ஸ்மார்ட்டாக முதலீடு செய்து கோடி கணக்கில் சம்பாதிக்க அடிப்படை விதிகள் இதுதான்..!!

Written By:
Subscribe to GoodReturns Tamil

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராகவும், நம் காலத்தின் மிகப்பெரிய முதலீட்டாளராகவும், வாரன் பஃபெட், அவரைச் சுற்றியுள்ள பல குறிப்பிடத்தக்க கதைகளைக் கொண்டுள்ளார். 2006 ஆம் ஆண்டில் வாரன் பபெட் தனது 44 பில்லியன் டாலர் தொகையில் 85% நன்கொடையாக அளித்தார் நம்மில் யாருக்கும் அந்த அளவிற்கு நன்கொடை அளிக்க மனம் வராது. எனினும், வாரன் பஃபெட் அதைச் செய்தார் மற்றும் உலகின் பணக்காரர்கள் மத்தியில் தனது நிலையை மீண்டும் அடைந்தார்.

நாம் அனைவருமே கனவுகள் மற்றும் ஆசைகளைக் கொண்டிருக்கிறோம்; ஒரு சிலருக்கு அது ஒரு இடத்தை வாங்குவதாக இருக்கலாம். சிலருக்கு ஒரு கார் வாங்குவதாக இருக்கலாம். இவற்றை வாங்குவதற்கு உங்களிடம் போதிய நிதி இல்லை என்ற நிலை வரும் போது உங்கள் கனவு சுக்கு நூறாகிறது. அதிஷ்டவசமாக, இன்றைய நாட்களில் எல்லாச் சூழ்நிலைக்கும் தீர்வு உண்டு. வேறுபட்ட விதத்தில் உங்கள் பணத்தை முதலீடு செய்வது உங்கள் வருமானத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் அதிவேகமாக அதிகரிக்கும் ஒரு நிச்சயமான வழி ஆகும். இருப்பினும், உங்கள் பணத்தை அதிவேகமாக வளர்ப்பதற்கு ஸ்மார்ட் முதலீடு முக்கியம்.

ஸ்மார்ட் முதலீட்டிற்கான சில முக்கிய அம்சங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

நிதி இலக்குகளைப் பற்றித் தெளிவாக இருக்க வேண்டும்

முதலீடு செய்வதற்கு முன்னர், உங்கள் முதலீட்டிலிருந்து நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்பதைப் பற்றித் தெளிவாக இருக்க வேண்டும்.

உங்கள் நிகர மதிப்பை தெரிந்து கொள்ளுங்கள்

ஒரு நபர் முதலீட்டு செயல்முறையைத் தொடங்குவதற்கு முன்பே நிகரச் சொத்துகள் மற்றும் கடன்களைக் கணக்கிடுவது எப்பொழுதும் முக்கியம். தற்போதைய முதலீடுகளைப் பற்றி நீங்கள் அறிந்திருந்தால், உங்கள் பணத்தை ஞானமாக முதலீடு செய்வது எளிதாக இருக்கும்.

முறையான ஆராய்ச்சி

முறையான ஆராய்ச்சி முக்கியம்; நீங்கள் முதலீடு செய்யும் துறையைப் பற்றிய தெளிவான ஞானம் பெறும்வரை முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

முதலீட்டில் சோதனை முயற்சி வேண்டாம்

எளிமையாகச் சொல்லவேண்டுமானால் , பங்கு சந்தை எங்குச் செல்லும் என்பதை யூகிக்க முயற்சிக்க வேண்டாம். இன்றே முதலீடு செய்து உங்கள் முதலீட்டுத் தொகையை விரிவாக்கவும்.

உங்களுக்குப் புரிந்த வியாபாரத்தில் முதலீடு செய்யுங்கள்

நீங்கள் முதலீடு செய்வதற்குப் புதியவராக இருந்தால், நீங்கள் அறிந்திருக்கும் துறைகளில் முதலீடு செய்வது எப்போதும் பாதுகாப்பானது. இது நல்ல முதலீட்டு முடிவுகளை எடுக்க உதவும்.

உங்கள் போர்ட்ஃபோலியோவை பரவலாக்குங்கள்

பல்வேறு பிரிவுகளில் முதலீடு செய்யுங்கள். இதனால் ஒன்றில் உங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும், மற்றொன்றில் இருந்து கிடைக்கும் லாபத்தால் இந்த நஷ்டம் ஈடு செய்யப்படும்.

உங்கள் போர்ட்ஃபோலியோவை மதிப்பாய்வு செய்யுங்கள்

உங்கள் முதலீடுகளின் செயல்திறனை சரிபார்க்க வழக்கமான இடைவெளியில் எப்போதும் உங்கள் போர்ட்ஃபோலியோ செயல்திறனை கண்காணிக்கவும்.
மேலும், திருமணம் போன்ற சிறப்புச் சந்தர்ப்பங்களில் ஒரு பகுப்பாய்வு தேவைப்படலாம்.

வருவாய் கணக்கீட்டின்போது பணவீக்க காரணிகளை அறிந்திடுங்கள்

சில முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டில் பணவீக்கத்தின் செல்வாக்கைப் புரிந்து கொள்கிறார்கள். உங்கள் வருமானம் மற்றும் முதலீடுகளின் உண்மையான மதிப்பை அறிய பணவீக்கத்தின் காரணியை அறிந்து கொள்ளுங்கள்.

அவசரத் தேவைகளுக்குத் தயாராகுங்கள்

ஒரு சில முதலீடுகள் திரவ நிலையில் இருப்பதை எப்போதும் உறுதி செய்து கொள்ளுங்கள். எந்தவொரு அவசர சூழ்நிலையிலும் இந்தத் திரவ நிலை முதலீடு உங்களுக்குக் கைகொடுக்கும். உங்கள் எல்லா நிதியையும் நீண்ட கால முதலீடாக வைத்துக் கொள்ள வேண்டாம்.

உணர்ச்சிகள் முதலீட்டு முடிவுகளை ஆணையிடக் கூடாது

முதலீடு பற்றிய முடிவுகளை எடுக்கும்போது உணர்சிகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம். முதலீடு தொடர்பான இத்தகைய முடிவுகளை எடுக்கும்போது யதார்த்தமாக மற்றும் அறிவார்ந்ததாக இருங்கள். எப்போதும் உங்கள் எதிர்பார்ப்புகள் யதார்த்தமாக இருக்க வேண்டும். எப்போதும் வானத்தில் கோட்டை கட்ட நினைக்க வேண்டாம். யதார்த்தமில்லாத எதிர்பார்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு உங்கள் நிதி இலக்கை நிர்ணயிக்க வேண்டாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

10 Golden Rules of Invest Smartly

10 Golden Rules of Invest Smartly
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns