உங்களுக்காக உங்கள் பணத்தை வேலை பார்க்க விடுங்க..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

கூட்டுவட்டி என்பது உலகத்தின் எட்டாவது அதிசயம். அதைப் புரிந்துகொள்பவர்கள் லாபமடைவார்கள். மற்றவர்கள் நஷ்டமடைவார்கள் என்றார் ஆல்பர்ட் ஐன்ஸ்டின். உங்களுக்காக உங்கள் பணம் வேலை செய்யவேண்டுமென்றால், ஐன்ஸ்டினின் கூற்றைக் கவனத்தில் கொண்டு உங்கள் பணத்தைத் திறமையாகக் கையாள வேண்டும்.

நீங்கள் கடினமாக உழைத்துச் சேர்த்த பணத்தைத் திறமையாக முதலீடு செய்து அதிக லாபத்தை அறுவடை செய்யப் பொருளாதாரத் திட்டத்தை வகுக்கவேண்டும். மற்றவற்றைக் காட்டிலும் பங்குச்சந்தையில் செய்யும் முதலீடு இந்த அனைத்து வாய்ப்புகளையும் வழங்கும்.

அதுசார்ந்த முதலீட்டுத் திட்டங்களை இங்கே பார்க்கலாம்.

பங்குகள்

பங்கு சந்தையில் முதலீடு என்பது பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதாகும். இதன் மூலம் நிறுவனத்தின் சிறு முதலாளிகளாகவோ/ பங்குதாரராகவோ ஆக முடியும் மற்றும் லாபமோ நஷ்டமோ அது நிறுவனத்தைச் சார்ந்தது.

பங்குகளில் முதலீடு என்பது பங்கு சந்தைகளின் வாயிலாகப் பொது நிறுவனங்களின் பங்குகளை வாங்கவோ விற்கவோ செய்யலாம். எந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டுமோ அதை நன்கு ஆராய்ந்து அதன் பின் தரகர் வாயிலாகப் பங்குகளை வாங்கி விற்கலாம்.

இவ்வகை முதலீடு சந்தை அபாயத்திற்கு உட்பட்டது என்றாலும், பெரும்பாலும் நிறுவனத்தின் செயல்திறனை சார்ந்தது.

 

மியூச்சுவல் ஃபண்டு

மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டுத் திட்டத்தில் பல்வேறு நிறுவனங்களின் பல துறைகளின் பங்குகளை ஒருங்கிணைத்து முதலீடு செய்ய முடியும். சந்தை அபாயம் என்பது பல்வேறு துறை பங்குகளுக்கு இடையே பிரிந்து கிடப்பதால் நல்ல லாபம் கிடைக்கும்.

எப்போதும் மியூச்சுவல் ஃபண்டை நிதி மேலாளர் மேலாண்மை செய்வார். முதலீட்டாளர்களின் சந்தை அபாயத்தைக் கருத்தில் கொண்டு பரஸ்பர நிதியை அதிக ஆபத்து, சராசரி ஆபத்து, குறைந்த ஆபத்து எனப் பிரிக்கப்பட்டுள்ளது.
இவ்வகை முதலீட்டின் முக்கிய நன்மையே, பங்குச்சந்தையுடன் ஒப்பிடும் போது அபாயம் குறைவு மற்றும் முதலீட்டாளர் தனது பணத்தைச் சுதந்திரமாகப் பல்வேறு துறைகளில் தேவையான கால அளவுக்குப் பிரித்து முதலீடு செய்யலாம். இது கட்டமைக்கப்பட்ட முதலீட்டுத் திட்டம் (Systematic investment plan ) எனப்படுகிறது. இதன் மூலம் முதலீட்டாளர் குறைந்த பட்சம் 500ரூ லிருந்து எந்தக் கால அளவிற்கும் பரஸ்பர நிதியாக முதலீடு செய்யலாம்.

