சன்னி லியோன் பற்றி யாருக்கும் தெரியாத ரகசியங்கள்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

சென்னை: சன்னி லியோன், இவரைப் பற்றி அறிமுகம் தேவைப்படாத அளவிற்கு உலகளவில் இவர் பிரபலமானவர். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில்..!

அனைவருக்கும் இவர் ஒரு பாலிவுட், கோலிவுட், சமீபத்தில் டோலிவுட், ஆபாசப் படங்களில் நடிக்கும் முக்கியமான நடிகை என்ற தெரிந்தாலும், யாருக்கும் தெரியாத முகம் ஒன்று உள்ளது.

சன்னி லியோன்

பொதுவாகவே பெண்களுக்குத் தங்கம் மீது தீராத காதல் உண்டு. இது சன்னி லீயோன்-க்கும் விதிவிலக்கல்ல. தங்கத்தையும் தாண்டி இவருக்குப் பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வதிலும் இவருக்கு ஆர்வம் அதிகமாம்.

ஆம் நீங்கள் சுதாரிப்பது சரிதான். சன்னி லீயோன் தான் இதுவரை காட்டாத ஒரு முதலீட்டு மற்றும் பிஸ்னஸ் வுமென் முகம் பற்றியே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

 

பிரபலங்கள்

இன்றைய வியாபரமயமான உலகில் சினிமா நடிகை, நடிகர்கள் திரைப்படங்களையும் தாண்டி மிகப்பெரிய அளவில் முதலீடு செய்து வருகின்றனர். இந்த வகையில் அமிதாப் பச்சான் ஒரு மிகப்பெரிய வியாபாரி.

ஆனால் அமிதாப் பச்சானையும் தாண்டும் அளவிற்குச் சன்னி லியோனின் வியாபாரங்களும் முதலீடுகளும் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா. நம்பி தான் ஆக வேண்டும்.

 

ரிஸ்க் எல்லாம் ரஸ்க்

பொதுவாகப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப் பல காரணிகளை நாம் ஆலோசிக்க வேண்டும். ஆனால் சன்னி லியோன் சரியான முறையில் ஆய்வு செய்து தான் சம்பாதித்த பணத்தை அதிகளவில் பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருகிறார்.

அதுவும் இந்தியாவில் அமெரிக்கப் பங்குச்சந்தையில். கொஞ்சம் கஷடம் தான்.

 

ரிஸ்க் எடுப்பதிலும் கணக்கீடு வேண்டும்..

நான் என்னுடன் முதலீடு பெரும்பாலும் மியூச்சுவல் பண்ட், பங்குகளில் செய்ய விரும்புவேன். இதில் பெரும் பகுதி என்னுடை சொந்த பிர்பியூம் மற்றும் டியோ பிரான்டான LUST நிறுவனத்தில் செய்துள்ளேன்.

நான் ஒரு control freak என்பதால் எந்த ஒரு முடிவையும் திறன்பட ஆலோசித்து, ஆய்வு செய்து இதன் பின்னரே முதலீடு செய்வேன். ரிஸ்க் எடுப்பதிலும் சில அளவீடும், கணக்கும் வேண்டும் எனக் கூறினார் சன்னி லியோன்.

 

18 வயது முதல் துவக்கம்..

பொழுதபோக்குத் துறையில் என்னுடைய 18வது வயதில் முதல் வர்த்தகத்தைத் துவங்கினேன், அப்போத என்னுடைய எல்லா முதலீடும் என்னுடைய நிறுவனத்திலேயே செய்து வந்தேன். அதுமட்டும் அல்லாமல் என்னுடைய ஆரம்பக் காலத்தில் பொழுதபோக்குத் துறையில் சம்பாதித்த அனைத்தும் பணத்தையும் என்னுடைய நிறுவனத்திலேயே முதலீடு செய்தேன். இது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் உயர்ந்தது.

டெக்னாலஜி

என்னுடைய நிறுவனத்தின் வளர்ச்சிக்காக HTML கற்றுக்கொண்டேன், இதனால் என்னுடைய நிறுவனத்திற்கான இணையதளத்தை நானே உருவாக்கினேன், மேலும் போட்டி எடிட்டிங் கற்றுக்கொண்டேன்.

இதற்காக நான் செலவழித்த நேரம் மிகவும் அதிகம் ஆனால் குறைந்த செலவில் சிறப்பான வர்த்தகத்தை இதன் மூலம் என்னால் உருவாக்க முடிந்தது. நான் செலவிட்ட நேரம் தான் என்னுடைய வாழ்வின் மிகப்பெரிய முதலீடாக அமைந்துள்ளது.

மேலும் என்னுடைய இணையதளத்திற்கு அதிகளவிலான வாடிக்கையாளர்களை ஈர்ப்பது எப்படி என்பதைப் பல நிறுவனங்களிடம், இணையதளங்கள் மூலம் கற்றுக்கொண்டேன்.

 

முதலீடு

இணையதள வர்த்தகம், சினிமா மற்றும் பொதுப்போக்குத் துறையில் நான் சம்பாதித்த பணம் அனைத்தையும் முதலீடு செய்துள்ளேன்.

