நீங்கள் பணக்காரர் ஆக வேண்டுமா.. 5 முக்கிய தகுதிகள் என்னென்ன..முதலில் இதை படியுங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பணக்காரர் ஆக வேண்டுமா? அதற்கு முதலில் ஆசையை கட்டுப்படுத்துங்கள் என நமது முன்னோர்கள் சொல்ல கேட்டிருப்போம்.

 

ஆனால் அதற்கு இந்த ஐந்து அம்சங்களை கடைபிடைக்க வேண்டும். அப்படி நீங்கள் இதனை கடைபிடிக்க தொடங்கி விட்டால், அதற்கு தகுதியானவர் நீங்கள் தான் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

முடிவுக்கு வந்ததா ஒர்க் ஃப்ரம் ஹோம்.. இனி இப்படி தான்.. டிசிஎஸ் சொல்வதென்ன? முடிவுக்கு வந்ததா ஒர்க் ஃப்ரம் ஹோம்.. இனி இப்படி தான்.. டிசிஎஸ் சொல்வதென்ன?

இதற்கெல்லாம் மேலாக எப்போதுமே பெரியளவில் சிந்திக்க வேண்டும். அதற்காக கடின உழைப்பையும் கொடுக்க வேண்டும்.

கடனை கட்டுங்கள்

கடனை கட்டுங்கள்

நீங்கள் பணக்காரர்களாக விரும்பினால் வட்டி குறைவான கடனை வாங்குங்கள். கடன் என்பது உங்களுக்கு சாதகமானதாக இருக்க வேண்டும். உங்களுக்கு எதிரானதாக இருக்க கூடாது. உங்கள் மீது திணிக்கப்படக் கூடாது. மொத்தத்தில் உங்கள் கடனை முடிந்தளவு குறைவான வட்டியில் செலுத்த பழகுங்கள். ஆடம்பர செலவுகளை குறையுங்கள். மொத்தத்தில் வருமானத்திற்கு ஏற்றவாறு வாழுங்கள்.

கட்டணங்களை எப்போது செலுத்துவீர்கள்

கட்டணங்களை எப்போது செலுத்துவீர்கள்

செலவுகள் இல்லாத நாட்களே இல்லை எனலாம். எனினும் அதனை கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் செலவுகளை சரியாக கையாண்டால் தான், சேமிப்பு என்பதையும் சிறப்பாக செய்ய முடியும். ஆக மாத மாதம் செலுத்த வேண்டிய கட்டணங்களை தாமதமில்லாமல் சரியாக செலுத்துங்கள். அதன் பிறகு முதலீட்டினை திட்டமிடுங்கள்.

பட்ஜெட் போட்டு செலவு செய்யுங்கள்
 

பட்ஜெட் போட்டு செலவு செய்யுங்கள்

பட்ஜெட் போட்டு செலவு செய்வதன் மூலம் கண்டிப்பாக செலவினை மிச்சப்படுத்த முடியும். ஏனெனில் வருமானத்திற்கு ஏற்ற செலவினை செய்ய வேண்டும். சிலர் எதிர்காலத்தில் வரவேண்டிய வரவுக்கு இப்போதிலிருந்தே செலவு செய்வார்கள். ஆக செலவுக்கு ஒரு வரம்பை நிர்ணயிங்கள். இதை நிபுணர்கள் 50/30/20 என்ற விகிதத்தில் பட்ஜெட் போட்டு செலவு செய்யுங்கள் என கூறுகின்றனர். இதில் 20% சேமிப்பு, 50% அத்தியாவசிய செலவுகள், 30% முக்கியமான செலவுகள் என பிரித்துக் கொள்ளுங்கள் என தெரிவிக்கின்றனர்.

ரொக்கப் பணம் கொடுத்து வாங்குங்கள்

ரொக்கப் பணம் கொடுத்து வாங்குங்கள்

டிஜிட்டல் முறையில் கேஷ்லெஸ் முறையில் பணம் செலுத்தி வாங்காதீர்கள். உதாரணத்திற்கு கிரெடிட் கார்ட் மூலம் ஷாப்பிங் செய்வதன் மூலம் நினைத்ததை விட, நினைக்காததையும் வாங்கலாம். ஒரு டிரஸ் வாங்க போய், இரண்டு மூன்று வாங்குவோம். இதுவே கையில் கேஷ் ஆக இருக்கும்போது அளவோடு வாங்குவோம். குறித்த தொகைக்கு மட்டுமே வாங்குவோம்.

எதையும் யோசித்து வாங்குகள்

எதையும் யோசித்து வாங்குகள்

ஒரு முறைக்கு இரு முறை யோசித்து பொருளை வாங்குங்கள். உதாரணத்திற்கு ஒரு மொபைல் போன் வாங்குறீர்கள் என்றால் கூட, அது தற்போதைக்கு வாங்கலாமா? இது அவசியமானதா? அவசியமானது என்ன? வேறு என்னவெல்லாம் முக்கியம். என்பதை யோசித்து அதன் பின் வாங்குங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What are the 5 key qualifications you need to follow to become rich?

What are the 5 key qualifications you need to follow to become rich?/ நீங்கள் பணக்காரர் ஆக வேண்டுமா.. 5 முக்கிய தகுதிகள் என்னென்ன..முதலில் இதை படியுங்க.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X