இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்வோர் பெரும்பாலானோர் நஷ்டத்தை எதிர்கொண்டு வருகின்றனர். நீங்கள் பங்கு சந்தையில் கில்லாடியாக இல்லாவிட்டாலும், பெரிய நஷ்டங்களை தவிர்க்க 5 எளிய வழிமுறைகளை VinFinCapital நிறுவனத்தின் நிறுவனர் விநாயக் சேத் பரிந்துரைக்கிறார்.
இந்த ஆலோசனைகள் பங்கு சந்தையில் புதிதாக முதலீடு செய்யவோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த விதிமுறைகளை பாலோ செய்தால் உங்களது பணத்தை பாதுகாக்க ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும்.

1.பென்னி பங்குகளை தவிர்க்கவும்:
முதல் டிப்ஸ், பல இடத்தில் நீங்க ஒரு பங்கு சில வருடத்திலோ அல்லது சில மாதத்திலோ ரூ.5 முதல் ரூ.500 வரை உயர்ந்து பல மடங்கு லாபம் கிடைத்ததாக சொல்லி கேள்விப்பட்டு இருப்பீர்கள். இதை பென்னி பங்குகளை (penny stocks) என அழைக்கப்படுகிறது.
இத்தகைய பங்குகளை தவிர்ப்பது முக்கியம் என கூறுகிறார் விநாயக். இத்தகைய பென்னி பங்குகள் பெரும்பாலும் மல்டிபேக்கர்களாக (multibaggers) மாறுவதில்லை, மிகவும் அரிதாக வெகுசில பங்குகள் மட்டுமே அதிகப்படியான லாபத்தை அளிக்கிறது. ஆனால் பலர் பங்கு விலை குறைவாக இருக்கும் காரணத்தால் பலர் இதில் ஈர்க்கப்பட்டு முதலீடு செய்து பணத்தை இழக்கின்றனர்.
2.சரிவில் கண்ணை மூடி முதலீடு செய்யாதீர்கள்:
இரண்டாவது டிப்ஸ், ஒரு பங்கு விலை கீழே சென்றால் அதை கண்ணை மூடிக்கொண்டு ஆவ்ரேஜ் செய்ய முதலீடு செய்யாதீர்கள். ஒரு நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் நிதி நிலை மோசமாக இருக்கும் போது 10 முறை ஆவ்ரேஜ் செய்தாலும் சராசரியாக முதலீடு செய்தாலும் அது உதவாது. ஆவ்ரேஜிங் முதலீடு என்பது ஒரு நிறுவனத்தின் அடிப்படை வலுவாக இருக்கும்போதுதான் உதவும்.
3. ஒரே பங்கில் மொத்த பணத்தையும் போடகூடாது:
மூன்றாவது டிப்ஸ், எந்த பங்கு எப்படி நல்லதாக இருந்தாலும், ஒரே பங்கில் முழு பணத்தையும் முதலீடு செய்ய வேண்டாம். பங்கு முதலீட்டில் Position sizing மிகவும் முக்கியம். ஒரு தவறான முதலீடு உங்கள் முழு முதலீட்டையும் சேதப்படுத்தக் கூடாது. எனவே உங்க பணத்தை பல துறையில், பல பங்குகளில் பிரித்து சிறிய சிறிய அளவில் முதலீடு செய்வது பாதுகாப்பானது.
4. நஷ்டத்தை தவறாமல் பதிவு செய்யுங்கள்:
நான்காவது டிப்ஸ், ஒரு பங்கின் நிலை தலைகீழாக மாறிவிட்டால் அதை தொடர்ந்து வைத்துக்கொண்டு நஷ்டத்தின் அளவை அதிகரிக்காதீர்கள். சில நேரத்தில் இத்தகைய பங்குகளில் ஏற்படும் நஷ்டத்தை ஏற்றுக்கொண்டு உங்கள் போர்ட்போலியோவில் இருந்து நீக்குவது நல்லது. மோசமான பங்கை நம்பிக்கையோடு பிடித்திருப்பது மிகவும் தவறான விஷயம்.
5. நஷ்டம் ஏற்படுத்தும் நிறுவனங்களை தவிர்க்கவும்:
ஐந்தாவது டிப்ஸ், நஷ்டத்தை அறிவிக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டாம். சில நிறுவனங்கள் திரும்பி வெற்றி பெறலாம், ஆனால் பெரும்பாலானவை தொடர்ந்து இழப்பை மட்டுமே ஏற்படுத்தும். இதை ஆரம்பக்கட்டத்திலேயே சுதாரித்துக்கொண்டால் பெரும் இழப்பை தவிர்க்க முடியும். ஒரு பெரிய வெற்றியை தவறவிட்டாலும் சரி, 5 சேதப்படுத்தும் நிறுவனங்களை தவிர்ப்பது நல்லது.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

ஒரே நாளில் ரூ.12 லட்சம் கோடி அவுட் – ரத்தக் களறியான பங்குச்சந்தை-முதலீட்டாளர்களுக்கு பேரிடி?



Click it and Unblock the Notifications