ஆயினும், பரஸ்பர நிதியில் கிடைக்கும் லாபம் என்பது பங்குச்சந்தையுடன் ஒப்பிடும் போது குறைவு தான். ஆனால் இதில் முதலீட்டாளர்களுக்கு ஏற்றவாறு பல்வேறு வகை முதலீட்டு முறைகள் உள்ளன.

 

டெரிவேட்டிவ் வர்த்தகம்

இவ்வகை முதலீட்டில் போடப்படும் நிதி ஒப்பந்தத்தின் கீழ் உள்ள சொத்துக்களின் அடிப்படையில் வருவாய் கிடைக்கும் . அது பங்குகள், கம்மாடிடீஸ்,பணம் அல்லது வட்டி விகிதங்களின் வடிவில் இருக்கும்.
யூகத்தின் அடிப்படையில் எதிர்கால மதிப்புகளைக் கணித்துப் பந்தயத்தின் வாயிலாக லாபம் பெறவேண்டும்.

இந்தியாவில் எதிர்கால வர்த்தகம் மற்றும் தேர்வு வர்த்தகம் (Future and Options) என்று இரு வகைப் பரிமாற்ற வர்த்தகங்கள் உள்ளன.

 

எதிர்கால வர்த்தகம்

ஒரு குறிப்பிட்ட சொத்தை எதிர்காலத்தில் இரு தரப்பினருக்கும் இடையே குறிப்பிட்ட தொகைக்குக் குறிப்பிட்ட நாளில் வாங்கவும் விற்கவும் ஒப்பந்தம் செய்வதாகும்.

எதிர்கால ஒப்பந்தத்தை வாங்குபவர் விலை உயரும் என்றும் விற்பவர் விலை குறையும் என்றும் எதிர்பார்த்து ஒப்பந்தம் செய்வர்.

 

தேர்வு ஒப்பந்தம்

இவ்வகை ஒப்பந்தத்தில் , வாங்குபவருக்கு அதற்கான உரிமை வழங்கப்படும். ஆனால் விலையோ தேதியோ குறிப்பிடப்படாது. இதன் மூலம் வாங்கவும் விற்கவும் உரிமை மட்டுமே அளிக்கப்படும்.

சந்தைநிலவரத்தை பொறுத்து வாங்கலாமா விற்கலாமா என்பதை நீங்கள் முடிவுசெய்து கொள்ளலாம். விலை உயரும் என்றால் வாங்கலாம், விலை குறையும் என நம்பினால் விற்கலாம்.

 

முதலீட்டுப் பத்திரங்கள்

அரசாங்க, பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களின் நிதி மற்றும் மூலதன முதலீட்டை திரட்ட பத்திரங்களை வெளியிடுவர். இதன் மூலம் நிரந்திர வருவாய் மற்றும் நிரந்திர வட்டிவிகிதங்கள் கிடைக்கும். அரசாங்கங்களின் பத்திரங்கள் வரிவிலக்கு பெற்றவை மற்றும் தனியாருடன் ஒப்பிடும் போது ஆபத்தும் குறைவு.

நிரந்திர வைப்பு நிதி

இந்தியாவில் நிரந்திர வைப்பு நிதி என்பது பரவலாக அறியப்படும் முதலீட்டுத் திட்டங்களில் ஒன்று. வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு பணத்தை நிரந்திர வைப்பு நிதியாக முதலீடு செய்யலாம். இதில் ஆபத்துக் குறைவு என்றாலும், லாபமும் குறைவு தான்.

நீங்கள் கடினமாக உழைத்துச் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்யும் முன் நன்கு ஆராய்ந்து செயல்பட வேண்டும். இந்தியாவைப் பொறுத்தமட்டில் அதிகப் பெற பங்குசந்தை தான் நல்ல முதலீட்டு முறை . தொழில்முறை நிதி திட்டமிடுபவர் மற்றும் ஆலோசகர்களின் அறிவுரையின் அடிப்படையில் உங்கள் நிதி மற்றும் முதலீட்டை திறமையாகக் கையாளலாம்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to make a money work for you in India

How to make a money work for you in India
Story first published: Tuesday, March 27, 2018, 13:36 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns