இப்ப தான் நிம்மதியா இருக்கு.. விட்டதை பிடிக்கும் தங்கம், வெள்ளி ETF முதலீட்டாளர்கள்.. ஒரே நாளில் மேஜிக்..!

கிரீன்லாந்து மீதான டிரம்ப்-ன் நிலைப்பாடு மாறியது மூலம் முதலீட்டு சந்தையில் நேற்ற மிகப்பெரிய மாற்றம் நடந்தது. தங்கம், வெள்ளி விலை குறைந்து, பங்குச்சந்தை உயர்ந்தது. ஆனால் இன்று வட்டி விகிதம் குறையும் என்ற கணிப்பு சந்தை தலைகீழாக மாற்றியுள்ளது. நேற்று சரிந்த தங்கம், வெள்ளி இன்று தடாலடியாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட்கள் (ETFs) இன்று கடுமையான உயர்வை பதிவு செய்துள்ளன. நேற்று முதலீட்டாளர்கள் லாபத்தை திரும்ப பெற முடிவு செய்த காரணத்தால் 18-25% வரை சரிந்த பிறகு, இன்று 3-10% வரை மீண்டுள்ளது.

இப்ப தான் நிம்மதியா இருக்கு.. விட்டதை பிடிக்கும் தங்கம், வெள்ளி முதலீட்டாளர்கள்.. ஒரே நாளில் மேஜிக்!

தங்க ஈடிஎப்
இன்றைய வர்த்தகத்தில் Groww கோல்டு ஈடிஎப், Invesco India கோல்டு ஈடிஎப், Motilal Oswal கோல்டு ஈடிஎப், Axis கோல்டு ஈடிஎப் ஆகியவை தலா சுமார் 4% உயர்ந்தன.

360 ONE கோல்டு ஈடிஎப், Bandhan கோல்டு ஈடிஎப், Tata கோல்டு ஈடிஎப், Angel One கோல்டு ஈடிஎப், Zerodha கோல்டு ஈடிஎப், Quantum கோல்டு ஈடிஎப், ICICI Prudential கோல்டு ஈடிஎப், Edelweiss கோல்டு ஈடிஎப், Union கோல்டு ஈடிஎப் ஆகியவை 3%க்கும் மேல் உயர்ந்தன.

மேலும் LIC Mutual Fund கோல்டு ஈடிஎப், Nippon கோல்டு ஈடிஎப், Nippon India ஈடிஎப் கோல்டு BeES, HDFC கோல்டு ஈடிஎப் போன்றவையும் சுமார் 3% ஏற்றம் கண்டன.

வெள்ளி ஈடிஎப்
வெள்ளிக்கிழமை நாளில் வெள்ளி ஈடிஎப்-களில் 360 ONE சில்வர் ஈடிஎப் 10%க்கும் மேல் உயர்ந்து முன்னிலை வகித்தது. நேற்று 24% வரை சரிந்த Tata சில்வர் ஈடிஎப் இன்று 17% உயர்ந்தது.

இதை தொடர்ந்து Mirae Asset சில்வர் ஈடிஎப், Axis சில்வர் ஈடிஎப், Edelweiss சில்வர் ஈடிஎப், Aditya Birla Sun Life சில்வர் ஈடிஎப், DSP சில்வர் ஈடிஎப், ICICI Prudential சில்வர் ஈடிஎப் ஆகியவை சுமார் 9% ஏற்றம் கண்டன. Nippon India சில்வர் ஈடிஎப், HDFC சில்வர் ஈடிஎப், Zerodha சில்வர் ஈடிஎப் ஆகியவை 8%க்கும் மேல் உயர்ந்தன.

நேற்றைய சரிவு லாபத்தை திரும்ப பெறுதல் மற்றும் ஸ்பெக்யுலேட்டிவ் பிரீமியம் அழிவால் ஏற்பட்டது. டிரம்ப் ஐரோப்பாவுக்கு வரி அச்சுறுத்தலை குறைத்ததால் பாதுகாப்பான சொத்துகளுக்கான தேவை சற்று குறைந்தது. ஆனால் இன்று மீண்டும் உயர்வு கண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது அமெரிக்க பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றில் பதிவான உயர்வு.

இதனால் தங்கம் மற்றும் வெள்ளி மீதான அடிப்படை வலிமை தொடர்கிறது. குறிப்பாக தொழிற்துறையில் இரு உலோகத்திற்கான தேவை அதிமாக இருக்கும் காரணத்தால் தொடர்ந்து நம்பிக்கைகுரிய சொத்தாக உள்ளது. சோலார் பேனல்கள், மின்சார வாகனங்கள், AI உள்கட்டமைப்பு, செமிகண்டக்டர் சிப் உள்ளிட்ட பல்வேறு துறையில் இதற்காக தேவை தொடர்ந்து அதிகமாகவே உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+