நீங்கள் கண்டிப்பாகத் தேர்வு செய்ய வேண்டிய 5 காப்பீடு திட்டங்கள்!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil
காப்பீடு திட்டங்கள் தனி நபர் விருப்பத்திற்குரியது. அந்த விருப்பங்கள் நம்முடைய நலன் விரும்பிகள். எனவே காப்பீடு எடுப்பது என்பது நம்முடைய வாழ்வை சில நேரங்களில் மாற்றிவிடும் ஏனெனில் சில காப்பீட்டுத் திட்டங்கள் மிகவும் மதிப்பு மிக்கவை, உங்களுக்கு மனநிம்மதியையும், நிதி பாதுகாப்பையும் அளிக்கக் கூடியது.

அசாதாரணமான மரணம், விபத்து, சொத்து இழப்பு மற்றும் கடுமையான உடல் நலப் பிரச்சினைகள் போன்றவற்றிற்கு எதிராகக் காப்பீடு திட்டங்கள் நமக்கு நிதி பாதுகாப்பு அளிக்கிறது. எனினும், காப்பீடு திட்டங்களை வாங்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட அளவு செலவு செய்ய நேரிடுகின்றது. எனவே, நாம் எல்லாவற்றிற்கும் காப்பீடு செய்ய முடியாது, ஆனால் நாம் ஒரு சில விஷயங்களுக்குக் கண்டிப்பாகக் காப்ப்டு செய்திருக்க வேண்டும். குறிப்பாக உங்கள் வாழ்நாளில் உங்களுக்கு அல்லது உங்களைச் சார்ந்தவர்களுக்கு அதிகமான நிதி தாக்கத்தை ஏற்படுத்க்கூடிய சில பிரச்சனைகளுக்கு எதிராகக் கண்டிப்பாகக் காப்பீடு செய்திருக்க வேண்டும். எனவே நாம் இங்கு உங்களுக்கு உதவும் நோக்கில், மிகவும் முக்கியமான ஐந்து காப்பீடு திட்டங்களின் விபரங்களைத் தெரிவித்துள்ளோம். இந்த ஐந்து திட்டங்களும் கண்டிப்பாக உங்களுக்கு மன நிம்மதியையும், நிதிப் பாதுகாப்பை தரும்.

மருத்துவக் காப்பீடு

இன்றைய நகர வாழ்வானது நமக்கு ஏகப்பட்ட அழுந்த்தங்களைப் பரிசாக வழங்கி உள்ளது. அதோடு மட்டுமல்லாமல், இந்திய நகரங்களின் மாசு அளவு அபாயக் கட்டத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், மருத்துவச் செலவு அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. நம் முன்னோர்களைப் போல் அல்லாமல் இன்றைய இளம் தலைமுறையினர், ஏகப்பட்ட நோய்த் தொர்ந்தரவுகளுக்கு ஆளாகின்றனர். இதை எல்லால்ம் கருத்தில் கொண்டால், நாம் அனைவருக்கும் இருக்க வேண்டிய மிக முக்கியக் காப்பீடு இந்த உடல் நலக் காப்பீடு மட்டுமே. இது உங்களுடைய சேமிப்பின் பெரும் பகுதியை கரைக்கக் கூடிய எதிர் பாராத மருத்துவக் செலவுகளில் இருந்து உங்களையும் உங்களின் குடும்பத்தினர் அனைவரையும் காக்கின்றது. "குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாய்க்கு ஒரு நல்ல சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தை நாங்கள் பரிந்துரைக்கிறோம். பொது மற்றும் தனியார் நிறுவனங்களால் விற்பனை செய்யப்படும் பல சுகாதாரத் திட்டங்கள் சந்தையில் உள்ளன. எனவே, இணையத்தில் பல திட்டங்களை ஒப்பிட்டு, உங்களுக்கு உகந்தவற்றை வாங்குவது மிகவும் சிறந்தது, "என்று பாலிசிபஜார்.காம நிறுவனத்தின் இயக்குனர் ஜெர்ரி பூட்டியா கூறுகிறார்.

தனிப்பட்ட விபத்து காப்பீடு

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 400 க்கும் மேற்பட்டவர்கள் சாலை விபத்தில் பலியாகின்றனர். மற்றும் பலர் உடல் உறுப்புகளை இழந்து ஊனமடைகின்றனர். எனவே இது நீங்கள் ஒரு தனிப்பட்ட விபத்து காப்பீடு திட்டத்தை வாங்க வேண்டிய காரணத்தை ஏற்படுத்தி விடுகின்றது. உங்களிடம் இந்தக் காப்பீடு இருக்கின்றது என வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் விபத்தில் சிக்கி மரணமடைந்தால், அல்லது அதிர்ஷ்ட வசமாக உயிர் பிழைத்து, உங்களுக்கு ஊனம் ஏற்பட்டால், உங்களுக்கு நீங்கள் காப்பீடு செய்துள்ள பணம் கண்டிப்பாகக் கிடைக்கும். அதோடு மட்டுமல்லாமல், உங்களுக்குக் கடுமையான ஊனம் ஏற்பட்டு, உங்களால் சம்பாதிக்க இயலாமல் போய் விட்டால், நீண்ட காலத்திற்கு உங்களின் நிதித் தேவையை ஈடுகட்டக் காப்பீடு நிறுனத்தின் பண உதவிக் கண்டிப்பாகக் கிடைக்கும். பல பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் தனிப்பட்ட விபத்து காப்பீடு திட்டங்களை வழங்குகின்றன. எனவே, நீங்கள் உங்களுடைய தேவைக்கேற்ப ஒரு காப்பீடு திட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.

டெர்ம் காப்பீடு திட்டங்கள்

உங்களுடைய உடல் நலக் காப்பீடு, மற்றும் தனிநபர் விபத்துக் காப்பீடு, உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தினருக்கும் நிதி பாதுகாப்பை வழங்குகின்றது. உங்களுடைய வாழ்க்கைக்குப் பிறகு, உங்களின் அன்புக்குரியவர்களுக்குத் தேவைப்படும் நிதிப் பாதுகாப்பை வழங்க இந்த டேர்ம் ப்ளான் உதவுகின்றது. இந்த டெர்ம் காப்பீடு திட்டம் மிகவும் சிக்கனமானது. எனினும் உங்களுடைய வயது அதிகரிக்க அதிகரிக்க இதன் பிரீமியம் அதிகரிக்கும். எனவே, நீங்கள் ஒரு நிரந்தரமான வேலையில் அமர்ந்த பின்னர் அல்லது வியாபாரத்தில் ஜெயித்த பின்னர், மிகவும் குறைந்த வயதில் இந்தக் காப்பீடு திட்டத்தில் இணைவது மிகவும் நல்லது.

ஒரு உதாரணத்தின் மூலம் இதை மிகவும் எளிதாகப் புரிந்து கொள்ள இயலும். ஒருவருக்கு 30 வயது, மற்றும் அவருக்குப் புகைபிடித்தல் போன்ற தீய பழக்கங்கள் ஏதும் இல்லை. அவர் சுமார் 40 ஆண்டுக் காலத்திற்கு 1 கோடி ரூபாய் காப்பீட்டை வாங்க விரும்பினால், அவருக்கான பிரீமியம் மாதத்திற்குச் சுமார் ரூ 834 அல்லது வருடத்திற்குச் சுமார் 10000 என்கிற அளவிலேயே இருக்கும். இதில் குறிப்பிடத் தக்க அம்சம் என்னெவெனில் இந்தத் திட்டத்தில் நுழையும் பொழுது என்ன பிரீமியம் நிர்ணயிக்கப்படுகின்றதோ, அதே பிரிமியம் அந்தத் திட்டத்தின் ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும்.

