இந்தாண்டு முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், முதலீடு குறித்தான பல கணிப்புகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. ஒன்று இந்த ஆண்டில் எவ்வளவு லாபம் கிடைத்துள்ளது. மற்றொன்று அடுத்த ஆண்டில் லாபம் எவ்வளவு கிடைக்கும் என்பன போன்ற பல கணிப்புகள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் அடுத்த இரண்டு காலாண்டுகளில் நல்ல லாபம் கொடுக்கலாம் என சில பங்குகளை பரிந்துரை செய்துள்ளது ஹெச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ்.
அதில் பிர்லா கார்ப்பரேஷன், டிசிபி வங்கி, ஹெல்த்கேர் குளோபல் எண்டர்பிரைசஸ், டிசிபி வங்கி, டாலர் இண்டஸ்ட்ரீஸ், ஸ்பந்தனா ஸ்பூர்த்தி ஃபைனான்ஷியல் உள்ளிட்ட பங்குகள் உள்ளன.
செம தள்ளுபடியில் தங்கம் விலை.. தங்கம் வாங்குவோருக்கு ஜாக்பாட் தான்.. இன்னும் குறையுமா?

ஸ்பந்தனா ஸ்பூர்த்தி ஃபைனான்ஷியல்
இதன் தற்போதைய விலை 720 ரூபாயாகும். இதன் இலக்கு விலை 928 ரூபாயாகும். இதன் ஸ்டாப் லாஸ் விலை 579 - 583 ரூபாயாக வைத்துக் கொள்ளலாம். இந்த Spandana Sphoorty Financial நிறுவனம், ஒரு வங்கி சாரா மூன்றாவது பெரிய நிதி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் கீழ் உள்ள சொத்து மதிப்பு (AUM) 7,354 கோடி ரூபாயாகும். இந்த நிறுவனம் ஒவ்வொரு நெருக்கடிக்கு பின்னர், அதன் இடர் மேலாண்மை செயல்முறையை பலப்படுத்தியுள்ளது. அதோடு இதன் வாராக்கடன் விகிதம் பெரியளவில் இல்லை. லாக்டவுனின் ஆரம்ப கட்டத்தில் இந்த நிறுவனம் சற்று முடங்கியிருந்தாலும், அதன் பின்னர் மே இறுதியில் தான் மீண்டும் செயல்பட தொடங்கியது. போதுமான மூலதன திரட்டல், போதுமான பணப்புழக்க விகிதத்திற்கு வழிவகுத்தது. இப்படி ஒரு நிலையில் தான் இந்த நிறுவன பங்கின் விலையானது அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

டாலர் இண்டஸ்ட்ரீஸ் (Dollar Industries)
டாலர் இண்டஸ்ட்ரீஸ் (Dollar Industries) நிறுவனத்தின் தற்போதைய விலை 225 ரூபாயாகும். இதன் இ,லக்கு விலை 273 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் ஸ்டாப் லாஸ் விலை 176 - 178 ரூபாயாக வைத்துக் கொள்ளலாம்.
டாலர் இண்டஸ்ட்ரீஸ் ஒரு பிராண்டட் ஆடை உற்பத்தியாளராகும். இது பிராண்டுகளின் வலுவான போர்ட்போலியை உருவாக்கியுள்ளது. குறிப்பாக பிக்பாஸ், மிஸ்ஸி, ஃபோர்ஸ் நெக்ஸ்ட் (Force NXT), அல்ட்ரா தெர்மல்ஸ், ஃபோர்ஸ் என பல்வேறு பிரிவுகளில் உள்ளது. இதன் பல பிராண்டுகளின் இல்லமாகவும் மாறியுள்ளது. இது குறிப்பாக மத்திய சந்தை பிரிவில் மற்றும் பிரீமியம் சந்தையில் முக்கிய கவனம் செலுத்துகிறது. இது முறையே 2020ம் நிதியாண்டு நிலவரப்படி, 43% மற்றும் 24% வருவாய் அதன் மொத்த வருவாயில் பங்களித்துள்ளது.

ஹெல்த்கேர் குளோபல் எண்டர்பிரைசஸ்
ஹெல்த்கேர் குளோபல் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தற்போதைய விலை 165 ரூபாயாகும். இதன் இலக்கு விலை 198 ரூபாயாகும். இதன் ஸ்டாப் லாஸ் 136 - 140 ரூபாயாகும்.
ஹெல்த்கேர் குளோபல் எண்டர்பிரைசஸ் நிறுவனம் கேன்சர் கேர் பராமரிப்பு செய்யும் முக்கிய நிறுவனமாகும். கடந்த சில ஆண்டுகளில் கேன்சர் சம்பந்தமான மருந்து செலவுகள் அதிகரித்துள்ளன, இதன் காரணமாக இதன் பங்கு விலையானது இத ஆல் டம் உச்சத்தில் இருந்து 50% அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் படுக்கை திறனை விட இரட்டிப்பு ஆகியுள்ள நிலையில், இதன் பங்கு விலையும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

டிசிபி வங்கி பங்கு விலை
டிசிபி வங்கியின் தற்போதைய பங்கு விலை 115 ரூபாயாகும். இதன் இலக்கு விலை 144 ரூபாயாகும். இதன் ஸ்டாப் பாஸ் 105 - 107 ரூபாயாகும்.
டிசிபி வங்கியானது நல்ல மூலதனத்தினை கொண்டுள்ள நிலையில், வளர்ச்சியும் நன்றாக உள்ளது. குறிப்பாக எம்எஸ் எம் பிரிவில் இவ்வங்கி கவனம் செலுத்தி வருகின்றது. பணப்புழக்கம் போதுமான அளவில் உள்ள நிலையில், இதன் சில்லறை கடன்களையும் அதிகரித்து வருகின்றது.

கோல் இந்தியா பங்குகள்
கோல் இந்தியாவின் தற்போதைய பங்கு விலை 136 ரூபாயாகும். இதன் இலக்கு விலை 165 ரூபாயாகும். இத ஸ்டாப்லாஸ் 120 - 122 ரூபாயாகும்.
மத்திய அரசுக்கு சொந்தமான கோல் இந்தியா நிலக்கரி உற்பத்தி நிறுவனமாகும். இந்தியாவின் நிலக்கரி உற்பத்தியில் சுமார் 85% பங்களிக்கும் ஒரு நிறுவனமாகும். இது நிலக்கரி உற்பத்தியில் உலகிலேயே குறிப்பிடத்தக்க நிறுவனமாகவும் உள்ளது.

பிர்லா கார்ப்பரேஷன் பங்கு விலை
பிர்லா கார்ப்பரேஷன் இந்திய சிமெண்ட் சந்தையில் 4.2% பங்கு வகிக்கும் ஒரு சிமெண்ட் நிறுவனமாகும். இதன் தற்போதைய விலை 702 ரூபாயாகும். இதன் இலக்கு விலை 874 ரூபாயாகும். இதன் ஸ்டாப் லாஸ் - 635 - 639 ரூபாயாகும். கொரோனா லாக்டவுன் காலகட்டத்தில் விலைகள் அதிகரித்து இருந்தாலுன், தற்போது கட்டுமான மூலதன பொருட்கள் விலையானது அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக இதன் பங்கு விலையும் அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளன.
இந்த பங்கு பரிந்துரையானது நிபுணர்களின் கணிப்பினை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. எனினும் இறுதி முடிவு உங்களுடையதாக இருக்க வேண்டும்.