வரி சலுகையுள்ள அசத்தலான அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்.. எது எது? எவ்வளவு சலுகை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய காலகட்டத்தில் பல சேமிப்பு திட்டங்கள் இருந்தாலும், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் தான்.

அதிலும் வரி சலுகையுடன் உள்ள பாதுகாப்பான சேமிப்பு திட்டங்கள் என்றால் வேண்டாம் என்றா கூற முடியும்? அந்த வகையில் சிறந்த சேமிப்பு திட்டங்களைத் தான் இன்று பார்க்கவிருக்கிறோம்.

அந்த வகையில் இன்று சிறுசேமிப்பு திட்டங்கள் என்றழைக்கப்படும் பிபிஎஃப், மூத்த குடிமக்களுக்களுக்கான சேமிப்பு திட்டம், சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம், அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டம், அஞ்சல் அலுவலக டைம் டெபாசிட் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை பார்க்க இருக்கிறோம்.

அஞ்சலக சேமிப்பு திட்டம்

அஞ்சலக சேமிப்பு திட்டம்

அஞ்சலகங்களிலும் வங்கிகளில் உள்ளதை போலவே சேமிப்புக் கணக்குகள் உள்ளன. அதோடு இன்றைய காலகட்டத்தில் வட்டி விகிதம் என்பது வங்கிகளில் பெரியளவில் இல்லை. இந்த சேமிப்பு கணக்குகளில் செக் மற்றும் செக் அல்லாத வசதிகளும் உண்டு

செக் வசதி தேவையில்லை எனில் உங்களது சேமிப்பு கணக்கில் 50 ரூபாய் இருந்தால் கூட போதும், இதே செக் வசதி வேண்டும் என்றால், 500 ரூபாய் குறைந்தபட்ச இருப்பு தொகை தேவைப்படும்.

நாமினேஷன் வசதியுடன் ஒரு நபர் ஒரு கிளையில் ஒரு கணக்கினை மட்டுமே தொடங்க முடியும். ஒரு சேமிப்பு கணக்கினை ஆக்டிவ்வாக வைத்திருக்க ஒரு கணக்கில் வைப்பு தொகை அல்லது பணத்தினை திரும்ப பெறுதல் வேண்டும். இந்த சேமிப்பு கணக்கில் 80TTA கீழ் வரி சலுகை உண்டு.

 

போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்
 

போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்

போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்டுகளில் 6.7% வரை வட்டி கிடைக்கின்றது. இது மிக பாதுகாப்பான ஒரு முதலீடாகவும் சேமிப்பாகவும் பார்க்கப்படுகிறது. இங்கு 1, 2, 3, 5 வருடங்கள் வரை டைம் டெபாசிட் உண்டு. 5 வருட டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது பிரிவு 80சி கீழ் வரி விலக்கு உண்டு. அதே போல இந்த திட்டங்களுக்கு ஒவ்வொரு காலாண்டுக்கு ஒரு முறையும் அரசு வட்டி விகிதத்தினை மாற்றியமைக்கிறது. எனினும் வருடத்திற்கு ஒருமுறை தான்
வாடிக்கையாளர்களுக்கு பலன் வழங்கப்படுகிறது. இதில் குறைந்தபட்ச டெபாசிட் 1000 ரூபாயாகும். அதிகபட்ச வரம்பு என்பது கிடையாது. இதில் 1.5 லட்சம் ரூபாய் வரையில் சலுகை அளிக்கப்படுகிறது.

 

 

