22 நாட்களில் ரூ.16,000 கோடி அன்னிய முதலீடு!! இந்திய கடன் சந்தையின் வளர்ச்சி..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: நாணய பரிமாற்ற விகிதம் மற்றும் வட்டி விகிதம் ஆகியவற்றின் உறுதியான நிலை காரணமாக நாட்டின் கடன் பத்திர சந்தை உயிர்பூட்டம் பெற்றுள்ளதால், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) இந்த மாதத்தில் மட்டும் சுமார் ரூ.16,000 கோடிக்கு மேல் இந்திய கடன் சந்தையில் முதலீடு செய்துள்ளார்கள்.

 

அமெரிக்க பெடரல் வங்கி அதன் நாணய ஊக்குவிப்பு திட்டத்தை நீக்க துவங்கியிருந்தும் கூட, நாட்டின் கடன் சந்தையில், வலுவான வெளிநாட்டு முதலீடு அதிகரித்து வருகிறது. அமெரிக்கா கடந்த மாதத்தில், தனது மாதாந்திர கடன் பத்திர கொள்முதல் திட்டத்தை 10 பில்லியன் டாலர் குறைத்து 75 பில்லியன் டாலராக மாற்றியுள்ளது, இதேபோன்று ஜனவரியிலும் குறைக்கப்படும் என ஊகிக்கப்படுகிறது.

வளரும் சந்தைகளுக்கு பாதிப்பு

வளரும் சந்தைகளுக்கு பாதிப்பு

அமெரிக்காவின் பெடரல் வங்கியின் நாணய ஊக்குவிப்பு திட்ட மாற்றம் காரணமாக, வளர்ந்துவரும் சந்தைகளில், வெளிநாட்டு முதலீடுகள் குறைவடையலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முதலீட்டு செய்ய சரியான நேரம்

முதலீட்டு செய்ய சரியான நேரம்

இந்நிலையில் இந்தியாவின் நாணய பரிமாற்ற விகிதத்தின் உறுதியாநிலை மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி இரண்டாவது மாதமாக ஜனவரியில் பண வீக்க நெருக்கடியை தளர்த்துவதற்கு உதவியாக வட்டி விகித உயர்வை தவிர்க்கும் என எதிர்பார்க்கபடுவதாலும், இது முதலீட்டுக்கு சாதகமான நிலையை உருவாக்கி முதலீட்டை அதிகரிக்க வழிவகுக்கும் என நம்பப்படுகிறது.

முதலீடு மற்றும் கொள்முதல்
 

முதலீடு மற்றும் கொள்முதல்

ஜனவரி 17 வரை, விற்பனை செய்யப்பட்ட மொத்த கடன் பத்திரங்களின் மதிப்பு ரூ.6,785 கோடியாகும் அதேவேளை, ஜனவரி 17 வரை வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களால் கொள்முதல் செய்யப்பட்ட மொத்த கடன் பத்திரங்களின் மதிப்பு ரூ.22,937 கோடியாக உள்ளது, எனவே கடன் சந்தையில் நிகர முதலீட்டு தொகையாக ரூ.16,152 கோடி உள்ளது.

50,847 கோடி ரூபாய்

50,847 கோடி ரூபாய்

2013ஆம் ஆண்டில், அமெரிக்கவின் குவான்டிடேட்டிவ் ஈஸிங் டேப்பரிங் ஊக்குவிப்பின் விளைவாக, இந்திய ரூபாயின் வீழ்ச்சி காரணமாகவும், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.50,847 கோடி நிகர முதலீட்டுத் தொகையை இந்திய கடன் சந்தையிலிருந்து பெற்றுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

FIIs pump over Rs 16,000 cr in debt market in Jan

Foreign Institutional Investors (FIIs) invested more than Rs 16,000 crore in Indian debt in the current month, thus far, as exchange rate stability and interest rate stability revived sentiment in the country's bond market.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X