பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை வெளியாகும் ஸ்டேட் பாங்க் கார்டு பங்குகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுத்துறையை சேர்ந்த மிகப்பெரிய கடன் வழங்குனரான எஸ்பிஐயின் துணை நிறுவனமான, எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனம் மார்ச் 2-ம் தேதி தனது பங்குகளை வெளியிட உள்ளது.

 

எஸ்பிஐ கார்ட்ஸ் இந்த பொதுப்பங்கு வெளியீடு மூலமாக 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியினை திரட்ட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஐபிஓ-வில் எஸ்பிஐ கார்ட்ஸ் பங்குகளை மார்ச் 2-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை வாங்கலாம் என்றும் எஸ்பிஐ அறிவித்துள்ளது.

மேலும் இந்த பங்குகள் விலை குறைந்தபட்சம் 750 ரூபாய் எனவும், அதிகபட்சமாக 755 ரூபாய் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஐபிஓ-வில் குறைந்தபட்சம் 19 பங்குகள் ஒரு லாட் என வாங்க முடியும்.

நாளை ஐபிஓ தாக்கல்

நாளை ஐபிஓ தாக்கல்

எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனத்தில் எஸ்பிஐ வங்கிக்கு 76% பங்கும், கார்லைல் குழுமத்திடம் 36% பங்குகளும் உள்ளன. எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனம் 500 கோடி ரூபாய் மதிப்பிலான 13 கோடி பங்குகளைப் மார்ச் 2-ம் தேதி வெளியிட உள்ளது. இதனை நாம் மார்ச் 5-ம் தேதி வரை பங்குகளை ஐபிஓ மூலமாக வாங்கலாம். இதில் எஸ்பிஐ மற்றும் கார்லைல் குழுமம் முறையே 3.73 கோடி மற்றும் 9.32 கோடி பங்குகளையும் பங்கு சந்தையில் ஏற்றலாம் என்றும் கூறப்படுகிறது.

இவ்வளவு லாபமா?

இவ்வளவு லாபமா?

சென்ற நிதியாண்டுடன் ஒப்பிடும் போது நடப்பு நிதியாண்டின் செப்டம்பர் மாதம் வரையில் எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி 36% அதிகரித்துள்ளது. இதே லாபம் 78% அதிகரித்து 1,034.58 கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வலுவான தேவை உள்ளது
 

வலுவான தேவை உள்ளது

எஸ்பிஐ வங்கியின் துணை நிறுவனமான எஸ்பிஐ கார்ட்ஸ், இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய கிரெடிட் கார்டு நிறுவனமாக உள்ளது. சொல்லப்போனால் இந்திய கிரெடிட் கார்டு சந்தையில் எஸ்பிஐ கார்ட்ஸ் நிறுவனம் சுமார் 18% பங்கு வகித்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் முதலீட்டாளர்கள் எஸ்பிஐ கார்டுகளுக்கு வலுவான தேவை இருப்பதால், தொடக்கத்த நாளிலேயே புரட்டி எடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள்

ஆய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள்

சொல்லப்போனால் இது ஒரு சிறந்த வாய்ப்பாக கருதப்படுகிறது. அதிலும் தொடக்க நிலையிலேயே முதலீடு செய்யப்படுவதால், இது எதிர்காலத்தில் கணிசமான அளவு லாபத்தை கொடுக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்பிஐ கார்ட்ஸ் ஐபிஓவில் குறைந்தபட்சம் 19 பங்குகள் ஒரு லாட் என வாங்க முடியும்.

ஊழியர்களுக்கு என்ன சலுகை

ஊழியர்களுக்கு என்ன சலுகை

இந்த எஸ்பிஐ கார்ட்ஸ் பங்குகள் மார்ச் 16-ம் தேதி பங்கு சந்தையில் பட்டியிலிடப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த பொதுப்பங்கு வெளியீட்டில் எஸ்பிஐ ஊழியர்களுக்கு 75 ரூபாய் சலுகை அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தகுதி வாய்ந்த ஊழியர்களுக்கு 18.4 லட்சம் பங்குகளை முன்பதிவு செய்கிறது. எனினும் இதற்கு தகுதியான ஊழியர்களின் முதலீடு 5 லட்சத்தை தாண்டக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா பீதியில் முதலீட்டாளர்கள்.. வீழ்ச்சி கண்ட ரூபாய் மதிப்பு.. கவலையில் மத்திய அரசு..!கொரோனா பீதியில் முதலீட்டாளர்கள்.. வீழ்ச்சி கண்ட ரூபாய் மதிப்பு.. கவலையில் மத்திய அரசு..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI Cards IPO opens on march 2, please check other details

SBI cards is second largest credit card issuer in india. So this IPO expect strong demand for shares of SBI cards, also analysts says its an excellent opportunities.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X