போஸ்ட் ஆபிஸ் - மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்

போஸ்ட் ஆபிஸ் - மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்

அஞ்சலகத்தில் உள்ள முக்கிய சேமிப்பு திட்டங்களில் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டமும் (SCSS ) ஒன்று. இது அரசின் திட்டம் என்பதால் மிக பாதுகாப்பானதாக பார்க்கப்படுகிறது. 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மிகச்சிறந்த சேமிப்பு திட்டமாகும். இந்த சேமிப்புத் திட்டத்தினை ஓய்வூதிய சலுகைகள் கிடைத்த ஒரு மாதத்திற்குள் கணக்கு திறக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை உண்டு. இந்த சேமிப்பு திட்டத்தில் சேர ஒரு நபர் 55 வயது அல்லது 60 வயது, அதற்கு மேற்பட்டவராக இருக்கவேண்டும். 50 வயதுக்கு மேற்பட்ட ஓய்வுபெற்ற பாதுகாப்பு பணியாளார்களும் இந்த சேமிப்பு திட்டத்தில் இணைய தகுதியானவர்கள் தான்.எனினும் இந்த சேமிப்பு கணக்கில் HUF & NRI-கள் இணைய முடியாது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்சம் 15 லட்சம் ரூபாய் வரையில் இருக்கலாம். எனினும் பணியில் இருந்து ஓய்வுபெற்றபோது பெறப்பட்ட தொகைக்கு மேல் இருக்கக் கூடாது.இதற்கு காலாண்டுக்கு ஒரு முறை அரசு வட்டியை மாற்றியமைக்கிறது. கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 7.40% ஆக இருந்தது. கடந்த 2015 வரையில் இந்த திட்டத்தில்வட்டி விகிதம் 9% மேலாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் சற்று குறைந்துள்ளது. இந்த SCSS திட்டத்தின் முதிர்வுகாலம் 5 ஆண்டுகள் தான். இருப்பினும் இந்த திட்டத்தினை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். மூத்த குடி மக்களுக்கான இந்த சேமிப்பு திட்டத்தில் வரி சலுகைகளும் உண்டு. இது 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் வரை வரி விலக்கு கோரலாம். இந்த திட்டத்தில் வட்டி விகிதம் 40,000 ரூபாய்க்கு மேல் செல்லும்போது, டிடிஎஸ் உண்டு.

பொது வருங்கால வைப்பு நிதி

பொது வருங்கால வைப்பு நிதி

அஞ்சலகத்தில் உள்ள மற்றொரு சிறந்த சேமிப்பு திட்டங்களில் ஒன்று பொது வருங்கால வைப்பு நிதி. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 வருடம் ஆகும். எனினும் முதிர்வு காலத்திற்கு பிறகும் 5 ஆண்டுகள் தொடர்ந்து கொள்ளலாம். இதற்காக நீங்கள் கணக்கு வைத்துள்ள அஞ்சலகத்திலேயே தக்க பார்மினை கொடுத்து நீட்டித்துக் கொள்ளலாம். இது முதுமை காலத்திற்கு ஏற்ற ஒரு சரியான முதலீட்டு திட்டமாகும். இந்தியரான எந்தவொரு தனிப்பட்ட நபரும் இந்த வைப்பு நிதி கணக்கினை துவங்க தகுதியானவர் தான். பொது வருங்கால வைப்பு நிதி கணக்கில் வருடத்திற்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் செலுத்திக் கொள்ளலாம், அதிகபட்சமாக 1.5 லட்சம் வரையில் செலுத்திக் கொள்ளலாம். ஒரு ஆண்டில் அதிகபட்சம் 12 பங்களிப்புகள் இருக்கலாம். அதாவது 12 தவணைகளாக உங்களது தொகையை நீங்கள் செலுத்திக் கொள்ளலாம். இந்த பிபிஎஃப் திட்டத்தில் 80சியின் கீழ் வரிச்சலுகை உண்டு. இந்த வரி சலுகை கிடைக்கும் லாபத்திற்கு தான் உண்டு. செய்யும் டெபாசிட் தொகைக்கு இல்லை.

குழந்தைகளுக்கான சுகன்யா சமிரிதி யோஜனா

குழந்தைகளுக்கான சுகன்யா சமிரிதி யோஜனா

குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக மைனர் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது. ஒரு குழந்தையின் பிறப்பு முதல் 10 வயது வரை எந்த நேரத்திலும், இந்த சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தினை தொடங்க முடியும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 21 ஆண்டுகளாகும். அரசின் பெண் குழந்தைகளுக்கான இந்த திட்டத்தில், பெண் குழந்தைகள் மட்டுமே கணக்கு வைத்திருக்க தகுதியுடையவர்கள். இந்த கணக்கினை தொடங்க பெண் குழந்தையின் வயது ஆதாரம் கட்டாயமாகும். ஒரு பெற்றோர் இந்த திட்டத்தின்
மூலம் இரண்டு கணக்குகளை துவங்கிக் கொள்ள முடியும். இந்தியாவில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகமும், சேமிப்பு வங்கி வேலையினை செய்கின்றன. இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்ச வைப்பு தொகையாக 1000 ரூபாய் தேவைப்படுகிறது. இதே ஒரு வருடத்தில் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சுகன்யா சம்ரிதி திட்டத்தின் கீழ் செய்யப்படும் டெபாசிட் தொகைக்கு வருமான வரி சட்டத்தின் கீழ் 80சி-ன் படி அதிகபட்சமான 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது. ஆக சேமிப்புடன் கூடுதலாக வரிச்சலுகையும் உண்டு.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Best post office tax savings schemes with higher returns

Post office savings schemes.. Best post office tax savings schemes with higher returns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X