அதிக லாபம், அதிக வரிச் சேமிப்பு.. முதலீடு செய்யச் சூப்பரான 7 ELSS திட்டங்கள்..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

வருமானவரி சட்டத்தின் பிரிவு 80C ன் கீழ் வரிவிலக்கு பெற ஏராளமான முதலீட்டுத் திட்டங்கள் உள்ளன. பொது வருங்கால வைப்புநிதி (PPF)முதலீடு, பரஸ்பர நிதியின் பங்குகளுடன் இணைந்த சேமிப்புத் திட்டம் (Equity Linked Saving Schemes -ELSS of mutual funds), தேசிய ஓய்வூதிய திட்டம், வங்கி நிரந்தர வைப்பு நிதி மற்றும் தேசிய சேமிப்புப் பத்திரங்கள் ஆகிய அனைத்து முதலீடுகளும் வரிவிலக்கு பெற தகுதியானவை மற்றும் நமது பொருளாதார வளத்தைப் பெருக்கவும், நீண்ட காலசேமிப்பாகவும் இருந்து உதவுவன.

பெரும்பாலான முதலீட்டுத் திட்டங்கள் நீண்ட கால நோக்கத்துடன் கூடிய நிலையான மற்றும் உறுதியான வருவாய் வளர்ச்சியைத் தரக்கூடியவை.

பணவீக்க காலம்

ஓய்வூதிய திட்டம் மற்றும் தேசிய சேமிப்புப் பத்திரங்கள் உறுதியான மற்றும் பாதுகாப்பான நீண்ட கால வருவாயை அளித்தாலும், பணவீக்க காலத்தில் இதன் மூலம் பெற்ற வருவாய் மிகவும் சொற்பமே. பெரும்பாலும் ஒரு இலக்க வளர்ச்சியை இருந்தது.

நீண்ட சேமிப்பு

மேலும், இவ்விரண்டு வகை முதலீட்டுக்கும் கண்டிப்பாகக் குறைந்தபட்ச முதலீட்டுக் காலம் 6 முதல் 15 ஆண்டுகள். இது முதலீட்டாளர்களின் நீண்ட சேமிப்பு பற்றிய பார்வையைக் குறுக்கி முதலீட்டைத் திசைதிருப்பிவிடுகிறது.

முதலீடு செய்யச் சிறந்த ELSS திட்டங்கள்

கிரைசில் மற்றும் வேல்யூ ரிசர்ச் ஆன்லைன் டேட்டா நிறுவனத்தின் தர நிர்ணயம் மற்றும் ஆண்டுச் சொத்து மதிப்பு மேலாண்மையைக் கருத்தில் கொண்டு 2018-19 ஆண்டுக்கான சிறந்த ELSS திட்டங்கள் ஆராயப்பட்டுள்ளன. இரண்டு இலக்க வளர்ச்சியுடன் கூடிய முதலீட்டுக்கான நம்பிக்கையும் எதிர்காலச் சொத்து சேர்த்தல் நோக்கத்தையும் கருத்தில் கொண்டு அனைத்துத் தரவுகளும் தொகுக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் வரிச் சேமிப்பு நிதி (Reliance Tax Saver Fund)

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இந்த நிதியானது நம்பமுடியாத அளவிற்கு 46% வளர்ச்சி அடைந்துள்ளது மற்றும் நல்ல மதிப்பீடும் பெற்றுள்ளது. இந்த நிதியானது பெரிய அளவில் சொத்துக்களைக் கொண்டுள்ளதால் முதலீட்டாளருக்கு நல்ல நிலையான முதலீடு.

ஆக்ஸிஸ் நீண்ட காலப் பங்கு நிதி (Axis long term equity fund)

வகைப்படுத்தப்பட்ட பங்குகளின் தொகுப்பு மற்றும் நீண்ட கால முதலீடு என்பவை மட்டுமே இதில் முதலீடு செய்யும் முன் கவனத்தில் கொள்ளவேண்டியவை.கடந்த வருடத்தில் 39% என்ற விகிதத்தில் லாபம் அளித்துள்ளது.

ஆதித்யா பிர்லா எஸ்.எல் வரிவிலக்கு 96 நிதி (Aditya birla SL Tax relax 96 fund)

கடந்த வருடத்தில் 22% லாபத்தை அடைந்து, கிரைசில் தரவரிசையில் 2ம் இடமும் மற்றும் வேல்யூ ரிசர்ச் ஆன்லைன் 5ஸ்டார் தரமும் வழங்கியுள்ளது.

IDFC வரி அனுகூலமுள்ள ELSS நிதி (IDFC Tax Advantage ELSS Fund)

புதிய வரவான இந்த நிதி சிறப்பாகச் செயல்பட்டுக் கிரைசில் தரவரிசையில் முதல் இடம் பெற்றுள்ளது. கடந்த வருடம் சிறப்பான 55% ஆண்டு லாபத்தை வழங்கியுள்ளது.

டாடா வரி அனுகூலமுள்ள நிதி (Tata Tax Advantage Fund)

இந்த நிதி கடந்த ஐந்து வருடங்களாக 22% லாபத்தைத் தந்து சிறப்பாகச் செயல்படுகிறது. இதில் 3 வருடகாலத்திற்கும் கூட முதலீடு செய்ய இயலும் என்பதால், மற்ற 80C முதலீட்டுத் திட்டங்களைக் காட்டிலும் சிறந்தது.

டி.எஸ்.பி பி.ஆர். வரிவிலக்கு நிதி (DSP BR Tax Saver Fund)

இந்த நிதியானது நடுத்தர மற்றும் நீண்ட கால மூலதன லாபத்தை வழங்குகிறது. இந்த நிறுவனம் வரிவிலக்குடன் கூடிய பத்திரம் மற்றும் பங்குகளில் பிரித்து முதலீடு செய்கிறது.

இன்வெஸ்கோ இந்தியா வரி நிதி (Invesco India Tax Fund)

இவ்வகைப் பரஸ்பர நிதியானது, அதிக வரி சேமிப்புடன் கூடிய மூலதன லாபத்தை வழங்குகிறது. கடந்த 5 வருடத்தில் 21% லாபத்தை வழங்கியுள்ள இது, மேலும் அதிக வளர்ச்சியைத் தர உறுதியளித்துள்ளது.

பங்குகளுடன் இணைந்த சேமிப்புத் திட்டத்தில் (ELSS) முதலீடு செய்தல்

ELSS திட்டத்தில் முதலீடு செய்யப்படும் ரூ.1.5 லட்சம் வரையிலான முதலீட்டுக்கு 80C பிரிவின் கீழ் எளிதில் வரிவிலக்குப் பெறலாம். மேலும் NSC,PPF உடன் ஒப்பிடும் போது இதில் அதிக வருவாய் கிடைக்கும். ஆனாலும், பரஸ்பர நிதியானது சந்தை நிலவரத்தைச் சார்ந்திருப்பதால் சற்று ஆபத்தான முதலீடு தான்.

17% முதல் 26% வரை லாபம்

இந்தத் திட்ட முதலீட்டில் ஆபத்து இருந்தாலும், கடந்த வருடங்களில் 17% முதல் 26% வரை லாபத்தைத் தந்து நன்கு செயல்பட்டிருப்பதால் நம்பி நீண்ட கால முதலீடாகச் செய்யலாம்.

இந்த ELSS முதலீடுகளில் முடக்க (லாக்இன் ) காலம் என்பது 3 வருடம் என்ற குறுகிய ஒன்றே. மேலும் இதில் திரும்பச் செலுத்துதலும், முடித்தலும் மிக எளிதானது.

தவணை முறையிலும் தொடர்ந்து பணம் செலுத்தலாம். இதன்மூலம் ஒரே அடியாக அதிகப் பணத்தை முதலீடு செய்யாமல் மாதாமாதம் செலுத்தலாம். குறைந்தபட்சமாக மாதம் ரூ.500 லிருந்த தவணை முறையில் முதலீடு செய்யலாம்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Best ELSS Schemes To Invest

Best ELSS Schemes To Invest
Story first published: Friday, March 30, 2018, 16:52 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns