மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் பங்குச்சந்தையில் மட்டும் தான் முதலீடு செய்யப்படுகிறதா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே.

 

வங்கியில் பிக்சட் டெபாசிட் மற்றும் தபால் நிலையங்களில் பிக்சட் டெபாசிட் ஆகியவற்றை விட அதிக வட்டி தரும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை அதிக மக்கள் விரும்புகின்றனர்.

முதலீட்டுக்கு பாதுகாப்பு மற்றும் 10 முதல் 12 சதவீத வருமானம் ஆகியவையே மியூச்சுவல் ஃபண்டில் அதிக மக்கள் முதலீடு செய்ய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் இந்த ஒன்றை அவசியம் செய்ய வேண்டும்.. அது என்ன?மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் இந்த ஒன்றை அவசியம் செய்ய வேண்டும்.. அது என்ன?

மியூச்சுவல் பண்ட்

மியூச்சுவல் பண்ட்

பெரும்பாலும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்கள் அவர்களுடைய முதலீட்டு பணம் முழுவதுமாக பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும் என்றும் அதனால் ரிஸ்க் அதிகம் என்றும் நினைத்து வருகின்றனர். ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் பங்குச் சந்தையில் மற்றும் முதலீடு செய்யப்படவில்லை என்பதுதான் உண்மை.

பாதுகாப்பான முதலீடு

பாதுகாப்பான முதலீடு

கேளிக்கை பூங்காக்களில் இருக்கும் ரோலர் கோஸ்டர் என்பது வெளியிலிருந்து பார்ப்பதற்கு ஆபத்தானது போல தெரிந்தாலும், அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்கள் அதில் ஏற்படுத்தப்பட்டிருக்கும். அதேபோல் தான் நம்முடைய முதலீடுகள் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டாலும், அந்த முதலீடு பாதுகாப்பு அம்சங்களுடன் முதலீடு செய்யப்படுகிறது என்பதை முதலீட்டாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பங்குச்சந்தை
 

பங்குச்சந்தை

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் பங்குச் சந்தையின் அபாயம் நிறைந்தது என்று கூறப்பட்டாலும் முதலீட்டாளர்களின் எண்ணத்திற்கு ஏற்ப பல வகையான மியூச்சுவல் ஃபண்ட்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சில முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டில் இருந்து அதிக வருமானம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் அவர்கள் அதிக ரிஸ்க் எடுக்கும் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம் செய்யலாம்.

ஈக்விட்டி ஃபண்டுகள்

ஈக்விட்டி ஃபண்டுகள்

ஈக்விட்டி ஃபண்டுகளில் ரிஸ்க் அதிகம் இருந்தாலும் நீண்ட கால முதலீட்டு தேர்வாக இருந்தால் நிச்சயம் இந்த ஃபண்டுகள் அதிக வருமானத்தை முதலீட்டாளர்களுக்கு கொடுக்கும். பங்குச்சந்தை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்பவர்கள் அந்த ஏற்ற இறக்கம் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்பதே நிதி ஆலோசர்களின் அறிவுரையாக உள்ளது.

ரிஸ்க் குறைவு

ரிஸ்க் குறைவு

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் பங்குச்சந்தையில் முதலீடு செய்யாமல் வங்கிகள், தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள், அரசு அமைப்புகளின் மூலம் வழங்கப்படும் பாண்டுகள், பணச்சந்தை சார்ந்த ஆவணங்கள் ஆகியவற்றிலும் முதலீடு செய்யப்படுகின்றன. இதில் ரிஸ்க் குறைவு என்பதும், ஈக்விட்டி ஃபண்டுகளை ஒப்பிடும்போது குறைந்த வருமானத்தை தரும் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள் இந்த வகை ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

பிக்சட் டெபாசிட்

பிக்சட் டெபாசிட்

வங்கியில் பிக்சட் டெபாசிட் செய்யும் போது கிடைக்கும் வருமானத்தை விட இதில் அதிக வருமானம் கிடைக்கும் என்பதும் நமது பணத்திற்கு 100 சதவீத பாதுகாப்பு உறுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே நம்முடைய மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் பங்குச் சந்தையில் மட்டுமே முதலீடு செய்யப்பட்டு இருக்கும் என்றும், இதனால் நமது முதலீடு அபாயத்திற்கு உட்பட்டது என்று எண்ணாமல் பங்கு சந்தையில் முதலீடு செய்யாத ஃபண்டுகளில் முதலீடு செய்தால் முழுமையான பாதுகாப்புடன் சராசரியான வருமானத்தை பெறலாம் என்பதையும் முதலீட்டாளர்கள் தெரிந்து வைத்து கொள்ள வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Do Mutual Funds invest only in stocks?

There are many types of Mutual Funds for people who interested in investment. Some investors want high returns and some people wants medium returns. High return investors can invest in Equity Mutual Funds.
Story first published: Saturday, October 8, 2022, 8:34 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X