 

டெர்ம் ப்ளான்கள்

ஒரு வழக்கமான டெர்ம் ப்ளான். இது உங்களுக்குச் சுமார் 85 ஆண்டுகள் வரை காப்பீடு அளிக்கின்றது. உங்கள் வாழ்நாள் முழுவதையும் கவர்ந்த முழு வாழ்வுத் திட்டம். இது, ஒரு வழியில், உங்களுடைய வாழ்வைத் திட்டமிட உதவுகிறது. தற்போதைய நிலையில், சந்தையில் சுமார் 3 வாழ் நாள் திட்டங்கள் உள்ளன. எச்.டி.எஃப்.சி லைஃப் க்ளிக் 2 புரொடெக்ட் 3D பிளஸ்-லைஃப் லாங் புரொடெக்ஸன் ஆப்ஸன், ஏகோன் லைஃப்-ஐ டெர்ம் ஃபாரெவர் மற்றும் பிஎன் பி மெட் லைஃப்-மோரா டெர்ம்ட் பிளான்.

யூலிப்ஸ்

யூலிப் அல்லது யூனிட்-இணைப்பு காப்பீட்டுத் திட்டம் என்பது காப்பீடு மற்றும் முதலீட்டின் கலவையாகும். பெரும்பாலான முதலீட்டு விருப்பங்கள் உறுதி அளிக்கும் வருமானத்தைத் தருவதோடு இல்லாமல் இந்த யூலிப் திட்டங்கள் பாலிசிதாரர்களுக்குக் காப்பீட்டையும் வழங்குகின்றன. இந்தத் திட்டங்களில் பாலிசிதாரர்கள் தங்களுடைய முதலீடுகளைப் பல்வேறு துறைகளில் சேர்ப்பதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர். அவர்கள் தேர்ந்தெடுக்கும் துறையானது, அவர்களின் அபாயத்தை எதிர்கொள்ளும் திறன், மற்றும் குழந்தைகளின் உயர்கல்வி, திருமணம், ஓய்வூதியம் போன்ற நீண்டகால இலக்குகளைப் பொறுத்தது.

கடுமையான நோய்க்குறி காப்பீடு திட்டம்

புற்றுநோய், இதயக் கோளாறுகள், மற்றும் கட்டிகள் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கான சிகிச்சைகள் மிக விலை உயர்ந்தவையாகும், மேலும் இந்த நோயாளிகள் அந்த நோய்களில் இருந்து மீள நீண்ட காலம் தேவைப்படும். ஒரு சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொள்வது தேவைப்படாமல், வழக்கமான மருத்துவமனையின் வருகை மூலம் சிகிச்சையளிக்க முடியும். உதாரணமாக, "ஒரு நபர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றால், அவர் / அவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியமில்லை, ஆனால் சிகிச்சைக்குப் பல வருடங்களாகும் மேலும் அதற்கு நிறையப் பணம் செலவாகும். கடுமையான நோய்க்குறித் திட்டங்கள் நிலையான நன்மை திட்டங்களாகும், இதில் காப்பீடு செய்யப்படும் நபருக்குக் காப்பீடு செய்யப்பட்ட மொத்த தொகையையும் முழுவதுமாகக் கிடைத்து விடும். அந்தத் தொகையை எவ்வாறு செலவழிப்பது என்பதை அந்தப் பாலிசிதாரர் முடிவெடுக்க வேண்டும். கடுமையான நோய்க்குறி காப்பீடு திட்டத்தின் காப்பீடு தொகை பொதுவாகச் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தை விட 4 முதல் 5 மடங்காக இருப்பது மிகவும் முக்கியம்" என்று பூட்டியா தெரிவிக்கின்றார்.

எனவே, மேலே குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்களில் இருந்து காப்பீடு என்பது ஆபத்துப் பாதுகாப்பு மற்றும் நிதி பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

5 insurance policies everyone should have

5 insurance policies everyone should have
Story first published: Monday, December 18, 2017, 18:36 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns