கிரிப்டோகரன்சிகள் எதிர்காலத்தில் தங்கத்திற்கு போட்டியாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறி வருகின்றனர். ஆனால் நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே பல கரன்சிகளும் சரிவினைக் கண்டு வருகின்றன. குறிப்பாக சந்தை மதிப்பில் முதன்மையான கரன்சியான பிட்காயின் விலை , தொடர்ந்து பெரியளவில் ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகின்றது.
TATA: இனி இந்த 4 துறை தான் இலக்கு.. ரகசியத்தை உடைத்த சந்திரசேகரன்..!
இதற்கிடையில் கடந்த 24 மணி நேரத்தில் நல்ல ஏற்றம் டாப் 6 கிரிப்டோகரன்சிகளை பார்க்கலாம் வாருங்கள்.
பாட்ரான் (2396.91%), லடோக்கன்(Latoken) - 1179.70%, பாப்பே(Pappay) - 178.70%, ShibRWD - 156.34%, miniTesla - 151.42%, metasafemoon - 140.58% ஏற்றத்தில் காணப்படுகின்றன. இன்று பிட்காயின், எதர், எக்ஸ் ஆர் பி உள்ளிட்ட காயின்களின் நிலவரம் என்ன?

பிட்காயின் ஏற்றம்
பிட்காயின் மதிப்பானது தற்போது 1.34% அதிகரித்து, 42,162.46 டாலராக காணப்படுகின்றது.
கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 42,662.24 டாலர்களாகும். இதே இதன் குறைந்தபட்ச விலை 41,167.04 டாலர்களாகும். நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 9.06% சரிவில் தான் காணப்படுகிறது.

எத்திரியம் மதிப்பு
எத்தரியத்தின் மதிப்பானது தற்போது 0.50% குறைந்து, 3,123.87 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 3,191.07 டாலர்களாகும். இதே குறைந்தபட்ச விலை 3,049.73 டாலர்களாகும். நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 9.08% ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.

கார்டானோ நிலவரம்
கார்டானோ மதிப்பானது 5.04% குறைந்து, 1.42 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 1.53 டாலராகவும், இதே குறைந்தபட்ச மதிப்பு என்பது 1.36 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 10.49% ஏற்றம் கண்டுள்ளது. இதன் புதிய வரலாற்று உச்சம் 3.10 டாலர்களாகும். இன்று தான் எட்டியுள்ளது.

எக்ஸ்ஆர்பி நிலவரம்
எக்ஸ்ஆர்பி-யின் மதிப்பானது 0.21% குறைந்து, 0.739457 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.776டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.72 டாலராகும். இதன் வரலாற்று உச்ச விலை 3.40 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து உச்ச விலை 1.96 டாலராகும். இது நடப்பு ஆண்டில் 10.25% குறைந்துள்ளது.

டோஜ்காயின் தற்போதைய நிலவரம்
டோஜ்காயின் மதிப்பானது 0.91% அதிகரித்து, 0.164443 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.17 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.16 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 3.09% சரிவைக் கண்டுள்ளது.

யுனிஸ்வாப் மதிப்பு
யுனிஸ்வாப் மதிப்பானது 4.91% குறைந்து, 15.63 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 16.47 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 14.24 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 9.92% சரிவில் தான் உள்ளது.

போல்கடோட் நிலவரம் என்ன?
போல்கடோட் மதிப்பானது தற்போது 1.88% குறைந்து, 24.25 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 25.38 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 23.70 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 8.09% சரிவில் தான் உள்ளது.