தீபாவளி போனஸை எப்படி பயனுள்ளதாக மாற்றலாம்.. எதிர்காலத்திற்கு ஏற்ற திட்டம் எது?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீபாவளி சீசன் களைகட்டத் தொடங்கி விட்டது. மக்கள் புத்தாடைகளையும், இனிப்பு பலகாரங்களையும் வாங்க தொடங்கி விட்டனர். பட்டாசு விற்பனையும் தூள் கிளப்பி வருகின்றது.

சொல்லப்போனால் கொரோனாவுக்கு பின்பாக கோலாகலமாக கொண்டாடப்படும் தீபாவளியாக இது பார்க்கப்படுகிறது.

இந்த சமயத்தில் பலரும் தாங்கள் வாங்கியிருக்கும் போனஸ் தொகையினை, தங்கமாக வாங்கியிருக்கலாம். எனினும் உங்களது போனஸ் தொகையினை பயனுள்ள வகையில் எப்படி மாற்றுவது? எதில் முதலீடு செய்வது வாருங்கள் பார்க்கலாம்.

பிரிட்டனுக்கு இது மோசமான காலம் தான்.. டாய்ச் வங்கியின் முக்கிய முடிவு.. ஊழியர்கள் கவலை! பிரிட்டனுக்கு இது மோசமான காலம் தான்.. டாய்ச் வங்கியின் முக்கிய முடிவு.. ஊழியர்கள் கவலை!

போனஸ் மீத தொகை?

போனஸ் மீத தொகை?

பல துறைகளை சார்ந்த தனியார் மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் பலரும் தங்களது போனஸினை பெற்றிருக்கலாம். பலரும் இனி தான் பெறலாம். இந்த போனஸினை பயனுள்ள வகையில் எப்படி பாதுகாப்பான முதலீடாக செய்வது வாருங்கள் பார்க்கலாம்.

பலரும் இதில் பெரும் தொகையை ஷாப்பிங்கிற்காக செலவு செய்ய நினைக்கலாம். எனினும் ஷாப்பிங் செய்தது போக மீத தொகையை எப்படி முதலீடு செய்வது. வாருங்கள் பார்க்கலாம்.

வீட்டுக் கடன் தொகையை செலுத்தலாம்

வீட்டுக் கடன் தொகையை செலுத்தலாம்

தொடர்ந்து ரெப்போ விகிதம் அதிகரித்து விகிதம் அதிகரித்து வரும் நிலையில், வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமானது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மாத மாதம் செலுத்தும் தவணை தொகையானது அதிகரித்துள்ளது. இது இன்னும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமையாகவும் மாறியுள்ளது.

சுமை குறையலாம்
 

சுமை குறையலாம்

இதன் காரணமாக நீங்கள் வாங்கிய போனஸ் தொகையானது ஒரு பெரிய தொகையாக இருந்தால், அதனை உங்களது வீட்டுக் கடன் சுமையை குறைக்க பயன்படுத்தலாம். இது ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக அமையலாம். முன் கூட்டியே உங்களது வீட்டுக் கடனினை பகுதி செலுத்தும்போது உங்களது சுமை குறையலாம்.

நிரந்தர வருமானம் தரும் திட்டம்

நிரந்தர வருமானம் தரும் திட்டம்

மீடியம் டெர்மில் உங்களது நிதி இலக்குகள் 3- 5 ஆண்டுகள் வரை முதலீட்டு எல்லைகளை கொண்டவையாகும். குறுகிய கால முதலீட்டு எல்லைகள் சந்தை ஏற்ற இறக்கங்கள் மற்றும் திருத்தங்களில் இருந்து இழப்புகளை மீட்டெடுக்க குறைந்த நேரத்தை அனுமதிக்கிறது. முதலீட்டாளர்கள் அதிக வருமானம் ஈட்டுவதை காட்டிலும் , குறுகிய காலத்தில் உங்கள் முதலீடு பாதுகாப்பாக இருக்குமா? வருமானம் நிலையானதாக இருக்குமா? என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ஆக குறுகிய கால இலக்குகளை அடைய உங்களது கார்ப்பஸினை நிர்ணயித்துக் கொள்ளலாம். இதற்காக இந்த போனஸ் தொகையினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

எதில் முதலீடு - ஷார்ட் டெர்ம்

எதில் முதலீடு - ஷார்ட் டெர்ம்

முதலீட்டாளர்கள் தற்போது வங்கிகளில் வட்டி விகிதம் அதிகரித்து வரும் நிலையில், உங்களது இலக்குகளுக்கு ஏற்ப டெபாசிட் திட்டங்களை தேர்வு செய்யலாம். இதில் 7% மேலாக எதில் வட்டி விகிதம் அதிகம் என்பதை திட்டமிடலாம். இது உங்கள் முதலீடும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும். மாத மாதம் ஒரு வருமானத்தையும் கொடுக்கும்.

நீண்டகால நிதி இலக்குகள்

நீண்டகால நிதி இலக்குகள்

நீண்டகால முதலீடு என்றாலே பெரும்பாலும் பங்கு சந்தை முதலீடுகளைத் தான் நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். பங்கு சந்தையில் அனுபவம் இல்லாதவர்கள் மியூச்சுவல் ஃபண்டுகளிலும் முதலீடு செய்து கொள்ளலாம். இது அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு ஏற்ப முதலீடு செய்து கொள்ளலாம். நீண்டகால நோக்கிற்கு ஈக்விட்டிகள் ஒரு நல்ல முதலீட்டு திட்டமாக பார்க்கப்படுகிறது.

பங்கு சந்தை Vs மியூச்சுவல் ஃபண்டுகள்

பங்கு சந்தை Vs மியூச்சுவல் ஃபண்டுகள்

பங்கு சந்தை, மியூச்சுவல் ஃபண்டுகள் என்பதை தாண்டி ELSS திட்டத்தில் முதலீடு செய்து கொள்ளலாம். இதில் வரிச்சலுகையும் கிடைக்கும். இதில் பங்கு சந்தையிலும் மறைமுகமாக மியூச்சுவல் ஃபண்டுகளிலும் முதலீடு செய்து கொள்ளலாம். இதில் லாக் இன் பீரியர்டும் உண்டு. இதில் எஸ் ஐ பி மூலமாகவும் முதலீடு செய்து கொள்ளலாம்.

இன்சூரன்ஸ்

இன்சூரன்ஸ்

ஆயுள் காப்பீடு என்பது குடும்பத் தலைவர் திடீரென துரதிஷ்டவசமாக மரணம் ஏற்பட்டால், அவரை சார்ந்திருப்பவர்களுக்கு மாற்று வருமானத்தினை வழங்கும். ஒரு குடும்பத் தலைவர்களின் வருமானத்தில் 10 - 15 மடங்குக்கு சமமான தொகையாக இருக்க வேண்டும். அதனை விட குறைவாக இருந்தால் இன்சூரன்ஸ் இல்லை எனலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Diwali 2022: How to make Diwali bonus useful?

Many peoples think of spending their bonus money on shopping. However, how do you invest the remaining amount after shopping?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X