இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த மோடியின் 15 கட்டளைகள்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய பொருளாதாரத்தைச் மேம்படுத்த கடும் நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக வெள்ளிக்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். பொருளாதாரத்தை சீர்படுத்துவதற்கு சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை, ஆனால் கடினமான பேச்சுவார்த்தைகளும் முடிவுகளும் சிறப்பாக செயல்பட்டும் வரும் துறைகளையும் பாத்தித்து விடும்.

 

இதோ மோடியின் அரசு எடுக்கக் கூடிய 15 கடினமான செயல்பாடுகள் இப்போது பார்போம்

எரிபொருள் மானிய சீர்திருத்தம்

எரிபொருள் மானிய சீர்திருத்தம்

டீசலுக்கு மானியம் வழங்குவது விரைவில் காலாவதியாக்கப்படும்; எரிவாயுமற்றும் மண்ணெண்ணையில் மாதாந்திர அதிகரிப்பு முறை கொண்டு வரப்படலாம்.

உணவு மசோதா

உணவு மசோதா

ஏழை மக்களை காக்கும் படியாக, உணவு பாதுகாப்பு மசோதாவின் குறிக்கோள் கொண்டு வரப்படலாம் எனவும் பேச்சு அடிப்படுகிறது.

உர மானியம்

உர மானியம்

விலையில் மாற்றம் : உணவு பாதுகாப்பிற்கு அதிகளவு உரங்களை பயன்படுத்த வேண்டியுள்ளது. எனவே, யூரியாவின் விலையில் சீரமைப்பு ஏற்படும் என்று யூகிக்கப்படுகிறது.

நிதி சேகரிப்பு
 

நிதி சேகரிப்பு

நிதி சேகரிப்பு கொள்கையில் எந்த விதமான மாற்றமும் ஏற்படுத்த புதிய அரசு முற்படவில்லை, அதே பாதையில் தொடர்ந்து சென்றால் அதிகப்படியான முதலீடு கிடைக்கும் என் நிதியமைச்சகம் கணித்துள்ளது.

வரி விகிதத்தில் மாற்றம்

வரி விகிதத்தில் மாற்றம்

தற்போதைய பொருளாதார நிலையில வரிகளை நிலவரத்தை மாற்றினால் கார்ப்பரேட் மற்றும் நுகர்வோர்களின் உணர்வுகளை கடுமையாக பாதிக்கும்.

செலவு கட்டுப்பாடு

செலவு கட்டுப்பாடு

வருமான பற்றாக்குறையில் அதிகப்படியான கவனத்தை செலுத்தி வரும் மோடியின் தலைமையிலான அரசாங்கம், அதிகமான வருமானத்தை பராமரிப்பதற்கு சிறப்பு கவனம் செலுத்தியது.

பொதுத்துறை வங்கிகள் இணைப்பு

பொதுத்துறை வங்கிகள் இணைப்பு

சிறு பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பபட்டு, பெரிய வங்கிகளாக மாற்றப்படலாம். இதனால் வைப்பு நிதிகள், பாதுகாப்பு அதிகரிக்கும்.

நில மசோதாவில் திருத்தம்

நில மசோதாவில் திருத்தம்

நில மசோதாவை மீண்டும் புணரமைத்தல் கட்டுமானமும், தொழில்மயமாக்குதலும் சிறப்பாக செயல்படும் இதனால் நாட்டின் அன்னிய முதலீட்டின் அளவு அதிகரிக்கும்.

பணியாளர் சீர்திருத்தங்கள்

பணியாளர் சீர்திருத்தங்கள்

பணியாளர்கள் அதிகபடியான நன்மையடைய சில சீர்திருத்தங்கள் செய்ய புதிய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை இராஜஸ்தான் அரசாங்கம் ஏற்கனவே சில நடவடிக்கைகளில் பரிசோதித்துள்ளது.

இரயில்வே கட்டணம் அதிகரித்தல்

இரயில்வே கட்டணம் அதிகரித்தல்

இரயில்வே துறை மோடியின் முக்கியமான திட்டங்களில் ஒன்றாக உள்ளது. இந்த துறையின் மாற்றங்களுக்கு அதன் கட்டணங்களை தொடர்ந்து உயர்த்த வேண்டிய தேவை உள்ளது.

வெற்றிகரமான திட்டங்களின் நிர்வாகம்

வெற்றிகரமான திட்டங்களின் நிர்வாகம்

உணவு மானிய மசோதா மற்றும் பணவீக்க மேலாண்மை ஆகியவற்றிற்கு ஏதுவாக பயிர்களின் விலை மெதுவாக அதிகரிக்கப்படும்.

பொதுத்துறை சீர்திருத்தங்கள்

பொதுத்துறை சீர்திருத்தங்கள்

பொதுத்துறை நிறுவனங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்படும், மோசமான நிலையில் உள்ளவை மூடப்படும் என்ற வகையில் அதிரடியான சீர்திருத்தங்களை அமல்படுத்த மோடி அரசு முடிவு செய்துள்ளது.

உணவுக் கழகம் மற்றும் நிலக்கரி நிறுவனம்

உணவுக் கழகம் மற்றும் நிலக்கரி நிறுவனம்

நாட்டின் நிலக்கரி நிறுவனம் தேவையை கோல் இந்தியா நிறைவேற்றவில்லை இது நாட்டின் மின்சார உற்பத்தி மற்றும் வருமானத்தை கடுமையார பாதித்துள்ளது.

அதிக வரிவிலக்கு விகிதம்

அதிக வரிவிலக்கு விகிதம்

நிதி சேகரிப்பின் காரணமாக, தனிநபர் வருமான-வரியில் அதிகளவு நிவாரணம் கிடைக்கப் போவதில்லை.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம்

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம்

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பல்வேறு மோசமான விளைவுகள் உள்ளன. இவற்றை சரி செய்ய, பெரும் மாற்றங்களைப் எதிர்பார்க்கப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

15 tough steps PM Narendra Modi could announce

Prime Minister Narendra Modi on Friday warned of tough measures to repair the economy.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X