உங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற 7 முதலீட்டு திட்டங்கள்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

பெரும்பாலான பெற்றோர்கள் சந்தை முதலீட்டுடன் கூடிய இன்சூரன்ஸ் திட்டங்கள் மற்றும் குழந்தைகள் சேமிப்பு திட்டங்கையும் எதிர்பார்க்கின்றனர். இதைத் தான் இன்சூரன்ஸ் நிறுவனங்களும், நிதியகங்களும் வழங்கி வருகின்றன. இன்சூரன்ஸ் மற்றும் குழந்தைகள் கல்விக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் திட்டங்களை அளிக்கின்றன. ஆனால், இதில் முதிர்வு தொகை மிகவும் குறைவாகத் தான் கிடைக்கிறது. குழந்தைகள் திட்டத்தின் செலவை கணக்கிட்டுப் பார்த்தால் உங்களது முதிர்வு தொகை குறைந்து காணப்படும்.

உங்களது எதிர்பாராத இழப்புக்குப் பின்னரும் குழந்தையின் கல்வி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்குப் பிளெயின் வெண்ணிலா இன்சூன்ஸ் திட்டங்கள் உகந்தது. இதில் அனைத்து விதமான பயன்களும் உள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள இன்சூரன்ஸ் திட்டங்கள் மூலம் உங்களது குழந்தைக்குத் திடகாத்திரமான கல்வியை அளிக்க முடியும். மிகச் சிறந்த குழந்தைகள் முதலீட்டுச் சேமிப்புத் திட்டங்கள் இங்கே உங்களுக்காகக் கொடுக்கப்பட்டுள்ளது.

பிபிஃஎப்

இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப் பல காரணங்கள் உள்ளன. 15 ஆண்டுகள் கொண்ட இந்தத் திட்டம் குழ ந்தைகளின் கல்விக்கு ஏற்ற ஒரு தொகுப்பை உங்களால் உருவாக்கி வைக்க முடியும். தற்போது இதன் வட்டி விகிதம் 7.9 சதவீதம். வங்கிகளில் வழங்கப்படும் 7 சதவீத வட்டி விகிதங்களில் இருந்து மிகத் தொலைவில் இருக்கிறது.

இதில் கிடைக்கும் வட்டி வருவாய்க்கு வரி விலக்கு உண்டு. இது மட்டுமல்ல ரூ.1.5 லட்சம் வரை வருமான வரியின் 80சி பிரிவில் கீழ் வரிச் சலுகை பெற முடியும். முதலீடுக்கு ஏற்ற கவர்ச்சிகரமான திட்டம் இது. குழந்தைகள் கல்வியைக் கட்டமைக்க இது சிறந்த வழியாக இருக்கும். நீண்ட நாள் திட்டம் என்பது மட்டுமே தயக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், கல்வி கட்டமைப்புக்கு பெரும் உதவியாக இருக்கும்.

 

செல்வ மகள் திட்டம்

குழந்தைகள் கல்வியைக் கட்டமைப்பதற்கு ஏற்றதொரு அருமையான திட்டம் இது. அதேபோல் குழந்தைகளு க்கான முதலீடுகளை மேற்கொள்ளக் கூடிய சிறந்த திட்டமாகவும் இது உள்ளது. சுகன்யா சம்ரிதி அக்கவுன்ட் என்ற இந்தத் திட்டம் வரி விலக்குடன் கூடிய 8.4 சதவீத வட்டியை வழங்குகிறது. வருமான வரிச் சட்டப் பிரிவு 80 சி.யின் கீழ் வரிச் சலுகை உண்டு. இது பெண் குழந்தைகளுக்கான திட்டம் மட்டுமே.

பெண் குழந்தைகள் உங்களுக்கு இருந்தால் திருமணம் மற்றும் கல்விக்கு இந்தத் திட்டம் மூலம் சேமி க்கலாம். இதுவும் நீண்ட காலத் திட்டம் என்பது மட்டுமே ஒரு கவலை. மற்றபடி நீண்ட காலத் தொகுப்புத் திட்டமாகும். அதோடு நேரத்திற்கு நேரம் வட்டி வகிதம் மாறக் கூடியது மட்டுமே இதில் உள்ள ஒரு பிர ச்னை. வங்கிகளை விட அதிக வட்டி வழங்குவது இந்தத் திட்டத்தில் உள்ள நல்ல விஷயமாகும்.

 

தங்கத்தில் சேமிப்பு

உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்குத் தங்கத்திலும் முதலீடு செய்யலாம். நேரடியாகத் தங்க கட்டிகள் அல்லது நாணயங்களாக முதலீடு செய்யக் கூடாது. இதனால் லாக்கர், இருப்புக் கட்டணம் செலுத்த வேண் டும். அதனால் பரிமாற்ற வர்த்தக நிதி மூலம் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும். மின்னணு முறையில் தங்கத்தில் முதலீடு செய்தால் திருட்டுப் பயம் கிடையாது.

