆராய்ந்து செல்ல வேண்டியது அவசியமாகும்.

 

இவ்வாறு பல்வேறு விதமான பொருளாதார நெருக்கடி நேரங்களில் அந்த பரஸ்பர நிதிகளின் செயல்பாடுகளை நீங்கள் கவனிக்கும் போது, உங்களுக்கு அந்த நிதி பற்றிய புரிந்துணர்வு சிறப்பாக கிடைப்பது மட்டுமல்லாமல், உங்களுக்கு தேவையான நிதி எது என தீர்மானித்து எளிதில் தேர்ந்தெடுக்கவும் முடிகிறது.

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யப் போகிறீர்களா? இதை படிச்சிட்டு போங்க..

நிதியின் அளவு (Size of the fund)

பொதுவாகவே பெரிய அளவிலான நிதி சிறப்பாக செயல்படும் என்று ஒரு தவறான கண்ணோட்டம் உள்ளது. எனினும், உண்மையை எப்பொழுதும் மறைக்க இயலாது! வாங்குதல் மற்றும் விற்பதன் மூலமாக அவற்றின் செயல்பாட்டை அதிகளவில் பாதிக்காத வகையில் பெரிய அளவிலான நிதிகள், சிறிய அளவிலான நிதிகளை விட சிறப்பாகவும், நல்ல அளவிலான மதிப்பையும் கொடுக்கலாம்.

ஒரு நிதியின் அளவு பெரியதாக இருந்து, அது முதலீட்டாளரின் நம்பிக்கையை பெருக்கினாலும், அதன் அளவிற்கும் எதிர்கால செயல்பாட்டிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதே உண்மை!

நிதி மேலாளர்

உங்களுடைய நிதி மேலாளாரின் கடந்த கால சாதனைகளை, குறிப்பாக அவர்களுடைய உண்மையான குணாதிசயங்கள் மற்றும் மோசமான சூழல்களில் கடைபிடிக்கும் வழிமுறைகள் ஆகியவற்றை அறிந்திருக்க வேண்டும். எனினும், நிதி மேலாளாளரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே உங்களுக்கான பரஸ்பர நிதியை தேர்ந்தெடுப்பது விவேகமான செயல்பாடல்ல.

தொழில் ரீதியாக நிதி மேலாண்மை நடந்து வரும் இன்றைய நாட்களில், ஒரு நிதி மேலாளர் வெளியேறும் போது, அவருடைய இடத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட வழிமுறையை செயல்படுத்தக் கூடிய மற்றும் முன்கூட்டியே இருக்கும் திட்டங்களை செயல்படுத்த ஏற்ற வகையில் நிதி மேலாளார்களை நிதி நிறுவனங்கள் தயாராக வைத்திருக்கின்றன.

மியூச்சுவல் ஃபண்ட் ரேங்கிங்

இந்நாட்களில் பல்வேறு இணைய தளங்களில் எளிதாக கிடைத்து வரும் மியூச்சுவல் ஃபண்ட் ரேங்கிங் அளவீடுகள், முதலீட்டாளரை சிறப்பாக முடிவெடுக்கச் செய்ய உதவாமல், அவரை அதிகளவு குழப்பச் செய்யவே உதவுகின்றன.

ரேங்கிங்கை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஒரு பரஸ்பர நிதியை வாங்குவது, பாதுகாப்பு அம்சங்களுக்காக மட்டுமே ஒரு காரை வாங்குவது போன்றதாகும். முதலீட்டாளராக இருப்பவர் ரேங்கிங் செய்வதற்காக கணக்கில் கொள்ளப்படும் வழிமுறைகளையும் மற்றும் ஒரு நிதி மட்டும் ஏன் மற்ற நிதிகளை விட அதிகமான ரேங்கிங் பெற்றுள்ளது என்றும் புரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் சற்றே கவனித்துப் பார்த்தால் அந்த ரேங்கிங் தளம் கூட, ரேங்கிங்கை அடிப்படையாக கொண்டு பரஸ்பர நிதிகளை வாங்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருப்பதை காண முடியும். அதனை உங்கள் கையிலுள்ள ஒரு கருவியாக பயன்படுத்துங்கள் ஆனால் முடிவெடுப்பதற்கான கருவியாக எண்ண வேண்டாம்.

வழிமுறைகள்

பிரபலமான வழிமுறைகளை அல்லது திட்டங்களைக் கொண்டு உங்களுக்கான நிதிகளை தேர்ந்தெடுப்பது நன்மைகளை தருவதில்லை. ஈக்விட்டி லிங்க்டு சேவிங்ஸ் திட்டங்களை மட்டுமே வாங்குவதால் வரிச் சலுகைகள் கிடைக்கலாம், ஆனால் அது 3-ஆண்டுகளுக்கு எடுக்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டுடன் வருவதால் உங்களுக்கு ஏற்ற திட்டமாக இருக்காது. எனவே, நிதிகளை வாங்குவதற்கு முன்னதாக, தெளிவான திட்டத்துடனும், ரிஸ்க்-ஏஜ் அளவையும் கணக்கில் கொண்டு உங்களுடைய துறைகளில் பல்வேறு திட்டங்களையும் சேர்க்க முயற்சி செய்யுங்கள்.

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு ஒட்டுமொத்த அணுகுமுறைகளையும் உள்ளடக்கிய ஒரு தனியான அளவீட்டு சாதனம் எதுவும் இதுவரையிலும் கிடையாது. எனவே இதில் உள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் குணாதிசயங்களை முழுமையாக படம் பிடித்துக் காட்டுவதும் சற்றே கடினமான முயற்சியாகவே இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top Five ways NOT to invest in Indian Mutual Funds

While investing in mutual funds or while researching the ideal mutual funds to buy, chances are that you have gone through a checklist to make your choice.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X