மாதம் ரூ.2000 போதும்.. சாமானிய மக்களுக்கு ஏற்ற அசத்தலான அஞ்சலக திட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் பல முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், அஞ்சலக திட்டங்களுக்கு என்றுமே தனி இடம் உண்டு. இது முதலீட்டுக்கு பங்கமில்லாத, பாதுகாப்பான கணிசமான நிரந்தர வருவாய் தரக்கூடிய முதலீட்டு திட்டங்களாக உள்ளன.

 

பொதுவாக பலருக்கும் இருக்கும் ஆசை என்றால் அது, இளமை காலத்தில் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. வயதான காலத்திலாவது நன்றாக இருக்க வேண்டும் என்பது தான். அதற்கு உதவும் சிறந்த ஆப்சனே சேமிப்புகள் தான்.

அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது அஞ்சலகத்தின் RD எனப்படும் தொடர் வைப்பு நிதி திட்டம் பற்றித் தான். இந்த திட்டமானது மக்களிடையே சேமிப்பினை ஊக்குவிக்கும் விதமாக கொண்டு வரப்பட்ட ஒரு திட்டமாகும். இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் தங்களால் இயன்ற தொகையினை டெபாசிட் செய்து கொள்ளலாம்.

சிறப்பான முதலீட்டு தளமாகும் கோயம்புத்தூர்.. இனி எல்லாம் ஏற்றம் தான்..!

தொடர் வைப்பு நிதி

தொடர் வைப்பு நிதி

அஞ்சலகத்தின் தொடர் வைப்பு நிதி திட்டம். இந்த திட்டத்தில் முன்னணி பொதுத்துறை வங்கிகளை விட வட்டி விகிதம் அதிகமாகும். அதோடு இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 100 ரூபாயில் இருந்து டெபாசிட் செய்ய முடியும். அதிக பட்ச தொகை என்று எதுவும் இல்லை. இதனால் சாமானிய மக்களும் சேமிக்க ஏற்ற ஒரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.

சாமானியர்களுக்கு ஏற்றது

சாமானியர்களுக்கு ஏற்றது

இந்த திட்டம் மாத சம்பளதாரர்களுக்கும், சாமானிய மக்களுக்கும் ஏற்ற ஒரு முதலீட்டு திட்டமாகும். ஏனெனில் தங்களுடைய சம்பளத்தில், வருவாயில் சிறு தொகையை இந்த ஆர்டி திட்டத்தில் போட்டு வைக்கலாம். இதன் மூலம் நல்ல முதிர்வு தொகையினையும் பெற முடியும்.

 வட்டி விகித மாற்றம்
 

வட்டி விகித மாற்றம்

இந்த திட்டத்தில் வங்கிகளோடு ஒப்பிடும்போது, வட்டி விகிதம் அதிகம் என்பதால். சிறந்த வருவய் தரும் திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. அதோடு அஞ்சலகத்தில் டெபாசிட் செய்வதும் மிக எளிது. மேலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு திட்டம் என்பதால் மிக பாதுகாப்பானதாகவும் பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப காலாண்டுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்படுகிறது.

தற்போதைய வட்டி நிலவரம்

தற்போதைய வட்டி நிலவரம்

தற்போது இந்த திட்டத்திற்கு வட்டி விகிதம் என்பது 5.8% ஆகும். இது தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் தொடர்ந்து பல காலாண்டுகளாகவே வட்டி விகிதம் மாற்றியமைக்கப்படாமல் உள்ளது. இந்த திட்டத்தில் நாமினியை நியமித்துக் கொள்ளும் வசதியும் உண்டு. அதேபோல மற்ற அஞ்சலக திட்டங்களை போலவும், இந்த தொடர் வைப்பு நிதி கணக்கினை இந்தியாவின் வேறு இடத்திற்கும் மாற்றிக் கொள்ளும் வசதியும் உண்டு.

ஜாயிண்ட் அக்கவுண்ட்

ஜாயிண்ட் அக்கவுண்ட்

ஒருவர் எத்தனை கணக்குகளை வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம். அதேபோல இருவர் இணைந்தும் தொடங்கிக் கொள்ளலாம். ஏற்கனவே தொடங்கிய தனி நபர் அக்கவுண்டினையும் ஜாயிண்ட் அக்கவுண்டாக மாற்றிக் கொள்ளலாம். குழந்தைகள் பெயரிலும் பாதுகாவலர் உதவியுடன் கணக்கினை தொடங்கிக் கொள்ளலாம். 10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் தாங்களே இந்த கணக்கினை நிர்வகிக்கலாம்

அபராதம் உண்டா?

அபராதம் உண்டா?

ஒரு வேளை உங்களால் பணம் கட்ட முடியவில்லை எனும்போது, அடுத்த முறை கட்டும்போது அபாரதத்துடன் செலுத்த வேண்டியிருக்கும். அபராத தொகையானது, ஒவ்வொரு 5 ரூபாய்க்கும் 5 பைசா வீதம் இருக்கும். அதாவது 100 ரூபாய்க்கு 5 ரூபாயாகும். எனினும் தொடர்ந்து 4 மாதங்களுக்கு மேலாக பணம் செலுத்தவில்லை எனில். உங்களது ஆர்டி கணக்கு நிறுத்தப்படும். அப்படி நிறுத்தப்படும் கணக்கை, 2 மாதங்களுக்கு அந்த கணக்கினை புதுப்பிக்கவில்லை எனில் அதனை தொடர முடியாது.

சில சலுகைகள் உண்டு?

சில சலுகைகள் உண்டு?

தொடர் வைப்பு நிதி திட்டத்தில் குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கான வைப்பு தொகையை முன் கூட்டியே செலுத்தினால் தள்ளுபடி சலுகையினை பெறலாம். குறிப்பாக 6 மாதங்கள் முதல் 11 மாதங்கள் வரையிலான தவணைகளை முன் கூட்டியே செலுத்தினால், ஒவ்வொரு 10 ரூபாய்க்கும் 1 ரூபாய் தள்ளுபடி பெறலாம். இதே 12 மாதங்களுக்கான தொகையினை முன் கூட்டியே செலுத்தினால், ஒவ்வொரு 10 ரூபாய்க்கும் 4 ரூபாய் தள்ளுபடியாக கிடைக்கும். 12 டொபாசிட்டுகளுக்கு பிறகு டெபாசிட் செய்யப்படும் ஒவ்வொரு 10 ரூபாய்க்கும் 1 ரூபாய் தள்ளுபடியாக கிடைக்கும்.

முதிர்வுக்கு முன்பே பணம் எடுக்கலாமா?

முதிர்வுக்கு முன்பே பணம் எடுக்கலாமா?

அஞ்சலகத்தின் இந்த தொடர் வைப்பு நிதி கணக்கில் இடையில் பணத்தினை பெற முடியுமா? என்றால் நிச்சயம் முடியும். இது சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படுகிறது. ஒரு வருடத்திற்கு பிறகு நிலுவையில் 50% அனுமதிக்கப்படுகிறது. இதன் முதிர்வு காலம் 5 வருடங்களாகும். அதன் பிறகும் தொடர விரும்பினால் விண்ணப்பத்தினை கொடுத்து தொடரலாம். இவ்வாறு நீட்டிக்கப்படும் கணக்கினை எப்போது வேண்டுமானாலும் முடித்துக் கொள்ளலாம்.

மாதம் ரூ.2000 முதலீடு

மாதம் ரூ.2000 முதலீடு

மாதம் 2000 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம்.

வட்டி விகிதம் - 5.8%

முதிர்வு காலம் - 5 ஆண்டுகள்

மொத்த முதலீடு - ரூ.1,20,000

வட்டி விகிதம் - ரூ.19,395

மொத்த முதிர்வு திகை - ரூ.1,39,395

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

invest Rs.2000 every month and get thousands of rupees in this postal scheme

invest Rs.2000 every month and get thousands of rupees in this postal scheme/மாதம் ரூ.2000 போதும்.. சாமானிய மக்களுக்கு ஏற்ற அசத்தலான திட்டம்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X