மத்திய பிரதேசத்தில் ரூ.60,000 கோடி முதலீட்டுத் திட்டம்!! அனில் அம்பானி

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தூர்: ரிலையன்ஸ் குழுமம் வரும் 2020 ஆம் ஆண்டிற்குள் மத்தியப் பிரதேசத்தில் சிமென்ட், மின்சாரம், நிலக்கரி, தொலைத்தொடர்பு ஆகிய வர்த்தகங்களில் சுமார் 60,000 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாக அதன் தலைவர் அனில் அம்பானி தெரிவித்தார்.

 

அம்மாநில அரசு நடத்திய பெருமுதலீட்டாளர் கூட்டத்தில் பேசிய அவர் ரிலையன்ஸ் குழுமம் கடந்த ஐந்து ஆண்டுகளாக நிலக்கரி, மின்சாரம், சிமெண்ட் மற்றும் தொலைத்தொடர்பு போன்ற முக்கியத் துறைகளில் முதலீடு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

30,000 கோடி ரூபாய் முதலீடு

30,000 கோடி ரூபாய் முதலீடு

"மேற்கண்ட முக்கியத் துறைகளில் இந்த குழுமத்தின் மொத்த முதலீடு முப்பதினாயிரம் கோடி ரூபாய்களைத் தாண்டியுள்ளதுடன் இதன் மூலம் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய முதலீட்டாளராகவும் விளங்குகிறது" என அவர் தெரிவித்தார்.

மேக் இன் இந்தியா

மேக் இன் இந்தியா

பிரதமரின் "இந்தியாவில் உற்பத்தி" (make in India) திட்டத்தைக் குறிப்பிடுகையில், "நாங்கள் இந்தியாவில் மட்டுமல்ல "மத்தியப் பிரதேசத்தில் உற்பத்தியை" செய்யவுள்ளோம் என்றார்.

முதலீடு  மற்றும் வேலைவாய்ப்பு

முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு

"நாங்கள் இம்மாநிலத்தில் வரும் 2020 ஆம் ஆண்டிற்குள் 60,000 கோடி ரூபாயாக அதிகரிக்க உறுதி பூண்டுள்ளோம். எங்களுடன் இணைந்துள்ள மத்திய அரசினை முன்னணி தொழிற்துறை மாநிலமாக மாற்ற உறுதி ஏற்கிறோம்" என்றார், மேலும் அவர் இம்மாநிலத்தில் எங்களுடைய தற்போதைய வர்த்தக நடவடிக்கைகள் சுமார் 25000 பேருக்கு வேலை வாய்ப்புகளை தந்துள்ளது"

சமூக நல திட்டங்கள்
 

சமூக நல திட்டங்கள்

"மத்தியப் பிரதேச மக்களுக்காக எங்களிடம் கல்வி, உடல்நலம், கால்நடை நிர்வாகம் ஆகியவற்றை உள்ளடக்கிய பரந்த சமூக பொறுப்புகளை உள்ளடக்கிய திட்டங்களை வைத்துள்ளோம்".

சிவராஜ் சிங் சவுகான்

சிவராஜ் சிங் சவுகான்

"சவுகான் மூன்றாவது முறை முதலமைச்சர் ஆகியுள்ள நிலையில் இந்தப் பிராந்தியத்தில் நீங்கள் செய்துள்ள இந்த சாதனைகளுக்கும் தொலைநோக்கு தலைமைக்கும் என்னுடைய தனிப்பட்ட வாழ்த்துக்கள்" என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Anil Ambani: Reliance Group to invest Rs. 60,000 cr in MP

Reliance Group will invest Rs. 60,000 crore in the power, coal, cement and telecom businesses in Madhya Pradesh by 2020, its Chairman Anil Ambani said today.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X