அஞ்சலக திட்டத்தை விட வட்டி அதிகம்.. யாருக்கு ஏற்ற முதலீடு.. எவ்வளவு வட்டி?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதலீடு செய்யும் பணத்துக்கு போதிய பாதுகாப்பு என்பதோடு வருமானமும் இருக்க வேண்டும் என்று பலரும் நினைக்கலாம். அந்த அடிப்படை எண்ணத்தினாலேயே வங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்கள் என்பது இன்று வரையில் மக்கள் மத்தியில் பிரபலமான திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.

 

குறிப்பாக மூத்த குடி மக்கள் மத்தியில் இது போன்ற திட்டங்களில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

பிக்சட் டெபாசிட் திட்டங்களில் பொதுவாக ஆபத்து என்பது எல்லை. நிரந்தர வருமானம் தரும் ஒரு திட்டம். எல்லாவற்றுக்கும் மேலாக மூத்த குடி மக்களுக்கு ஏற்றதொரு திட்டம். இது வயதான காலகட்டத்தில் அவர்களுக்கு நிதி ரீதியாக மிக பாதுகாப்பானதொரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.

கவர்ச்சிகரமான திட்டம்

கவர்ச்சிகரமான திட்டம்

பிக்சட் டெபாசிட் திட்டங்களை பொறுத்தவரையில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தினை உயர்த்தும்போது, வங்கிகளும் வட்டி விகிதத்தினை உயர்த்துகின்றன. சமீபத்திய காலமாக ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தினை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதம் என்பது அதிகமாகவே உள்ளது. ஆக தற்போதைய காலகட்டத்தில் இன்னும் கவர்ச்சிகரமான திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.

இன்சூரன்ஸ் பாதுகாப்பு உண்டு

இன்சூரன்ஸ் பாதுகாப்பு உண்டு

அவற்றோடு பிக்சட் டெபாசிட் திட்டங்களை கூடுதல் பாதுகாப்பாக இன்சூரன்ஸ் திட்டங்களும் உள்ளதால், மக்கள் மத்தியில் மிக நம்பிக்கையான ஒன்றாகவும் உள்ளது. ஆக முதலீட்டு எந்த பங்கமும் இருக்காது என்பது உறுதியாகிறது.

பிக்சட் டெபாசிட் திட்டங்களை பொருத்தவரையில் பாதுகாப்பான திட்டங்களாக இருந்தாலும், வட்டி விகிதம் என்பது வங்கிக்கு வங்கி மாறுபடுகின்றது. ஆக எந்த வங்கியில் வட்டி அதிகம். எது சிறந்தது வாருங்கள் பார்க்கலாம்.

அஞ்சலகத்தின் பிக்சட் டெபாசிட் திட்டம்
 

அஞ்சலகத்தின் பிக்சட் டெபாசிட் திட்டம்

அஞ்சலகத்தின் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வட்டி விகிதம் ஒரு வருட திட்டத்திற்கு வட்டி விகிதம் 5.5% ஆகும். இதே இரண்டு ஆண்டு திட்டத்திற்கு 5.7%மும், 3 ஆண்டு திட்டத்திற்கு 5.8%மும், 5 வருடத் திட்டத்திற்கு 6.7%மும் கிடைக்கிறது. இந்த வட்டி விகிதமானது அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஒரே விகிதமாகும்.

எஸ்பிஐ

எஸ்பிஐ

எஸ் பி ஐ- யின் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வட்டி விகிதம் மூத்த குடிமக்களுக்கு 6.9% வரையில் கிடைக்கிறது. 2 - 3 ஆண்டுக்கு வடி விகிதம் 6.7% ஆகவும், 5 - 10 ஆண்டுக்கு 6.9% ஆகவும் கிடைக்கிறது.

இதே எஸ்பிஐ-யின் சிறப்பு திட்டமான வீ கேர் திட்டத்தில் 5 - 10 ஆண்டுகளுக்கு 7.2% வட்டி கிடைக்கிறது.

பாங்க ஆப் பரோடா

பாங்க ஆப் பரோடா

பாங்க் ஆப் பரோடாவின் வட்டி விகிதம் மூத்த குடிமக்களுக்கு 6.9% வரையில் கிடைக்கிறது. 2 வருடத்திற்கும் மேலான திட்டங்களுக்கு 6.75% ஆகவும், 5 - 10 ஆண்டுகளுக்கு 6.9% ஆகவும் கிடைக்கிறது. இது எஸ்பிஐ உடன் ஒப்பிடும்போது சற்று குறைவு தான்.

பஞ்சாப் நேஷனல் வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வட்டி விகிதம் 600 நாட்களுக்கு 7.5% வட்டி கிடைக்கிற்டஹு. இதே 1 - 2 வருடத்திற்கு 6.8%மும், 2 -3 ஆண்டுகளுக்கு 6.75%மும், 5 - 10 ஆண்டுகளுக்கு 6.9%மும் வட்டி கிடைக்கிறது. இதே 80 வயதுக்கு மேலான சூப்பர் சீனியர்களுக்கு 7.8%மும் கொடுக்கிறது.

கனரா வங்கி

கனரா வங்கி

கனரா வங்கியில் மூத்த குடிமக்களுக்கு 666 நாட்களுக்கு 7.5% வட்டி கிடைகிறது. 1 - 3 ஆண்டுகளுக்கு 6.75% கொடுக்கிறது. இதே 3 - 10 ஆண்டுகளுக்கு 7% வட்டியும் கொடுக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

good news! get big returns than post office on FD from these banks

Which bank has the highest interest rate on fixed deposit schemes? How much interest is paid on fixed deposit at post office?
Story first published: Sunday, November 20, 2022, 22:58 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X