மாதந்தோறும் சிறிது சிறிதாக முதலீடு செய்யலாம். தங்கத்தில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல முதிர்வு தொகை கிடைக்கும். சொத்துக்களில் இருந்து நீண்ட நாட்களில் கிடைக்கும் வருவாயை விட இது சிறந்தது. 10 முதல் 15 ஆண்டுகள் வரை இந்த முதலீட்டை வைத்திருந்தால் நல்ல லாபம் பார்க்கலாம். இதை விற்பனை செய்யும் போது மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும் என்பது மட்டுமே இதில் உள்ள சிறிய சங்கடம். அதேபோல் ஜூவல்லரி சார்ந்த திட்டங்களையும் தேர்வு செய்யலாம். இது பெண் குழந்தை வைத்திருப்போருக்கு பெரும் உதவியாக இருக்கும்.

 

ஈக்விட்டி மியூச்சுவல் பண்ட்ஸ்

குழந்தைகளுக்குச் சொத்து சேர்க்க அனைவரும் ஈக்விட்டி மியூச்சுவல் பண்ட்ஸை நாடி செல்லும் நிலை உள்ளது. ஆனால், இதில் சில அபாயம் உள்ளது. குழந்தைக்குத் தேவைப்படும் போது அதை மீட்கும் சமயத்தில் அதன் தொகைக்கு உத்தரவாதம் கிடையாது. சந்தைக்கு ஏற்ப தான் இதன் நிலைப்பாடு இரு க்கும்.

உதாரணமாக 2030ம் ஆண்டில் உங்களது அனைத்து அலகுகளையும் விற்பனை செய்யும் போது சந்தையில் சரிவு இருந்தால் உங்களது குழந்தைக்குத் தேவையான நிதியை திரட்ட முடியாமல் போய்விடும்.

ஆனால் பல மியூச்சுவல் பண்டுகளின் முதிர்வு தொகை வங்கிகளின் டெபாசிட்டை விட அதிக அளவிலும் கிடைத்தள்ளது. நீங்கள் நீண்ட கால முதலீட்டாளர் என்றால் இதை விட அதிக முதிர்வு தொகை தரக் கூடிய திட்டங்கள் இல்லை. குழந்தை கல்விக்குச் சேமிப்பு மற்றும் இதர திட்டங்களுக்காக முதலீடு செய்பவராக இருந்தால் இதைத் தேர்வு செய்வதைத் தவிர வேறு வழி இல்லை.

 

கடன் பரஸ்பர நிதிகள்

சில கடன் பரஸ்பர பத்திரங்கள் வங்கி டெபாசிட்களை விட அதிக முதிர்வு தொகையை வழங்கும் சிறந்த சலுகைகளை அறிவிக்கின்றன. வங்கி டெபாசிட்களை விட வரி திறனுக்கு ஏற்றதாக இருக்கும். இது சிறந்த தேர்வாக இருக்கும். குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்துக்கு இதை விடச் சிறந்தது இருக்க முடியாது. நீண்ட கால முதலீட்டை விரும்பினால் இதற்குச் செல்லலாம். நீண்ட நாள் திட்டத்தில் சிறந்த முதிர்வு தொகையை வழங்குவார்கள் என்பது உண்மை. இதில் சிறிய அளவில் அபாயம் இருப்பதால் தொழில் வல்லுனர்களின் ஆலோசனை பெறுவது அவசியமாகிறது. கடன் பரஸ்பர நிதிகள் ஏஏஏ செக்யூரிட்டீஸ் என்ற தலைப்பின் கீழ் வருகிறது. பங்கு சந்தை வீழ்ச்சியின் போது இதில் சற்று இடைவேளி ஏற்படும்.

இது வங்கி டெபாசிட்கள் மற்றும் நிறுவன டெபாசிட்களைக் கலந்து செய்த கலவையாகும். குழந்தைகள் பாதுகாப்புக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுத்தால் நிறுவன நிரந்தர முதலீடு மற்றும் வங்கிகளின் நிரந்தர முதலீட்டுகள் இணைந்த உயர் தரமான திட்டங்களுக்குச் செல்லலாம். உதாரணமாக, வங்கிகளில் டெபாசிட்டுக்கு வழங்கப்படும் 6 முதல் 6.5 சதவீதத்துக்கு எதிராகக் கேடிடிஃஎப்சி நிறுவனத்தின் நிரந்தர முதலீட்டில் 8.25 சதவீத வட்டி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது கேரளா அரசின் ஆதரவுடன் உள்ள டெபாசிட் திட்டம். அதனால் இது மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. உங்களது குழந்தைக்காகச் சேமிக்கும் போது பாதுகாப்பு என்பது முக்கியக் காரணியாக உள்ளது.

 

டியூட்ஸ்சி வங்கி

டியூட்ஸ்சி வங்கியின் 5 ஆண்டுகள் கொண்ட டெபாசிட் திட்டம் ஒன்று உள்ளது. இதில் ஆண்டுக்கு 7.75 சதவீத வட்டி அளிக்கப்படுகிறது. வட்டி விகிதம் குறைவு என்பதால் இதை நாங்கள் பரிந்துரை செய்வதில்லை.

தீர்வு

சுகன்யா சம்ரிதி, பிபிஃஎப் ஆகிய இரண்டும் குழந்தைகள் திட்டத்திற்குச் சிறந்ததாகும். இவற்றின் சிறந்த வட்டி விகிதம் மற்றும் வட்டிக்கு வரி விலக்கு என்பது முதலீட்டாளர்களுக்குப் பயனளிக்கும். தற்போது குழ ந்தைகளுக்கான முதலீட்டுத் திட்டங்கள் பல உள்ளன. இவற்றை ஆய்வு செய்து சிறந்ததைத் தேர்வு செய்ய வேண்டும். அது உங்களது சேமிப்பு திறன் மற்றும் காலத்தின் அளவை பொருத்ததாக இருக்க வேண்டும்.

உதாரணமாக, உங்களுக்குச் சிறிய வயதில் குழந்தை இருந்து நீண்ட காலத் திட்டமாக 15 ஆண்டுகள் கொண்ட திட்டம் தேவை என்று நினைத்தால் அதற்குப் பிபிஃஎப் தான் சிறந்தது. அதே சமயம் குறுகிய காலத் திட்டம் வேண்டும் என்று நினைத்தால் பிஎன்பி வீட்டுவசதி நிதி டெபாசிட்வை தேர்வு செய்யலாம். இது 10 ஆண்டுகள் கொண்ட திட்டமாகும். முக்கியமாக வரி விலக்குத் திட்டங்களைப் பரிசீலனை செய்வது நல்லது.

இங்கே பரிந்துரை செய்யப்பட்ட சில குழந்தைகள் முதலீட்டுத் திட்டங்களுக்கு வரி விலக்கு இல்லாமல் உள்ளது. எனினும் அவை வருமான வரிச் சட்டம் 80சி பிரிவின் கீழ் வரிச்சலுகை பெறக்கூடியதாகும். ஒரு குறிப்பிட்ட திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்துவிட்டால் அதில் இருந்து வெளியே வந்து வேறு திட்டத்தில் முதலீடு செய்வது மிகச் சிரமம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

 

ஏன் நீங்கள் குழந்தை முதலீடு திட்டங்களைத் தேர்வு செய்ய வேண்டும்?

இந்திய பெற்றோர்களுக்குத் தங்களது குழந்தைகளின் கல்வி, திருமணச் செலவு மீது அதிகக் கவலை உண்டு. அதனால் குழந்தைகளுக்கு ஏற்ற திட்டத்தில் எப்படி முதலீடு செய்வது என்பது குறித்த சிந்தனை அவர்களு க்கு அதிகம் உண்டு. தாங்கள் இல்லாத போதும் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு எப்படிப் பாதுகாப்பை அளிப்பது என்பதே இந்திய பெற்றோர்களில் எதிர்பார்ப்பாக உள்ளது. முன்கூட்டியே திட்டமிடுவது உதவிகரமாக இருக்கும்.

மூன்று முக்கிய அம்சங்கள்

முதலில் பாதுகாப்பு. 2வது முதிர்வு தொகை. 3வது வரிப் பயன். இதில் முதலீட்டுக்குப் பாதுகாப்பு என்பதே முக்கியமானது. இதைத் தொடர்ந்து தான் மற்ற இரண்டும் வரும். முன்கூட்டியே முதலீட்டை தொடங்குவதும், தொடர்ந்து முதலீடு செய்வதும் நாகரீகமான தொகுப்புக் கட்டமைப்பை குழந்தைகளுக்கு ஏற்படுத்தும். மியூ ச்சுவல் பண்ட்ஸ்களில் குழந்தைகளுக்கு முதலீடு செய்வது ஏற்புடையதல்ல. அதன் மோசமான முதிர்வு தான் இதற்குக் காரணம்.

பொதுச் சேம நல நிதி, சுகன்யா சம்ரிதி போன்ற திட்டங்களைச் சிறந்த கால அளவை கொண்ட முதலீடு திட்டத்தைத் தேர்வு செய்து குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யலாம் என்பதை மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. இது உயர் வரி பயன் அளிக்கும் திட்டங்களாகும். முதலீடு செய்வதற்கு முன்பு எப்போதும் வரிப் பயன்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

7 Best Child Investment Plans In India

7 Best Child Investment Plans In India
Story first published: Monday, March 12, 2018, 11:35 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns