வட்டி அதிகரிப்பு பெரிசா கைகொடுக்கலயே.. தங்கம் விலை இன்றும் ஏற்றம்.. ஏன் என்ன காரணம்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம். இதனால் வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்கலாம். இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம். இதனால் தங்கம் விலை குறையலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மத்திய வங்கியானது வட்டியினை 75 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ள போதிலும் தங்கம் விலை பெரியதாக சரியவில்லை.

 

மாறாக உச்சத்தினையே எட்டியுள்ளது என்ன காரணம். ஏன் இந்த ஏற்றம்? வாருங்கள் பார்க்கலாம்.

இன்று சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றது. ஆக ஆபரண தங்கம் விலை எப்படியுள்ளது? கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன வாருங்கள் பார்க்கலாம்.

2வது நாளாக சரிந்த தங்கம் விலை.. இனியும் சரியலாமாம்.. நிபுணர்கள் சூப்பர் கணிப்பு!2வது நாளாக சரிந்த தங்கம் விலை.. இனியும் சரியலாமாம்.. நிபுணர்கள் சூப்பர் கணிப்பு!

டாலரின் மதிப்பு என்னவாயிற்று?

டாலரின் மதிப்பு என்னவாயிற்று?

தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான டாலரின் மதிப்பானது, சற்று சரிவிலேயே காணப்படுகின்றது. இது மேற்கொண்டு தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. எதிர்பார்ப்பினை போலவே அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது 75 அடிப்படை புள்ளிகள் வட்டி விகித்தத்தினை அதிகரித்துள்ளது. எனினும் டாலரின் மதிப்பு சரிவிலேயே காணப்படுகின்றது.

ஏன் டாலர் மதிப்பு சரிவு

ஏன் டாலர் மதிப்பு சரிவு

1994 ஆம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்காவில் பொருளாதார ரீதியாக எடுக்கப்பட்ட முக்கிய முடிவாக இது பார்க்கப்படுகிறது. வட்டி விகிதம் காரணமாக அமெரிக்காவில் பணவீக்கத்திற்கு எதிரான போரைத் தீவிரப்படுத்தி இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து கூறி வருகின்றனர். அதோடு வட்டி அதிகரிப்பு மட்டுமே பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர போதாது என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் தான் டாலரின் மதிப்பு சரிவினைக் கண்டுள்ளது.

பத்திர சந்தையும் சரிவு
 

பத்திர சந்தையும் சரிவு

அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவினைக் கண்டுள்ள அதே நேரத்தில் பத்திர சந்தையும் சற்று சரிவில் காணப்படுகின்றது. ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் 75 அடிப்படை புள்ளிகள் வட்டி அதிகரிப்பானது பொதுவானதாக இருக்காது. பணவீக்கம் இயல்பு நிலைக்கு திரும்பினால், வட்டி விகிதம் இயல்பு நிலைக்கு திரும்பும். வட்டி விகிதங்களை அதிகரிக்க வேண்டிய தீவிரம் இருக்காது என்றும் கூறியுள்ளார்.

சர்வதேச நிலவரம்?

சர்வதேச நிலவரம்?

பவலின் இந்த அறிவிப்புக்கு பிறகே தங்கம் விலையானது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. டாலரின் மதிப்பும் பின் வாங்க தொடங்கியுள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது அவுன்ஸூக்கு 13.55 டாலர்கள் அதிகரித்து, 1833.25 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இதே வெள்ளியின் விலையும் 1% மேலாக அதிகரித்து, 21.657 டாலராக வர்த்தகமாகி வருகின்றது.

 ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில், ஆபரணத் தங்கம் விலையும் ஏற்றம் கண்டுள்ளது. குறிப்பாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு 45 ரூபாய் அதிகரித்து, 4,765 ரூபாயாகவும், இதே 8 கிராமுக்கு 360 ரூபாய் அதிகரித்து, 38,120 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 48 ரூபாய் அதிகரித்து, 5198 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 384 ரூபாய் அதிகரித்து, 41,584 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலையும் இன்று இதுவரையில் மாற்றம் காணவில்லை. இது தற்போது கிராமுக்கு 66 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 660 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 66,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold prices up amid dollar weak and treasury yields also dipped

The US Federal Reserve may raise interest rates. This can reduce investments in gold, This could put pressure on the price of gold. Thus it was widely expected that the price of gold would fall. But in contrast, the price of gold is rising.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X