விற்கிற விலைக்கு 15 கிலோ தங்கத்த கடல்லயா போடுவாங்க.. என்ன காரணம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 6.3 கோடி ரூபாய் மதிப்புள்ள 15 கிலோ தங்கத்தினை, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடலோர காவல்படையினர் மீட்டுள்ளனர்.

 

தங்கம் விலையானது விண்ணைத் தொடும் அளவுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ராமேஸ்வரத்துக்கு படகு மூலம் பெருமளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து ராமேஸ்வரம் அருகேயுள்ள மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் மார்ச் 3ம் தேதி மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் இணைந்து மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.

மண்டபம் பகுதியில் ரோந்து

மண்டபம் பகுதியில் ரோந்து

அப்போது மண்டபம் அருகே கடலில் சென்று கொண்டிருந்த ஒரு பைபர் படகை நிறுத்த முயன்றதாகவும், ஆனால் அந்த படகில் இருந்த 2 பேர் படகை நிறுத்தாமல் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடலோர காவல்படையினர் அந்த படகை விரட்டி பிடித்தனராம். அவர்களிடம் அப்போதைக்கு எதுவும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

தங்கக் கட்டிகள் கடத்தல்

தங்கக் கட்டிகள் கடத்தல்

எனினும் தீவிர விசாரணைக்கு பின்னர்தான் அவர்கள் இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகளை கடத்தி வந்தவர்கள் என தெரிய வந்ததுள்ளது. மேலும் அந்த தங்கக் கட்டிகளை, கடலோர காவல் படை துரத்தியதை தொடர்ந்து கடலில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் வீசிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

வீசிய இடத்தினை அடையாளம்
 

வீசிய இடத்தினை அடையாளம்

அதனை தொடர்ந்து மார்ச் 4ம் தேதி காலை மண்டபத்தில் இருந்து மீண்டும் ஹோவர் கிராப்ட் கப்பல் மூலம் இந்திய கடலோர காவல்படையினரும், மத்திய வருவாய் புலனாய்வு துறையினரும் அந்த வாலிபர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு நடுக்கடலுக்கு புறப்பட்டனர். தங்கத்தை வீசியதாக கூறப்பட்ட இடத்தை அவர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

எவ்வளவு மதிப்பு

எவ்வளவு மதிப்பு

பின்னர் கடலில் இருந்து மீட்கப்பட்ட அந்த தங்கக்கட்டிகள் இந்திய கடலோர காவல்படை நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் மதிப்பு 15 கிலோ தங்க கட்டிகள் என்றும், இதன் மதிப்பு சுமார் 6.3 கோடி ரூபாய் எனவும் கூறப்படுகிறது.

கடத்தல் அதிகரிப்பு

கடத்தல் அதிகரிப்பு

தங்கம் விலையானது அதிகரித்து வரும் இந்த நிலையில் நாளுக்கு நாள் தங்கம் கடத்தலும் அதிகரித்து வருகிறது. அரசு என்னதான் நடவடிக்கை எடுத்து வந்தாலும் அனுதினமும் விமான நிலையங்களில் ஏதேனும் ஒரு சில நபர்கள் இப்படி தங்கத்தினை கடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கடல் வழியாகவும் தங்கம் கடத்தல் அதிகரித்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold bar worth Rs.6.3 Crore Seized from Sea

The coast guard and DRI officials Wednesday recovered gold bars worth of Rs.6.3 crore.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X