ரூ.12,500 கோடி மதிப்புடைய 9 மின் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவின் மின்னாற்றல் தேவைகளை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுக் கொண்டிருக்கும் மத்திய அரசு, ரூ.12,500 கோடிகள் மதிப்புடைய 9 புதிய டிரான்ஸ்மிஷன் திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. மாநிலங்களுக்கிடையில் மின்சாரத்தை வேகமாக கொண்டு செல்வதை உருவாக்கும் நோக்குடன் இந்த திட்டங்களுக்கான அனுமதிகள் தரப்பட்டுள்ளன.

 

ரூ.12,500 கோடி மதிப்புடைய 9 மின் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்

'இந்த 12,500 கோடி மதிப்புடைய டிரான்ஸ்மிஷன் திட்டங்கள் ஹரியானா, சட்டீஸ்கர், உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் மகராஷ்டிரா போன்ற சில மாநிலங்களில் 2,100 மெகவாட் மின்சக்தியை கொண்ட உயர் அழுத்த மின்சார லைன்களை கொண்டு செல்ல உதவும். புதிதாக கட்டப்பட்டு வரும் டிரன்ஸ்மிஷன் உதவி மின்நிலையங்களலல்லாமல் இந்த பங்களிப்பு இருக்கும்' என்று ஒரு அரசு செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

இந்த திட்டங்கள் மத்திய உற்பத்தி நிலையங்களான சிபாட்டில் உள்ள 660 மெகாவட் அளவுடைய தேசிய அனல் மின் கழகத்தின் மின் நிலையம், 1600 மெகாவாட் அளவுடைய காடர்வாரா மற்றும் தனியாருக்கு சொந்தமான சாஸன் அல்ட்ரா மெகா மின் திட்டம் ஆகியவற்றை கொண்டுள்ளது.

ரூ.12,500 கோடி மதிப்புடைய 9 மின் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்

'வடக்கு டிரான்ஸ்மிஷன் அமைப்பை உறுதிப்படுத்தியதன் மூலமாக ஹரியானாவின் நெருக்கடிகளும் குறைக்கப்பட்டுள்ளன' என்று அந்த குறிப்பு சொல்கிறது.

கடந்த சில மாதங்களாகவே அரசின் அனுமதிக்காக வேண்டி இந்த திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டிருந்து குறிப்பிடதக்கது.

இப்பொழுது, அடுத்த மூன்று ஆண்டுகளில் மண்டலங்களுக்கு இடையிலான மொத்த டிரான்ஸ்மிஷன் அளவு 28,000 மெகாவாட் அளவிற்கு அதிகரிக்கும் என்பதால், 2017-ம் ஆண்டு வாக்கில் மொத்த திறன் 66,000 மெகாவாட் ஆக இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

9 transmission projects worth Rs.12,500 crore cleared

The government has approved nine new transmission projects with an aggregate cost of over Rs.12,500 crore to fast track building of high capacity inter-State power transmission lines.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X