தங்கம் மீதான இறங்குமதி வரி உயர்வு.. உள்நாட்டில் விநியோக பற்றாக்குறை..

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: சரிந்து வரும் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், வர்த்தக பற்றாக்குறையை குறைக்கவும் மத்தியரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரி மதிப்பை அதிகரித்துள்ளது. இதனால் 10 கிராம் தங்கம் 445 டாலருக்கு இறக்குமதி செய்யப்படும். முன்பு இந்த இறக்குமதி வரி மதிப்பு 433 டாலராக இருந்தது குறிப்பிடதக்கது.

 

மேலும் வெள்ளியின் மீதான இறக்குமதி மதிப்பை குறைத்துள்ளது. இந்த குறைப்பு வெள்ளி இறக்குமதியின் கீழ் விலை பட்டியலை தடுக்க வழிவகுக்கும் என மத்திய கலால் மற்றும் சுங்க வாரியம் அறிவித்தது. எனவே 1கிலோ வெள்ளி இறக்குமதி வரிமதிப்பு 699 டாலரில் இருந்து 694 டாலராக குறைக்கப்பட்டுள்ளது.

மத்திய கலால் மற்றும் சுங்க வாரியம்

மத்திய கலால் மற்றும் சுங்க வாரியம்

இந்த விலை மாற்றம் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையில் உலகச் சந்தை அடிப்படையில் திருத்தப்பட்டது எனவும் மத்திய கலால் மற்றும் சுங்க வாரியம் தெரிவித்து.

பெட்ரோலித்திற்கு அடுத்து தங்கம்

பெட்ரோலித்திற்கு அடுத்து தங்கம்

இந்தியாவில் பெட்ரோலியத்திற்கு அடுத்து தங்கம் தான் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும் இறக்கமதி செய்யப்படும் தங்கம் மற்றும் வெள்ளிக்கு செய்யப்படும் வரி மாற்றம் அனைத்தும் நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்கவே எனவும் இவ்வாரியம் தெரிவித்துள்ளது.

விநியோக பாற்றாக்குறை
 

விநியோக பாற்றாக்குறை

மேலும் இந்த வரி மாற்றத்திற்கான அறிக்கை வெளியிட்டில், இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு 10 சதவீதம் இறக்குமதி வரியும், இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில் 20 சதவீதத்தை ஏற்றுமதி செய்ய வேண்டும் எனவும், இதனால் உள்நாட்டில் விநியோக பாற்றாக்குறை ஏற்படும் என மத்திய கலால் மற்றும் சுங்க வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

தங்க இறக்குமதி குறையும்

தங்க இறக்குமதி குறையும்

மத்திய கலால் மற்றும் சுங்க வாரியம் வெளியிட்ட அறிக்கையடுத்து நகை கடை உரிமையாளர்கள் கூறுகையில், கடுமையான சட்டதிட்டகளால் நடப்பு நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 550 டன்களை தாண்டாது என தெரிவித்தார்கள். இது கடந்த வருடம் 845 டன்களாக இருந்தது குறிப்பிடதக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Govt raises gold’s import tariff value

The government has hiked the import tariff value on gold to $445 per 10 grams from at $433 per 10 gram earlier.
Story first published: Monday, March 17, 2014, 14:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X