தங்கத்தை மீண்டும் வாங்கி குவிக்கும் ரஷ்யா..இனி விலை எப்படியிருக்கும்.. இன்று ஜாக்பாட் தான்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் (gold) விலையானது வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்றும் சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக சரிவில் காணப்படுகின்றது.

 

இந்த சரிவானது இப்படியே தொடருமா? அடுத்து என்ன செய்யலாம்? கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன?

டெக்னிக்கல் பேட்டர்ன் எப்படியுள்ளது? ஃபண்டமெண்டல் காரணிகள் என்ன சொல்கிறது? முக்கிய லெவல்கள் என்னென்ன? தங்கம் விலை மீண்டும் வழக்கம்போல ஏற்றம் காணத் தொடங்கி விடுமா? நிபுணர்களின் கணிப்பு என்ன வாருங்கள் பார்க்கலாம்.

FedEx புதிய சிஇஓ-வான ராஜ் சுப்ரமணியம்.. யார் இவர்..? FedEx புதிய சிஇஓ-வான ராஜ் சுப்ரமணியம்.. யார் இவர்..?

2வது நாளாக சர்பிரைஸ்

2வது நாளாக சர்பிரைஸ்

வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்றும் தங்கத்தின் விலையானது தொடர்ந்து சரிவிலேயே காணப்படுகின்றது. இது முதலீட்டாளர்களுக்கு பெரும் சர்பிரைஸ் ஆக உள்ளது. இதற்கிடையில் இந்த சரிவானது இப்படியே தொடருமா? மேலும் விலை இரண்டாவது நாளாக இன்றும் குறைந்துள்ள நிலையில் இன்று வாங்கலாமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தங்கத்தினை வாங்கி குவிக்கும் ரஷ்யா

தங்கத்தினை வாங்கி குவிக்கும் ரஷ்யா

ஓரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் உக்ரைன் ரஷ்யா போருக்கு மத்தியில், இவ்விரு நாடுகளும் மீண்டும் துருக்கியில் பேச்சு வார்த்தையில் ஈடுபடவுள்ளன. இதற்கிடையில் ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பல்வேறு தடைகளுக்கு மத்தியில், ரஷ்யாவின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சி காணத் தொடங்கியுள்ளது. இந்த நெருக்கடியான நிலையை சமாளிக்க ரஷ்யாவின் மத்திய வங்கியானது உள்நாட்டு வங்கிகளிடம் மீண்டும் தங்கத்தினை கொள்முதல் செய்ய ஆரம்பித்துள்ளது. இது பெரியளவில் தங்கத்தின் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தாவிட்டாலும், தங்கம் விலையில் சற்றே தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

எவ்வளவு விலை நிர்ணயம்?
 

எவ்வளவு விலை நிர்ணயம்?

இது மார்ச் 28 முதல் ஜூன் 30 வரையில் ஒரு கிராமுக்கு 5000 ரூபிள் ($52)என்ற நிலையான விலையினை செலுத்தும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது தற்போதைக்கு $68க்கு கீழாக உள்ளது. இது உள்ளூர் தங்கத்தினை தடையின்றி உற்பத்தி செய்ய தூண்டும் என்றும் ரஷ்ய மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மொத்தத்தில் இது தங்கத்தின் தேவையினை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் வாங்குவது நிறுத்தம் ஏன்?

தங்கம் வாங்குவது நிறுத்தம் ஏன்?

டாலருக்கு எதிரான ரூபிளின் மதிப்பு மிக மோசமான சரிவினைக் கண்டுள்ள நிலையில், ரஷ்யர்கள் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தினை வாங்க தொடங்கியுள்ளனர். மேலும் ரஷ்யாவில் உள்ள முக்கிய வங்கிகள் நுகர்வோர் தங்கம் மற்றும் காயின்களில் அதிகளவில் முதலீடு செய்வதாக கூறியுள்ளது. 2 வாரங்களுக்கு முன்பு ரஷ்ய மத்திய வங்கி வழக்கமான நுகர்வோரின் தேவை அதிகரிப்பால், உள்ளூர் வங்கிகளில் தங்கம் வாங்குவதை நிறுத்துவதாக அறிவித்தது.

டாலருக்கு மாற்று இது தான்

டாலருக்கு மாற்று இது தான்

ரஷ்யாவின் மிகப்பெரிய நிதி நிறுவனமான Sberbank, கடந்த சில வாரங்களாகவே தங்கம் மற்றும் பல்லேடியத்தின் தேவையானது 4 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கிடையில் ரஷ்ய நிதி அமைச்சகமும், அமெரிக்க டாலருக்கு மாற்றாக தங்கத்தினை குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவின் தடை

அமெரிக்காவின் தடை

கடந்த வாரம் அமெரிக்கா ரஷ்யாவின் மத்திய வங்கியுடனான அனைத்து தங்க பரிவர்த்தனையையும் தடை செய்தது. இதன் மூலம் அமெரிக்காவினை சேர்ந்தவர்கள், ரஷ்யர்களுடம் தங்கம் தொடர்பான பரிவர்த்தனை உட்பட , எந்தவொரு பரிவர்த்தனையிலும் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

ரூபிள் அல்லது தங்கம்

ரூபிள் அல்லது தங்கம்

இந்த வகையான தடைகள் ரஷ்யாவுடனான பரிவர்த்தனைகளை தடுக்கும். இது ரஷ்யாவில் நிச்சயம் குறிப்பிடத்தக்க தாக்கத்தினை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதுமட்டும் அல்ல தங்கத்தின் விலையிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

உக்ரைன் மீதான போருக்கு மத்தியில் பல்வேறு தடைகள் ரஷ்யாவின் மீது விதிக்கப்பட்டு வரும் நிலையில், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நட்பு அல்லாத நாடுகள், அதற்கு ரூபிள் அல்லது தங்கத்தில் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

6 வருட உச்சத்தில் டாலர்

6 வருட உச்சத்தில் டாலர்

தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான டாலரின் மதிப்பு 6 வருட உச்சத்தினை எட்டியுள்ளது. இதற்கிடையில் அமெரிக்க பத்திர சந்தையும் வலுவாக காணப்படுகின்றது. இதன் காரணமாக தங்கம் விலையில் பெரும் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதனை இன்னும் அழுத்தம் கொடுக்கும் விதமாக பத்திர சந்தையும் மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இதுவும் வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறைய வழிவகுத்துள்ளது.

நிபுணர்களின் பரிந்துரை

நிபுணர்களின் பரிந்துரை

தங்கம் விலையானது சரியும் போதெல்லாம் வாங்கி வைக்கலாம். இன்னும் இதனை தெளிவாக சொல்லவேண்டுமெனில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வாங்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் தற்போது மீடியம் டெர்மில் இன்னும் குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

டெக்னிக்கல் என்ன சொல்கிறது?

டெக்னிக்கல் என்ன சொல்கிறது?

டெக்னிக்கலாக தங்கத்தின் விலையானது மீடியம் டெர்மில் இன்னும் சரியலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக நீண்டகால நோக்கில் இன்னும் ஒரு தெளிவில்லாத நிலையே உள்ளது. ஆக சற்று பொறுத்திருந்து வாங்கி வைப்பது நல்லது. தங்கத்தின் அடுத்த முக்கிய சப்போர்ட் லெவலாக 1895 டாலர் உள்ளது. இதனை உடைத்தால் இன்னும் சரியலாம். அதே நேரம் கடந்த வார உச்சமான 1967.20 டாலர்களை உடைத்தால் மீண்டும் ஏற்றம் காணலாம். அதுவரை மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்யலாம்.

காமெக்ஸ் தங்கம்

காமெக்ஸ் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று, 2வது நாளாகவும் சரிவிலேயே காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸுக்கு 17.20 டாலர்கள் குறைந்து, 1922.50 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும் இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, உச்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

காமெக்ஸ் வெள்ளி

காமெக்ஸ் வெள்ளி

தங்கம் விலையினை போலவே வெள்ளியின் விலையும் சரிவில் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 0.70% குறைந்து, 25.020 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. எனினும் வெள்ளி விலையும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம்

எம்சிஎக்ஸ் தங்கம்

இந்திய சந்தையினை பொறுத்தவரையில், தங்கம் விலையானது சர்வதேச சந்தையின் எதிரொலியாக சரிவிலேயே காணப்படுகின்றது.தற்போது 10 கிராமுக்கு 331 ரூபாய் குறைந்து, 51,240 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று தொடக்கத்தில் கீழாக தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையும் உடைத்துள்ளது. இதன் காரணமாக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி

எம்சிஎக்ஸ் வெள்ளி

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் வெள்ளி விலையானது பலத்த சரிவிலேயே காணப்படுகின்றது. இது தற்போது கிலோவுக்கு 413 ரூபாய் குறைந்து, 67,685 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. இதுவும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைத்துள்ளது. இதன் காரணமாக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

ஆபரண தங்கம்

ஆபரண தங்கம்

சர்வதேச சந்தையின் எதிரொலியாக, ஆபரணத் தங்கத்தின் விலையும் இன்று சரிவில் காணப்படுகின்றது.

தற்போது சென்னையில் கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 4796 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, 38,368 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது 4 நாட்களில் ஒரு நாள் மட்டும் மாற்றமின்றி காணப்பட்ட நிலையில், இன்று மீண்டு சரிவினைக் கண்டுள்ளது.

தூய தங்கம்

தூய தங்கம்

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 33 ரூபாய் குறைந்து, 5232 ரூபாயாகவும், இதுவே 8 கிராமுக்கு 264 ரூபாய் குறைந்து, 41,856 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 52,320 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை

வெள்ளி விலை

சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையும் இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. இன்றும் கிராமுக்கு 40 பைசா குறைந்து 72.30 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 723 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 400 ரூபாய் குறைந்து, 72,300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதுவே நீண்டகால நோக்கில் இன்று வெளியாகவிருக்கும் பேச்சு வார்த்தை குறித்தான அறிவிப்புகள், டாலர் மதிப்பு, பத்திர சந்தை ஏற்றம், தேவை உள்ளிட்ட பல காரணிகளும் தீர்மானிக்கலாம். ஆக சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.ஆபரணத் தங்கத்தினை பொறுத்தவரையில் தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold price on march 29th, 2022: Russia's central bank resumed its gold purchases

gold price on march 28th, 2022: gold prices down on first day of the week/தங்கம் கொடுத்த சூப்பர் சர்பிரைஸ்.. முதல் நாளே சரிவு.. எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X