எப்போது என்னுடைய முதலீட்டில் 40 சதவீதம் பங்குகளிலும், 30 சதவீதம் ரியல் எஸ்டேட் மற்றும் நிலத்தை வாங்குவதிலும் முதலீடு செய்வேன் மீதமுள்ள 30 சதவீதம் தங்கத்தில் முதலீடு செய்வது என்னுடைய வழக்கும் என்று சன்னி லியோன் கூறினார்.

மேலும் அவர் என்னுடைய முதலீட்டின் பெரும் பகுதி அமெரிக்கச் சந்தையில் உள்ள மியூச்சுவல் பண்ட் மற்றும் பங்குகளில் தான் முதலீடு செய்கின்றேன்..

 

இந்தியாவில்..?

அமெரிக்கச் சந்தையில் நான் அதிகளவில் முதலீடு செய்தாலும் இந்திய சந்தையில் முதலீடு செய்வதற்கான சிறந்த தேர்வுகளை ஆராய்ந்து வருகிறேன்.

என்னைப் பொருத்த வரை பாதுகாப்பான முதலீடு என்றால் ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம் தான். தங்கத்தில் நேரடியாக முதலீடு செய்வதை விடவும் தங்கம் பத்திரங்களில் முதலீடு செய்தால் லாபம் மற்றும் பாதுகாப்பு அதிகம் எனத் தனது முதலீடு வாழ்க்கை மற்றும் வழக்கத்தைப் பற்றிக் கூறினார்.

 

ரீட்டையர்மென்ட்

எல்லாவற்றுக்கும் மேலாக அது தான் ஷாக்.

தங்கம், ரியல் எஸ்டேட், பங்குகள், மியூச்சுவல் பண்ட் மட்டும் தான் என்று பார்த்தால், தான் ஓய்வு பெறும் போது நிதி தேவைக்காக யாரிடமும் நிற்கக் கூடாது என்பதற்காகவும் நிலையான வாழ்க்கை முறையைப் பெற அமெரிக்காவில் புகழ் பெற்ற IRA (Individual Retirement Account) திட்டத்தில் முதலீடு செய்துள்ளார்.

 

உலக நடப்புகள்

எங்களது முதலீடுகள் பிரெக்ஸிட் பிரச்சனையின் போது சில சரிவுகளைச் சந்தித்தது. ஆனால் இந்தச் சரிவில் இருந்து கூடிய விரைவில் மீண்டு வருவேன். மேலும் இந்தச் சரிவு என்னுடைய ஓய்வுக் காலத்தைப் பாதிக்காது என்பதை நான் முழுமையாக நம்புகிறேன்.

ரியல் எஸ்டேட்

அமெரிக்காவில் ஹாலிவுட் ஹில்ஸ் பகுதியில் இருக்கும் என்னுடைய 5,000 சதுரடி கொண்ட வீட்டை அதிகளவிலான முதலீட்டைக் கொண்டு மறுசீரமைப்புச் செய்துள்ளேன். எந்த நேரத்திலும் இது என்னை விட்டுப் போகாது என்பது மட்டும் அல்லாமல் கண்டிப்பாக இதனை விற்பனை செய்யும் போது எனக்கு லாபத்தை அள்ளித் தரும் என்பதை நான் கண்மூடித்தனமாக நம்புகிறேன்.

ஹெல்த் இன்சூரன்ஸ்

மேலும் என்னுடைய உடல்நலத்தைப் பாதுகாக்க அமெக்காவில் ஒபாமாகேர் மற்றும் சில தனியார் நிறுவனத்தில் சுகாதாரக் காப்பீட்டு எடுத்துள்ளேன். அமெரிக்காவைப் போல் இந்தியாவில் ஹெல்த்கேர் வசதிகள் மற்றும் இன்சூரன்ஸ் திட்டங்கள் மிகவும் சிறப்பாக உள்ளது என்று சன்னி லியோன் கூறினார்.

பொதுக் காப்பீடு

அமெரிக்காவில் நம்முடைய அனைத்துச் சொத்துக்களையும் இன்சூரன்ஸ் செய்வது அவசியம். இதனால் என்னுடைய கார் முதல் வீடு வரை அனைத்தையும் இன்சூர் செய்துள்ளேன் எனக் கூறினார் சன்னி.

இது அவருடைய பாதுகாப்பு தன்மையை அழகாகக் காட்டுகிறது.

 

என்னுடைய கார்

சன்னி லியோன் BMW 7 சீரியஸ் காரை வைத்துள்ளார். அதற்கும் அவர் இன்சூரன்ஸ் செய்துள்ளதாகச் சன்னி லியோன் கூறினார்.

பேட்டி

பிரபல வர்த்தகச் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ஆபாச நடிகையான சன்னி லியோன் தனது முதலீடு, ஆர்வம், பிஸ்னஸ் குறித்து பேசினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sunny Leone exposing his new face on different side

Sunny Leone exposing his new face on different side - tamil Goodreturns
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns