அதிக லாபம் தரும் மாத வருமான திட்டங்கள்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் அதிகளவில் பிரபலம் ஆகாத மாத வருமான திட்டத்தை (MIP), ஹைப்ரிட் பிளான் என்று அழைக்கப்படும். இத்திட்டத்தில் செய்யப்படும் முதலீடு அனைத்தும் நிதி நிறுவனங்கள் அல்லது வங்கி நிறுவனங்கள் கடன் சந்தையில் முதலீடு செய்து வாடிக்கையாளர்களுக்கு மாத வருமானத்தை அளிக்கப்படுகிறது. அதுவே இத்திட்டத்தின் முழுமையான செயல்முறை.

 

இத்திட்டத்தில் நிலையான வருமான இல்லை என்றாலும், மாத வருமானம் எதிர்பார்க்கும் அனைவருக்கும் இது சிறந்த தேர்வாகும். ஆனால் நிறுவனங்கள் அடிப்படையில் வட்டி விகிதங்கள் மாறுப்படுகின்றன. இந்நிலையில் மாத வருமான திட்டத்திற்கு அதிக வட்டி வருமானம் அளிக்கும் 6 நிறுவனங்களை பார்போம்.

ரிலையன்ஸ் மாத வருமான திட்டம்

ரிலையன்ஸ் மாத வருமான திட்டம்

கடந்த வருடம் ரிலையன்ஸ் மாத வருமான திட்டம் மிகவும் சிறப்பாக செயல்பட்டது. இதன் விளைவாக வாடிக்கையாளர்களுக்கு 23 சதவீத வருமானத்தை அளித்துள்ளது. இந்நிறுவனம் அதிகளவில் அரசாங்க பத்திரங்களில் முதலீடு செய்து வருகிறது, இதனால் லாபம் அளவு சற்று அதிகமாகும்.

பிராங்க்ளின் இந்தியா

பிராங்க்ளின் இந்தியா

பிராங்க்ளின் இந்தியா நிறுவனம் வழங்கும் மாத வருமான திட்டம் தனது வாடிக்கையாளர்களுக்கு 22 சதவீத வருமானத்தை அளித்துள்ளது. மேலும் இந்நிறுவனம் அரசு பத்திரங்கள் மற்றும் பங்குசந்தைகளில் அதிகளவில் முதலீடு வருகிறது. இதனால் லாபம் பெறுவது நிச்சயம். மேலும் இந்நிறுவனத்தின் பாதுகாப்பு அறிந்து முதலீடு செய்ய வேண்டும்.

எஸ்பிஐ மேக்னம்
 

எஸ்பிஐ மேக்னம்

ஒரு வருட திட்டத்திற்கு 17 சதவீத வருமானத்தை அளித்துள்ளது எஸ்பிஐ மேக்னம் திட்டம். நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை விங்கியாக விளங்கும் எஸ்பிஜ, வங்கி பத்திரங்கள் மற்றும் பங்குசந்தையில் அதிகளவில் முதலீடு செய்கிறது.

பிர்லா சன் லைப் MIP

பிர்லா சன் லைப் MIP

நாட்டின் முன்னணி காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான பிர்லா சன் லைப் நிறுவனம் அளிக்கும் மாத வருமான திட்டம் (MIP) கடந்த ஒரு வருடமாக வாடிக்கையாளர்களுக்கு 19 சதவீத வருமானத்தை அளித்துள்ளது. மேலும் இத்திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாயில் இருந்து முதலீடு செய்யலாம்.

கனரா ரோபிகோ (Canara Robeco)

கனரா ரோபிகோ (Canara Robeco)

இந்நிறுவனம் தனது முதலீட்டை அரசு பத்திரங்கள் மற்றும் தனியார் வங்கி நிறுவனங்களான ஐசிஐசிஐ வங்கி மற்றும் எல்&டி போன்ற முன்னணி நிறுவனங்களில் முதலீடு செய்து வருவதால் கடந்த வருடம் வாடிக்கையாளர்கள் செய்த முதலீட்டுக்கு சுமார் 20 சதவீத வருமானத்தை அளித்துள்ளது.

ஐடிஎஃப்சி மாத வருமான திட்டம்

ஐடிஎஃப்சி மாத வருமான திட்டம்

கடந்த ஒரு வருடத்தில் இந்நிறுவன முதலீட்டாளர்களுக்கு 20 சதவீத வருமானத்தை அளித்துள்ளது. மேலும் இந்நிறுவனம் பிற சொத்து மேம்பாட்டு நிறுவனங்களை போல ரியல் எஸ்டேட் மற்றும் பத்திரங்களில் அதிகளவில் முதலீடு செய்து வருகிறது. மேலும் இத்திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்தை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, இன்போசிஸ் போன்ற முக்கிய நிறுவன பங்குகளில் முதலீடு செய்கிறது இந்நிறுவனம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

6 Best Monthly Income Plans or MIPs to Consider for Regular Income

Monthly income plans or MIPs as they are popularly known are largely hybrid plans which invest a large amount of money in debt and can offer you fixed monthly income. It serves as good steady income for those seeking regular income. 
Story first published: Tuesday, January 6, 2015, 15:50 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X