ரூ.10,000 முதலீடு செய்து இருந்தால் இந்நேரம் 2 கோடி சம்பாதித்து இருக்கலாம்..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

குறைந்த முதலீட்டில் கோடிகள் சம்பாதிக்க வேண்டும் என்பது பலரது கனவாக உள்ளது. இப்படிக் கனவு உடையவர்கள் இந்தப் பங்குகளில் எல்லாம் 10,000 ரூபாயினை முதலீடு செய்து இருந்தால் 25 வருடத்தில் கிட்டத்தட்ட உங்களுக்கு 3 கோடி ரூபாய் வரை லாபம் கிடைத்து இருக்கும் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?

கடந்த 30 வருடத்தில் எந்தப் பங்குகளில் எல்லாம் 10,000 ரூபாய் வரை நீங்கள் முதலீடு செய்து இருந்தால் நீங்கள் கோடிஸ்வரர்கள் என்று இங்குப் பார்க்கலாம்.

இன்ஃபொசிஸ்

இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 1993ம் ஆண்டு ஜூன் மாதம் 10,000 ரூபாயினை நீங்கள் முதலீடு செய்து இருந்தால் அது தற்போது 2,973 மடங்கு பெருகி இந்நேரம் 2.97 கோடி ரூபாயாக லாபம் கிடைத்து இருக்கும். ஆண்டுக்கு 39 சதவீத வளர்ச்சியினை இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்குகள் அளித்து வந்துள்ளது.

ஏய்ச்சர் மோட்டார்ஸ்

ஏய்ச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தில் 1990-ம் ஆண்டு ஜனவரி மாதம் நீங்கள் 10,000 ரூபாய் முதலீடு செய்து இருந்தால் இந்நேரம் அது உங்களுக்கு ஆண்டுக்கு 32 சதவீத வளர்ச்சியுடன் 2.01 கோடி ரூபாயாகப் பெருகி லாபம் அளித்து இருக்கும்.

ஸ்ரீ சிமெண்ட்ஸ்

ஸ்ரீ செமெண்ட்ஸ் நிறுவனத்தில் ஜனவரி நிறுவனத்தில் 1990-ம் ஆண்டு ஜனவரி மாதம் நீங்கள் 10,000 ரூபாய் முதலீடு செய்து இருந்தால் இந்நேரம் அது உங்களுக்கு 1.93 கோடி ரூபாயாகப் பெருகி லாபம் அளித்து இருக்கும்.

இமாமி

இமாமி நிறுவனத்தில் 1995-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10,000 ரூபாயினை நீங்கள் முதலீடு செய்து இருந்தால் அது 22 வருடத்தில் 523 மடங்காகப் பெருகி 52.29 லட்சம் ரூபாயாக உயர்ந்து இருக்கும்.

சன் பார்மா

சன் பார்மா நிறுவனத்தில் 23 வருடங்களுக்கு முன்பு 1994-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10,000 ரூபாயினை முதலீடு செய்து இருந்தால் அது 27 ஆண்டுக்கு 27 சதவீதம் லாபத்துடன் 261 மடங்காகப் பெருகி 26.10 லட்சம் ரூபாயாக உங்களுக்கு லாபம் அளித்து இருக்கும்.

எச்டிஎப்சி வங்கி

1995-ம் ஆண்டு மே மாதம் எச்டிஎப்சி வங்கியில் 10,000 ரூபாய் முதலீடு செய்து இருந்தால் ஆண்டுக்கு 27 சதவீத வளர்ச்சி என 225 மடங்குகள் பெருகி 22.47 லட்சம் ரூபாயாக லாபம் அளித்து இருக்கும்.

எச்டிஎப்சி

எச்டிஎப்சி வங்கியின் தாய் நிறுவனமான எச்டிஎப்சி-ல் 1990-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10,000 ரூபாய் முதலீடு செய்து இருந்தால் 28 வருடத்தில் ஆண்டுக்கு 25 சதவீத வளர்ச்சியுடன் 488 மடங்காகப் பெருகி 48.78 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்து இருக்கும்.

ஏசியன் பெயிண்ட்ஸ்

ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தில் 30 வருடத்திற்கு முன்பு 1988-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10,000 ர்பாய் முதலீடு செய்து இருந்தால் ஆண்டுக்கு 24 சதவீத வளர்ச்சியுடன் 590 மடங்கு பெருகி உங்களுக்கு 59 லட்சம் ரூபாயாக இன்றைய தேதியில் உங்களுக்கு லாபம் அளித்து இருக்கும்.

பிராட்டினியா நிறுவனங்கள்

30 வருடங்களுக்கு முன்பு 1988ம் ஆண்டு 10,000 ரூபாய் முதலீடு செய்து இருந்தால் 2017 அக்டோபர் மாதம் உங்கள் கைகளில் ஆண்டுக்கு 24 சதவீத வளர்ச்சியுடன் 568 மடங்காகப் பெருகி 56.83 லட்சம் ரூபாயாக இருந்து இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

These stocks made investors crorepati on just Rs 10,000 investment; did you miss the rally?

These stocks made investors crorepati on just Rs 10,000 investment; did you miss the rally?
Story first published: Thursday, December 14, 2017, 13:33 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns