ஒடிசா மாநிலத்தில் முதலீடு செய்ய 'விப்ரோ' நிறுவனத்திற்கு அழைப்பு..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புவனேஸ்வர்: நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமாகத் திகழும் விப்ரோ நிறுவனத்தை ஒடிசா மாநிலத்தில் முதலீடு செய்ய அம்மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது.

விப்ரோ நிறுவன தலைவர் அசிம் பிரேம்ஜி ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் சந்திக்கும் போது, ஒடிசா மாநிலத்தின் தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி மற்றும் சமுகப் பணிகள் ஆகிய துறையில் முதலீடு செய்ய நேரடியாக அழைத்தார்.

மும்பை பங்குச்சந்தையில் விப்ரோ நிறுவனத்தின் வர்த்தக நிலை..

குளோபல் டிரைனிங் சென்டர்

குளோபல் டிரைனிங் சென்டர்

தற்போது இன்போசிட்டியில் இருக்கும் விப்ரோ நிறுவன அலுவலகத்தை விரிவாக்கம் செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டு வரும் நிலையில், பட்நாயக் பூரி-கோனார்க் மெரைன் டிரைவ் பகுதியில் புதிதாகக் குளோபல் டிரைனிங் சென்டரை உருவாக்க வலியுறுத்தினார். இதற்கான இடமும் தயாராக உள்ளதாகவும் நவீன் தெரிவித்தார்.

ஐஐஐடி

ஐஐஐடி

விப்ரோ நிறுவனம் புதிய ஐஐஐடி (Indian Institutes of Information Technology) கல்லூரியை உருவாக்கும் பணியில் ஈடுபட விரும்புவதாகவும் விப்ரோ தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் பிபிபி முறையில் 128 கோடி ரூபாய் வரை முதலீடு செய்வதாகப் பிரேம்ஜி தெரிவித்தார்.

நவீன் பட்நாயக்

நவீன் பட்நாயக்

அசிம் பிரேம்ஜி உடனான சந்திப்பு முடிந்த உடன் நவீன் பட்நாயக் செய்தியாளர்களிடம் கிழக்கு இந்தியாவில் ஐடி மற்றும் கன்சல்டிங் சேவைக்கும் விப்ரோ, புவனேஸ்வர் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட உள்ளது.

இந்நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக இன்போ வேலியில் புதிய அலுவலகத்தைத் திறக்க அரசு அனுமதி அளித்து அதற்கான இடத்தையும் அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

 

விப்ரோ-ஜிஈ கூட்டணி

விப்ரோ-ஜிஈ கூட்டணி

மேலும் விப்ரோ-ஜிஈ கூட்டணியில் ஒடிசாவில் புதிய சுகாதார மையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல் ஒடிசாவில் கல்வித்துறை மேம்படப் புதிய மற்றும் மார்டன் பள்ளிகளை நிறுவ வேண்டும் என நவீன் விப்ரோ நிறுவன தலைவர் அசிம் பிரேம்ஜியிடம் கோரிக்கை விடுத்தார்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Odisha government invites Wipro to invest in information technology christmas

Odisha government today invited Wipro to invest in information technology, health, education and social sectors in the state.
Story first published: Tuesday, December 22, 2015, 11:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X