கிரிப்டோவில் முதலீடு செய்ய புதிய வழி.. இந்திய பணக்காரர்கள் அசத்தல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கிரிப்டோ முதலீடுகளுக்கு அதிகப்படியான கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையிலும், கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் தளத்தில் யூபிஐி பேமெண்ட் பிரச்சனை, மத்திய அரசின் கிரிப்டோ மசோதா என அடுக்கடுக்கான பல பிரச்சனைகள் இருக்கும் வேளையில் இந்தியப் பணக்காரர்கள் வெளிநாட்டில் பணத்தைக் கொண்டு சென்று கிரிப்டோவில் முதலீடு செய்யும் முறையைக் கண்டுபிடித்துள்ளனர்.

 

பாடிஸ்ப்ரே விளம்பரத்தை இப்படியா எடுப்பாங்க? தடை விதித்தது மத்திய அரசு

வெளிநாட்டு முதலீடு

வெளிநாட்டு முதலீடு

டெக்லானஜி மீது அதிகப்படியான ஆர்வம் கொண்ட முதலீட்டாளர்கள், குடும்ப அலுவலர்கள் வைத்துள்ளவர்கள் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதற்காக 'overseas direct investment' (ODI) என்னும் வழியில் LRS முறையில் முதலீடு செய்கின்றனர். இதில் LRS என்பது liberalised remittance facility, இது ஆர்பிஐ-யால் இயக்கப்படும் வெளிநாட்டு முதலீடு சேவை.

NBFC நிறுவனங்கள்

NBFC நிறுவனங்கள்

இந்திய பெரும் பணக்காரர்கள் இந்தியாவில் இருக்கும் NBFC நிறுவனங்கள் வாயிலாக வெளிநாட்டில் இருக்கும் தங்களது சொந்த முதலீட்டு நிறுவனத்திற்குப் பணப் பரிமாற்றம் செய்யும் சேவையை அளிக்கும் நிறுவனங்களைத் தேர்வு செய்து அதன் மூலம் பணத்தை வெளிநாட்டுக்கு அனுப்பி வருகிறார்கள்.

LRS முறை
 

LRS முறை

பொதுவாக LRS முறையைப் பயன்படுத்தி வெளிநாட்டுக்குப் பணத்தை அனுப்ப முடியும் ஆனால் நேரடியாக எந்த நிதியியல் திட்டத்திலும் முதலீடு செய்ய முடியாது. இதனால் பெரும்பாலானோர் கிரிப்டோகரன்சிக்கு மாற்று வழியைத் தேடி வந்தனர்.

ODI சேவை

ODI சேவை

ODI சேவை மூலம் இந்திய முதலீட்டாளர்கள் நேரடியாக வெளிநாட்டு நிதியியல் திட்டத்தில் முதலீடு செய்ய அனுமதி அளிக்கிறது. ஆனால் இத்தகையை முதலீட்டைச் செய்ய இந்தியா மற்றும் தத்தம் வெளிநாட்டில் முன் அனுமதி பெற வேண்டியது கட்டாயம்.

ஆர்பிஐ

ஆர்பிஐ

இதேவேளையில் ஆர்பிஐ இத்தகைய முறையில் பணப் பரிமாற்றம் செய்யப்படும் பணம் கிரிப்டோவில் முதலீடு செய்ய அனுமதிக்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டையும் விதிக்க வேண்டும் வெளிநாட்டு வங்கி அமைப்புகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

ultra Rich Indians using ODI method to invest in cryptocurrency

ultra Rich Indians using ODI method to invest in cryptocurrency கிரிப்டோவில் முதலீடு செய்யப் புதிய வழி.. இந்திய பணக்காரர்கள் அசத்தல்..!
Story first published: Saturday, June 4, 2022, 19:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X