ஒரு பக்கம் கொரோனா வைரஸ் உலக பொருளாதாரம் தொடங்கி உள்ளூர் வாசிகள் வரை அனைவரின் பிழைப்பையும் காலி செய்து கொண்டு இருக்கிறது.
மறு பக்கம் தங்கம், டாப் கியரில் விலை ஏறிக் கொண்டு இருக்கிறது. எந்த அளவுக்கு விலை ஏறி இருக்கிறது என்றால், மீண்டும் தன் பழைய உச்ச விலையைத் தொடும் அளவுக்கு அதிகரித்து இருக்கிறது.
அப்படி என்ன பெரிதாக தங்கம் விலை அதிகரித்துவிட்டது, எவ்வளவு அதிகரித்து இருக்கிறது என்பதைத் தான் விரிவாகப் பார்க்க இருக்கிறோம்.
1600 டாலர்
பொதுவாக சர்வதேச தங்கம் விலை ஏறினால், இந்தியாவிலும் தங்கத்தின் விலை அதிகரிக்கும். சர்வதேச அளவிலும் தங்கம் தன் பழைய உச்ச விலையான 1,680 டாலரைத் தொட முயற்சித்துக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. நேற்று ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கத்தின் விலை 1,628 டாலரைத் தொட்டு வர்த்தகமானது.
விலை ஏற்றம்
கடந்த மார்ச் 19 அன்று சர்வதேச தங்கத்தின் விலை 1,471 டாலருக்கு வர்த்தகமானது. ஆனால் கடந்த 8 நாட்களில் சர்வதேச தங்கம் விலை 1,628 டாலர் வரை அதிகரித்து இருக்கிறது. ஆக விலை ஏற்றம் கண் கூடாகத் தெரிகிறது. அனலிஸ்ட்கள் சொல்வது போல இன்னும் தங்கம் விலை ஏற வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.
இந்தியாவில் 44,500
இந்தியாவின் எம் சி எக்ஸ் ஃப்யூச்சர்ஸ் சந்தையில் 10 கிராம் தங்கத்துக்கான ஃப்யூச்சர்ஸ் மார்ச் 26 அன்று அதிகபட்சமாக 44,535 ரூபாயைத் தொட்டது. நேற்று மார்ச் 27, 2020 அன்று அதிகபட்சமாக 43,760 ரூபாயைத் தொட்டு இருக்கிறது.
38,400 டூ 44,500
இந்தியாவின் தங்க ஃப்யூச்சர்ஸ், சுமார் 10 நாட்களுக்கு முன்பு தான் தன் குறைந்தபட்ச விலையாக 38,400 ரூபாயைத் தொட்டது. ஆனால் சில தினங்களுக்கு முன்பு மீண்டும் தன் உச்ச விலையான 44,961 ரூபாயை நோக்கி நகரும் விதத்தில் 44,535 ரூபாயைத் தொட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை தங்கம்
சென்னையில், கடந்த மார்ச் 19, 2020 அன்று 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் 41,920 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடந்த எட்டு நாட்களில் அதே 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கணிசமாக அதிகரித்து நேற்று 45,300 ரூபாய்க்கு விற்கப்பட்டு இருக்கிறது.
பவுனுக்கு எவ்வளவு ஏற்றம்
24 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த எட்டு நாட்களில் சுமாராக 338 ரூபாய் அதிகரித்து இருக்கிறது. எனவே ஒரு பவுன் (8 கிராம்) 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சுமாராக 2,700 ரூபாய் அதிகரித்து இருக்கிறது. இன்னும் விலை ஏறுமா..?
தங்கம் விலை ஏறலாம் ஏன்?
அமெரிக்காவையே புரட்டி எடுத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பயம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 74 ரூபாய்க்கு மேல் இருப்பது, சர்வதேச அளவில் தங்கம் விலை அதிகரிப்பது, உலக பங்குச் சந்தைகள் இன்னும் நிலை பெறாமல் பெரிய ஏற்ற இறக்கங்களுடன் வர்த்தகமாவது, தொடர்ந்து பல நாடுகளிலும் வங்கிக் கடனுக்கான வட்டி விகிதங்களைக் குறைப்பது... போன்ற காரணங்களால் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.
More From GoodReturns

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?



Click it and Unblock the Notifications