மாதம் ரூ.3000 முதலீடு மூலம் எப்படி ரூ.1 கோடி சாத்தியம்... அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக பங்கு சந்தைகளில் நீண்டகால முதலீடு என்பது பாதுகாப்பான ஒரு முதலீட்டு திட்டமாக பார்க்கப்படுகிறது. என்னதான் லாபம் கொடுத்தாலும், பங்கு சந்தை முதலீடு என்பது ரிஸ்கியானது. எனக்கு அதில் விருப்பமில்லை. ஆக பங்கு சந்தைக்கு நிகரான லாபம் கொடுக்க கூடிய ஒரு முதலீட்டு திட்டம் உள்ளதா? அப்படி இருந்தது என்றால் என்ன?

 

இது குறித்து குட் ரிட்டர்ன் ரீடர் ஒருவர் கேட்டிருந்த விஷயம். அஞ்சலகத்தின் பிபிஎஃப், எஸ் எஸ் ஓய் திட்டங்களில் நான் முதலீடு செய்துள்ளேன். ஆனால் அது மட்டும் போதாது. என்னுடைய கார்ப்பஸ் இலக்கு 1 கோடி ரூபாய்.

1,300% ஏற்றத்தில் 3 கிரிப்டோகரன்சிகள்.. பிட்காயின், எதரை விடுங்க..இது வேற லெவல்!

அப்படியிருக்கும் பட்சத்தில் நான் இன்னும் எதில் முதலீடு செய்யலாம், எனக்கு பங்கு சந்தையில் அனுபவமில்லை. ஆக எது சிறந்தது ? என கேட்டிருந்தார்.

எது சிறந்தது?

எது சிறந்தது?

அஞ்சலக திட்டங்களை பொறுத்தவரையில் நிலையான வருமானம் தரக்கூடிய ஒரு நம்பிகையான முதலீடாக இருந்தாலும், முழுக்க முழுக்க சந்தை அபாயம் இல்லாத ஒரு முதலீடாக பார்க்கப்படுகிறது. எனினும் இதில் வருமானம் என்பது குறைவு என்பதால், கூடுதலாக அவரின் இலக்கினை அடைய பங்கு சந்தை, மியூச்சுவல் ஃபண்டுகள் என்பது சிறந்த ஆப்சனாக இருக்கும். அதோடு பணவீக்கமும் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயமாக உள்ளது.

எஸ்ஐபி பெஸ்ட்

எஸ்ஐபி பெஸ்ட்

எனினும் அவருக்கு பங்கு சந்தையில் அனுபவமில்லை எனும்போது எஸ் ஐ பி நல்ல வாய்ப்பாக இருக்கும் என நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர். எஸ்ஐபி-யினை பொறுத்தவரையில், நம் வருமானத்திற்கு ஏற்றவாறு முதலீட்டினை செய்து கொள்ள முடியும். அதேபோல எதிர்காலத்தில் மிகப்பெரிய இலக்கினையும் அடைய சரியான வழியாக இருக்கும். பொதுவாக பல நிபுணர்களும் பரிந்துரைப்பது இது தான். ஆக பங்கு சந்தையில் கிடைக்கும் லாபத்தினை அடைய மியூச்சுவல் ஃபண்டுகளே சிறந்த மாற்றாகவும் பார்க்கப்படுகிறது.

இதனை தீர்மானித்துக் கொள்ளுங்கள்
 

இதனை தீர்மானித்துக் கொள்ளுங்கள்

இந்த முதலீட்டிலும் எஸ் ஐ பி ஆக மாத மாதம் முதலீடு செய்ய போகிறீர்களா? அப்படி முதலீடு செய்யும் போது அது உங்களது கணக்கில் இருந்து மாத மாதம் டெபிட் ஆகும் வகையில் செய்யலாமா? அல்லது எப்படி முதலீடு செய்யப் போகின்றோம் என்பதையும் முன் கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளலாம்.

எங்கு தொடங்குவது?

எங்கு தொடங்குவது?

இதனை நான் எங்கு சென்று தொடங்குவது ? இன்றைய காலகட்டத்தில் இதனை மியூச்சுவல் ஃபண்ட் தரகர்கள், பங்குதரர்களே மியூச்சுவல் பண்ட் தரகர்களாகவும் செயல்படுகின்றனர். அப்படியும் இல்லாவிட்டால் ஆன்லைனினும் செய்து கொள்ளலாம். சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பல முக்கிய நகரங்களில் தங்களது அலுவலகங்களை வைத்துள்ளனர். ஆக அவர்களிடம் சென்றும் தொடங்கிக் கொள்ளலாம்.

மாதம் ரூ.3000 முதலீடு

மாதம் ரூ.3000 முதலீடு

மாதம் 3,000 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இதனை 30 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், 13% வருவாய் என கணக்கீடு செய்யலாம். அப்படி செய்யும்போது உங்களது கார்ப்பஸ் 1,32,61,941 ரூபாயாக இருக்கும். நீங்கள் 30 ஆண்டுகளாக முதலீடு செய்த தொகை 10,80,000 ரூபாயாக இருக்கும், உங்களது வருமானம் 1,21,81,941 ரூபாயாகும். மொத்த கார்பஸ் 1 கோடி ரூபாய்க்கும் மேல்.

மாதம் ரூ.1000 முதலீடு

மாதம் ரூ.1000 முதலீடு

இதே மாத முதலீடு - ரூ.1000

முதலீட்டு காலம் - 30 ஆண்டுகள்

வருமானம் - 13%

30 வருடம் கழித்து - உங்களது மொத்த கார்ப்பஸ் - 44,20,647 ரூபாயாகும்.

நீங்கள் முதலீடு செய்த தொகை 3,60,000 ரூபாயாகும்.

வருமானம் - 40,60,647 ரூபாயாகும்.

இதில் தொகை சிறிது வேறுபட்டாலும் கூட்டு வட்டி கணக்கீடு என்பதால், இந்த வேறுபாடு உள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல மியூச்சுவல் ஃபண்டுகளிலும் ரிஸ்க் என்பது உள்ளது. அதனை கருத்தில் கொள்வது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How can Rs 1 crore be possible with an investment of Rs 3000 per month ?

How can Rs 1 crore be possible with an investment of Rs 3000 per month ?/மாதம் ரூ.3000 முதலீடு மூலம் எப்படி ரூ.1 கோடி சாத்தியம்... அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X