பிரதமர் மோடியின் "மேக் இன் இந்தியா" திட்டம் இன்று துவக்கம்!! பெருந் தலைகள் பங்கேற்பு

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவை வல்லரசு நாடாக உருவாக்க மத்திய அரசு எடுத்துவரும் பல திட்ட நடவடிக்கைகளில் ஒன்றான பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் "மேடு இன் இந்தியா" திட்டம் வியாழக்கிழமை துவங்குகிறது. இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் இந்தியாவை உலக நாடுகளின் உற்பத்தி மையமாக மாற்றுவது தான்.

இத்திட்ட துவக்க விழாவிற்கு நாட்டின் 3,000 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இவ்விழாவில் 3000 நிறுவனங்கள் மற்றும் நிறுவன தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

தனிநபர் வருமானம் மற்றும் வேலைவாய்ப்புகள்
 

தனிநபர் வருமானம் மற்றும் வேலைவாய்ப்புகள்

இத்திட்டத்தின் மூலம் நாட்டு மக்களின் தனிநபர் வருமானமத்தை உயர்த்துவதும், ஒவ்வொரு வருடமும் 1 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதே ஆகும். வேலைவாய்ப்புகளை உருவாக்க நாட்டில் அனைத்து துறைகளும் சிறப்பாக வளர வேண்டும், இதனை கருத்தில் கொண்டே அதிக ஆட்கள் தேவைப்படும் உற்பத்தி துறையை ஊக்குவிக்க மோடி மேடு இன் இந்தியா திட்டத்தை வகுத்துள்ளார்.

விவசாயம்

விவசாயம்

மேலும் நாட்டில் 50 சதவீத மக்கள் தொகை விவசாயத்தில் ஈடுப்பட்டு வருகிறது. ஆனால் நாட்டின் மொத்த உற்பத்தியில் வெறும் 14 சதவீதம் மட்டுமே விவசாயம் பங்கு வகுக்கிறது, அதேபோல மொத்த உற்பத்தியில் 60 சதவீதம் வருமானத்தை அளிக்கும் சேவை துறையில் வெறும் 27 சதவீத மக்கள் தொகை மட்டுமே ஈடுப்பட்டு வருகிறது.

முக்கிய தலைகள்

முக்கிய தலைகள்

வியாழக்கிழமை நடைபெற்றும் இக்கூட்டத்தில் நாட்டின் முக்கிய நிறுவனங்களின் தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர். இதில் முகேஷ் அம்பானி (ரிலையன்ஸ்), சஷி ரூயா (எஸ்ஸார் குருப்), சைரஸ் மிஸ்திரி (டாடா குருப்), ஆனந்த் மஹிந்திரா (மஹிந்திரா குருப்), கிரன் முகமத் ஷா (பயோகான்) மேலும் பல நிறுவன தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

முதற்கட்ட துவக்கம்
 

முதற்கட்ட துவக்கம்

பிரதமரின் மேடு இன் இந்தியா திட்டம் முதற் கட்டமாக நாட்டில் சென்னை, பெங்களுரூ, மற்றும் மும்பையில் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் என்ன செய்ய வேண்டும் என மத்திய அரசிற்கு டாச்சீஸ் வங்கி சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. அப்படி என்ன அறிவுரை வாங்களேன் என்னனு பார்ப்போம்...

பிஸ்னஸ் துவங்க எதுவான திட்டங்கள்!!

பிஸ்னஸ் துவங்க எதுவான திட்டங்கள்!!

உலக வங்கியின் கணிப்பின் படி, வர்த்தகம் மற்றும் தொழில் துவங்க எளிமையான சட்டங்கள் உடைய நாடுகளில் இந்தியா 134வது இடத்தில் உள்ளது, சீனாவே 96வது இடத்தில். இப்பட்டியலில் முன்னேற "எளிமையான திட்டங்கள் மற்றும் குறைவான அரசு உள்ளீடு" அமைக்க வேண்டும் என டாச்சீஸ் வங்கி தெரிவித்துள்ளது.

முதலீடு

முதலீடு

இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் தொழிற்சாலைகள் துவங்க வேண்டும் என்றால் அதற்கு நாட்டின் உள்கட்டமைப்பு சிறப்பாக இருக்க வேண்டும். நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த அதிகப்படியான நிதிகள் தேவை. இத்தகைய நிதிகளை பெற இரண்டு வழிகள் உள்ளது..

1). ஜிடிபியில், உள்நாட்டு சேமிப்பு அளவை 37 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக குறைக்க வேண்டும்.

2). நாட்டின் அன்னிய முதலீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாக மட்டுமே உள்ளது இதை 40 சவீதம் வரை உயர்த்த வேண்டும். எனவும் டாச்சீஸ் வங்கி தெரிவித்துள்ளது.

உள்ளகட்டமைப்பு

உள்ளகட்டமைப்பு

நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ப போக்குவரத்து வசதிகளும் வளர வேண்டும், ஆனால் தற்போது இருக்கும் பொருளாதார வளர்ச்சிக் இணையகக்கூட போக்குவரத்து வசதிகள் இல்லை என டாச்சீஸ் வங்கி குற்றம் சாட்டியுள்ளது.

நகரமயமாக்கல்

நகரமயமாக்கல்

பெரும் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் என்றால் அதிகப்படியான மக்கள் நகரபுறங்களில் குடியேற வேண்டும், ஆனால் இன்னும் இந்தியாவில் 2/3 சதவீத மக்கள் கிராம புறங்களில் உள்ளனர் என்றும், இதுவே நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளதாகவும் டாச்சீஸ் வங்கி தெரிவித்துள்ளது.

தொழிலாளர் சட்ட சீர்திருத்தம்

தொழிலாளர் சட்ட சீர்திருத்தம்

கடைசியாக நாட்டின் தொழிலாளர் சட்டங்கள் அனைத்து 1940ஆம் வருடம் வகுக்கப்பட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ப தொழிலாளர் சட்டத்தில் பல முக்கிய சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் எனவும் டாச்சீஸ் வங்கி வலியுறுத்தியுள்ளது.

முடிவு நாளை

முடிவு நாளை

டாச்சீஸ் வங்கி மத்திய அரசிற்கு பல அறிவுரைகளை வழங்கினாலும், நாட்டின் செயல்பாட்டை உணர்ந்து சிறப்பான திட்டத்தை வடிவமைக்கும் பணியில் மத்திய அரசு முழ்கியிருந்தது. இந்நிலையில் திட்ட அமைப்புகள் நிறைவடைந்து நாளை தலைநகரில் 3000 நிறுவன தலைவர்கள் முன்னிலையில் மோடி நாளை "மேடு இன் இந்தியா" திட்டத்தை வெளியிடுகிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PM Modi's 'Make in India' Push to Drive Investments, Create Jobs

Prime Minister Narendra Modi will unveil his "Make in India" campaign on Thursday, with an aim to turn the country into a global manufacturing hub. The sales pitch for the ambitious plan will likely be made to the world's top 3,000 companies and who's who of India Inc. are likely to be present at the occasion.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more