கடல் அடியில் அதிவேக இண்டர்நெட் கேபிள் இணைப்பு: கூகுள்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் பசிபிக் கடல் அடியில் அதிவேக இண்டர்நெட் கேபிள் இணைப்பு அமைத்து அதனை செயல்படுத்த இணையத் தேடல் நிறுவனமான கூகுள் உள்ளிட்ட ஐந்து ஆசிய நிறுவனங்கள் 300 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளன.

 

"ஃபாஸ்டர்" என அழைக்கப்படவுள்ள இந்த இணைப்பு, துவக்கத்தில் வினாடிக்கு 60 டெராபைட்டுகள் என்ற வேக அளவில், லாஸ் ஏஞ்சலிஸ், போர்ட்லாண்ட், சான் ஃப்ரான்ஸிஸ்கோ, ஒரெகான் மற்றும் சீட்டில் ஆகிய அமெரிக்க நகரங்களையும் சிகுரா மற்றும் ஷிமா ஆகிய ஜப்பான் நகரங்களையும் இணைக்கும்.

என்இசி நிறுவனம்

என்இசி நிறுவனம்

இந்த இணைய வடக் கட்டமைப்பிற்கான உபகரணங்கள் வழங்கவுள்ள என்இசி நிறுவனம், இந்தக் கட்டமைப்புப் பணி உடனடியாகத் தொடங்கும் எனவும் 2016 ஆம் ஆண்டின் மத்தியில் இணைப்பை வழங்கத் தயாராக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

ஆசிய நாடுகள்

ஆசிய நாடுகள்

இந்தக் கட்டமைப்பு ஜப்பானைத் தவிர அதன் சுற்று வட்டாரத்திலுள்ள பிற ஆசிய பகுதிகளில் இயங்கும் இணைப்புகளையும் கூட இணைக்கும் திறன் வாய்ந்ததாக இருக்கும்.

கூகிள்

கூகிள்

கூகுள் நிறுவனம் தற்போது, தன்னுடைய சொந்த சேவையான "ஃபைபர்" எனப்படும் அதிவேக டிவி மற்றும் இண்டர்நெட் சேவையை கான்சாஸ் நகரத்தில் வழங்கி வருவதோடு அதனை பிற அமெரிக்க நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்ய முயன்றுவருகிறது.

5 நிறுவனங்கள்
 

5 நிறுவனங்கள்

இந்த திட்டத்தில், சைனா மொபைல் நிறுவனத்தின் சர்வதேச கிளை நிறுவனமான சைனா மொபைல் இன்டெர்நேஷனல், சைனா தொலைத் தொடர்பு நிறுவனத்தின் சர்வதேச கிளை நிறுவனமான சைனா டெலிகாம் க்ளோபல் நிறுவனம், டைம் டாட்காம் நிறுவனத்தின் துணை நிறுவனமான க்ளோபல் ட்ரான்ஸிட், கேடிடிஐ கார்போரேஷன் மற்றும் சிங்கப்பூர் டெலிகம்யுனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Google, 5 Asian telcos to invest $300 mn for high speed undersea internet cable network

Search engine Google Inc and five Asian telecom and communications companies have agreed to invest about $300 million to develop and operate a trans-Pacific cable network connecting the United States to Japan.
Story first published: Saturday, August 16, 2014, 11:22 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X