45 வயதாகிறது.. இதுவரை எதுவும் சேமிக்கவில்லை.. மாதம் ரூ.3000 முதலீடு.. எதில் செய்யலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் அடுத்து என்ன நடக்குமோ என்ற நிலையே இருந்து வருகின்றது. இதற்கிடையில் எதிர்காலம் குறித்த கேள்வியும் வந்துள்ளது.

 

இன்று வேலைக்கு செல்கிறோம். ஏதோ ஒன்று செய்து சமாளிக்கிறோம். ஆனால் வயதான காலகட்டத்தில் என்ன செய்வது? ஆக அதற்காக இன்றே முதலீடு செய்யலாம். ஆனால் இந்த சமயத்தில் எல்லோருக்கு எழும் கேள்வி? எதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்.? பங்கு சந்தையில் நல்ல லாபம் கிடைக்கும் தான், ஆனால் ரிஸ்க் அதிகம் என கூறப்படுகிறது.

ஒரு முதலீட்டாளர் நம்மிடம் கேட்ட கேள்வி இது? எனக்கு 45 வயதாகிறது இதுவரையில் நான் எதிலும் முதலீடு செய்ததில்லை. எனக்கு பங்கு சந்தை அனுபவமும் கிடையாது. கொரோனா காலம் வேறு? ஆக நான் எதில் முதலீடு செய்யலாம்? என்ற கேள்வி குறித்து நிபுணர்களின் கருத்து என்ன வாருங்கள் பார்க்கலாம்.

ஈக்விட்டி முதலீடுகள்

ஈக்விட்டி முதலீடுகள்

உண்மையில் எதிர்கால நலன் கருதி நல்ல லாபம் வேண்டுமெனில், அதுவும் நீண்டகால முதலீடு எனும்போது ஈக்விட்டி முதலீடு தான் சிறந்தது என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆரம்பத்தில் லாபமோ நஷ்டமோ நீங்களே முயற்சி செய்து முதலீடு செய்ய வேண்டும். அப்போது தான் உங்களுக்கு ஒரு அனுபவம் கிடைக்கும். இல்லையேல் உங்களால் எதுவும் கற்றுக் கொள்ள இயலாமலே போய்விடும்.

ரிஸ்கானது

ரிஸ்கானது

ஆக சிறந்த வருமானத்திற்கு சிறந்த ஆப்சன் பங்கு சந்தை என்று கூறுகின்றனர். எனினும் முதலீட்டாளர் மாதம் 3,000 ரூபாய் மட்டுமே முதலீடு செய்ய முடியும் என்பதாலும், பங்கு சந்தையிலும் அனுபவம் இல்லை என்பதாலும் பங்கு சந்தை முதலீடு என்பது சற்று ரிஸ்கான விஷயமே.

வேறு எதில் முதலீடு செய்யலாம்?
 

வேறு எதில் முதலீடு செய்யலாம்?

அரசு பத்திரங்கள், டெஃப்ட் பண்டுகள், லிக்விட் ஃபண்டுகள், எஸ்.ஐ.பி திட்டங்கள், அரசின் பொது வருங்கால வைப்பு நிதி, அஞ்சலக தொடர் வைப்பு நிதி திட்டம், தங்க பத்திரம் அல்லது ஃபண்டுகள் என, ரிஸ்க் குறைந்த முதலீடுகளை தேர்தெடுக்கலாம். மேற்கண்ட இவற்றில் லாபம் குறைவாக இருந்தாலும் ரிஸ்க்கும் குறைவு.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு

உதாரணத்திற்கு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறோம் என வைத்துக் கொண்டால், மாதம் 3,000 என்றாலும் 15 ஆண்டுகளுக்கு 5,40,000 ரூபாய் நீங்கள் முதலீடு செய்திருப்பீர்கள். வருடத்திற்கு சுமார் 15% வருமானம் கிடைக்கிறது என வைத்துக் கொண்டால், 15 ஆண்டுகள் கழித்து 18,73,507 ரூபாய் உங்களிடம் இருக்கும்.

பிபிஎஃப் முதலீடு

பிபிஎஃப் முதலீடு

அப்படி எல்லாம் ரிஸ்க் வேண்டாம் என நினைத்தால் பிபிஎஃப்பினை தேர்தெடுக்கலாம். மேற்கண்ட அதே 36,000 ரூபாயினை பிபிஎஃபில் முதலீடு செய்யும்போது 15 ஆண்டுகள் கழித்து, இன்றைய நிலவரப்படி வட்டியுடன் சேர்த்து 9,76,370 ரூபாய் உங்களுக்கு கிடைக்கும். தற்போது வட்டி விகிதம் 7.1% ஆகும். இந்த வட்டிவிகிதம் காலாண்டுக்கு ஒரு முறை அரசாங்கத்தால், நிலவரத்திற்கு ஏற்ப மாற்றம் செய்யப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

I am a 45 year old with zero financial planning? I want to invest Rs.3000 every month? where to invest money?

Investment updates.. I am a 45 year old with zero financial planning? I want to invest Rs.3000 every month? Where to invest money?
Story first published: Tuesday, May 11, 2021, 17:10 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X